விசிக தலைவர் திருமாவளவனை இந்து மதத்திலிருந்து விலக்கி வைக்கும் நிகழ்வு நடைபெற உள்ளதாக அச்சிடப்பட்டுள்ள பத்திரிக்கை இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்து கடவுள் சிலைகள் குறித்து அண்மையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறிய கருத்துகள் தமிழ்நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து அவருக்கு பல இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்தச் சூழலில், இந்து மக்கள் கட்சி சார்பில், கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோயிலில் நவம்பர் 26 […]
