Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

பெண் பார்க்க சென்றவர்கள்… எதிரே வந்த சரக்கு ஆட்டோ… விசாரணையில் போலீஸ்…!!

சரக்கு ஆட்டோ இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள விக்கிரமங்கலம் கிராமத்தில் வசித்து வந்தவர் கோவிந்தராஜ். இவரும் அதே பகுதியில் வசிக்கும் மரியதாஸ் என்பவரும் பெண் பார்ப்பதற்காக இருசக்கர வாகனத்தில் சுத்தமல்லி வரை சென்று பின்னர் அங்கிருந்து வீடு திரும்பும்போது துனிச்சிக்குட்டை ஏரிக்கு அருகே வந்து கொண்டிருக்கும் போது எதிர்பாராதவிதமாக எதிரே வந்த சரக்கு ஆட்டோ மீது இருசக்கர வாகனம் மோதியுள்ளது. இதில் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்திருந்த […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

உரசிய மின்கம்பிகள்… மளமளவென பரவிய தீ… அரியலூரில் பரபரப்பு…!!

மின் கம்பி உரசியதால் கரும்பு பயிர்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள காரைபாக்கம் கிராமத்தில் கரும்புகள் பயிரிடப்பட்டிருந்தது. இந்த கரும்பு பயிரிடப்பட்ட இடத்தின் மேலே மின் கம்பிகள் தாழ்வாக இருந்துள்ளது. இதனால் ஒன்றோடொன்று மின்கம்பிகள் உரசியதில் தீப்பொறி ஏற்பட்டு அது வயல்களின் மீது விழுந்து தீப்பற்றியுள்ளது. இதனை யாரும் கவனிக்காத காரணத்தினால் தீ மளமளவென அருகிலிருந்த வயல்களுக்கும் பரவியுள்ளது. இந்த தீ விபத்தில் சுமார் 8 ஏக்கர் கரும்பு பயிர்கள் எரிந்து நாசமாகியுள்ளது. இதுகுறித்து […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

இன்னைக்கும் எங்ககூட இல்ல… மனைவி செய்த செயல்… தவிக்கும் பிள்ளைகள்…!!

மூன்று குழந்தைகளை விட்டுவிட்டு தாய் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள மீன்சுருட்டி கிராமத்தில் வெங்கட்ராமன்-விஜயா என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகின்றது. இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் இவர்களுடைய திருமண நாளன்று வெங்கட்ராமன் வெளியூருக்கு சென்று விட்டதால் மனமுடைந்த விஜயா தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

சீக்கிரம் சரி பண்ணி கொடுங்க… ரொம்ப கஷ்டமா இருக்கு… கோரிக்கை விடுத்த பொதுமக்கள்…!!

சாலையில் உள்ள பள்ளத்தை சீரமைத்து தரக்கோரி பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள நெல்லித்தோப்பு கிராமத்தின் அருகில் விக்கிரவாண்டி-தஞ்சாவூர் சாலை விரிவாக்கம் பணி நடைபெற்று வருகின்றது. மேலும் இந்த சாலையில் மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெறுவதால் அதன் அருகில் பஸ் நிறுத்தத்தை ஒட்டியுள்ள சாலை வழியாக அனைத்து வாகனங்களும் சென்று வருகிறது. இந்த சாலை மிகவும் பழுதடைந்து இருப்பதால் அந்த வழியாக செல்லும் கனரக வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்னர். […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

சொத்துக்காக இப்படியா பண்ணுவாங்க… வாலிபருக்கு அரிவாள் வெட்டு… அரியலூரில் பரபரப்பு…!!

சொத்து தகராறில் வாலிபரை அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள மதனுர் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயசங்கர். இவர் அரசு பஸ் கண்டக்டராக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று சாலையோரத்தில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது அருகில் சென்று அவர்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அதன்பின் அவர் தனது கையில் வைத்திருந்த அரிவாளை கொண்டு அப்பகுதியில் நின்று கொண்டிருந்த கலைவாணன் என்பவரை தலையில் வெட்டியுள்ளார். மேலும் கத்தியை எடுத்து அவரை பலமாக குத்தியுள்ளார். இதனை […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

திரௌபதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்… மேலதாளத்துடன் எடுத்து வரப்பட்ட கலசம்… திரளாக கலந்துகொண்ட பக்தர்கள்…!!

திரௌபதி அம்மன் கோவிலில் நேற்று வெகு விமர்சையாக கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள திரௌபதி அம்மன் கோவில் சீரமைக்கப்பட்டு நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. இதில் நேற்று அதிகாலையில் யாகசாலை பூஜைகள் மற்றும் சிறப்பு யாகங்கள் நடத்தப்பட்ட பின்னர் கலசங்களுக்கு பூஜை செய்யப்பட்டு மேளதாளத்துடன் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்பின் கோபுரத்தில் கலசத்தை கோபுரத்தில் ஏற்றி பின் புனித நீரை ஊற்றி பூஜை செய்த கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

இலவசமா மாடு கொடுத்திங்க… கொட்டகை கட்டி கொடுங்க… போராட்டத்தில் பொதுமக்கள்…!!

மாட்டுக் கொட்டகை கட்டித் தரும்படி சாலையோரத்தில் கிராம மக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள பையூர் கிராமத்தில் இலவச மாடு வழங்கும் திட்டத்தில் மாடுகளை பெற்ற பயனாளிகளுக்கு மாட்டுக்கொட்டகை அமைத்து தரக்கோரி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் விண்ணப்பம் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் 50க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு இதுவரை மாட்டுக்கொட்டகை கட்ட அனுமதி வழங்கப்படவில்லை.மேலும் ஊராட்சி மன்ற தலைவருக்கு நெருக்கமானவர்களுக்கு மட்டுமே மாட்டு கொட்டகை அமைத்து தரப்பட்டுள்ளது. இதனை குற்றஞ்சாட்டி அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

எங்க ஊருக்கு ஒரு பஸ் தான் இருக்கு… நடவடிக்கை எடுங்க… கோரிக்கை விடுத்த பொதுமக்கள்…!!

பேருந்து பழுதாகி மாணவர்கள் பாதி வழியில் இறக்கி விடப்பட்டுள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள திருமானூர், திருவையாறு ஆகிய பகுதிகளில் ஒரு அரசு பேருந்து மட்டுமே கடந்த சில ஆண்டுகளாக இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த பேருந்தும் திருமானூர் பகுதியில் வந்து கொண்டிருக்கும் போது திடீரென பழுதாகி நின்றுள்ளது. அதனால்  பேருந்து செல்லாது என கண்டக்டர் கூறியுள்ளார். இதனால் மாணவிகள் அங்கிருந்து சுமார் பத்து கிலோமீட்டர் தூரத்திற்கு பள்ளிகளுக்கு நடந்து செள்ளவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருமானூர் காவல்துறையினர் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

உரசிய மின்கம்பிகள்… மளமளவென பரவிய தீ… வேதனையில் விவசாயி…!!

திடீரென பற்றிய தீயில் கரும்பு வயல் எரிந்து நாசமானதால் விவசாயி வேதனை அடைந்துள்ளார். அரியலூர் மாவட்டத்தில் உள்ள சிங்கராயன் கட்டளை கிராமத்தில் சின்னமணி என்பவர் தனக்குரிய நிலத்தில் கரும்பு பயிரிட்டுள்ளார். இந்நிலையில் நேற்று மாலை திடீரென கரும்பு தோட்டத்தில் தீ பற்றி எரிய தொடங்கியுள்ளது. அந்த சமயத்தில் காற்று வீசியதால் தீ வேகமாக பரவியுள்ளது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் உடனே தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தகவலின் பேரில் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

திருடிட்டு போனதே தப்பு… எதுக்கு எரிச்சிட்டு போனாங்க… மர்மநபர்களுக்கு வலைவீசிய போலீஸ்…!!

வீட்டிலுள்ள நகை, பணம் உள்ளிட்டவற்றை திருடிவிட்டு சொத்து பத்திரங்கள் பட்டுப்புடவைகள் ஆகியவைகள் எரித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள தாதம்பேட்டை கிராமத்தில் பொன்னம்பலம் என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று கோவிலில் நடைபெறும் விசேஷத்திற்கு கலந்துகொள்வதற்காக வீட்டிலிருந்து சென்றுள்ளார். பிறகு இரவு வீடு திரும்பியுள்ளார். ஆனால் வீட்டின் கதவு உள்புறமாக தாழிடப்பட்டிருந்தது. இதனை கண்ட அவர் அதிர்ச்சி அடைந்து பின்புறமாக வீட்டிற்குள் சென்றுள்ளார். அவர்கள் வீட்டிற்குள் செல்லும் போது வீட்டுக்குள் புகை மண்டலமாக இருந்துள்ளது. அவர் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

தீப்பற்றி எறிந்த வைக்கோல்… சாலையில் இறக்கி சென்ற டிரைவர்… அதிர்ச்சியில் பொதுமக்கள்…!!

டிராக்டர் டிரைவர் தீப்பற்றி எரிந்த வைக்கோலை சாலையில் இறக்கி விட்டு சென்ற சம்பவம் பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள நடுவலூர் சாலையில் டிராக்டரில் வைக்கோல் ஏற்றி கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த டிராக்டர் சாலையில் வந்து கொண்டிருக்கும்போது திடீரென டிராக்டரில் வைக்கப்பட்டிருந்த வைக்கோல் தீப்பற்றி எரிய தொடங்கியுள்ளது. இதனை கவனித்த டிராக்டரின் பின்னால் வந்த வாகன ஓட்டிகள் டிராக்டர் டிரைவரிடம் வைக்கோல் தீப்பற்றி எரிந்து கொண்டிருப்பதாக கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த டிரைவர் டிராக்டரை விட்டு […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

செல்போன் போனா இப்படி பண்ணனுமா… பிளஸ் 1 மாணவனின் செயல்… பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

செல்போன் காணாமல் போனதால் பெற்றோர்களுக்கு பயந்து 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள செம்பியக்குடி கிராமத்தில் வசித்து வருபவர் சிவகுமார். இவருடைய மகன் நிஷாந்த் என்பவர் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். இவர் நேற்று முன்தினம் விளையாடுவதற்காக தனது செல்போனை எடுத்துக்கொண்டு நண்பர்களுடன் வெளியே சென்றுள்ளார். அப்போது செல்போனில் சார்ஜ் இல்லாததால் நண்பருடைய வீட்டில் சார்ஜ் போட்டு விட்டு […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

நல்லா மாட்டிக்கிட்டாங்க… விசாரணை பண்ணுங்க… கோரிக்கை விடுத்த பொதுமக்கள்…!!

இலவச வேட்டி சேலைகள் கொண்டு தலைவர்களின் சிலைகள் மூடப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள நிலையில்அரியலூர் மாவட்டத்தில் பஸ் நிலையம் அருகில் உள்ள அரசியல் தலைவர்களின் சிலைகளை துணிகளை கொண்டு மூடி வைத்துள்ளனர். இந்த சிலைகளை மூடுவதற்கு தமிழக அரசு பொங்கல் பண்டிகைக்காக கொடுக்கப்பட்ட இலவச வேட்டி சேலைகள் உபயோகிக்கப்பட்டுள்ளதை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனால் பொதுமக்களுக்கு இலவச வேட்டி சேலை வழங்கும் திட்டத்தில் ஏதேனும் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

நான் அவளை காதலிச்சேன்… அதான் அப்படி பண்ணிட்டேன்… அதிரடி நடவடிக்கையில் காவல்துறையினர்…!!

மாணவியை கொலை செய்ய முயன்ற ஆசிரியர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள உடையார்பாளையம் கிராமத்தில் வசித்து வருபவர் 18 வயதுடைய மாணவி. இவர் தற்போது அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் விடுதியில் தங்கி தோட்டக்கலை பட்டயப் படிப்பு முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் நேற்று மாலை கல்லூரிக்கு அருகில் உள்ள ஏ.டி.எம்-யில் பணம் எடுப்பதற்காக கல்லூரிக்கு வெளியே வந்துள்ளார். அந்த சமயத்தில் அவர் சாலையில் நடந்து கொண்டிருக்கும்போது இருசக்கர வாகனத்தில் வந்த […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

காலேஜிக்கு தான் போனா… என்ன நடந்துச்சின்னு தெரியல… தீவிர விசாரணையில் போலீஸ்…!!

கல்லூரிக்கு சென்ற மாணவி வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள கீழ குடியிருப்பு கிராமத்தில் வசித்து வருபவர் பன்னீர்செல்வம். இவருடைய மகளான வாசுகி என்பவர் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்சி மூன்றாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் சம்பவம் நடந்த அன்று கல்லூரிக்கு சென்ற வாசுகி மாலை வீடு திரும்பவில்லை. இதனால் அவரது பெற்றோர் அதிர்ச்சியடைந்து ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

மடக்கி பிடிக்கப்பட்ட 2 லாரிகள்… சிக்கியது 3520 குக்கர்கள்… அதிரடி சோதனையில் பறக்கும் படை அதிகாரிகள்…!!

தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய சோதனையில் இரண்டு லாரிகளில் கொண்டுவரப்பட்ட 3520 குக்கர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் கண்காணிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. அதிலும் குறிப்பாக பறக்கும் படை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பறக்கும் படை அதிகாரி சரவணன் தலைமையிலான காவல்துறையினர் அரியலூர் மாவட்டத்திலுள்ள சமத்துவபுரம் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருக்கும் போது இரண்டு லாரிகள் தஞ்சை நோக்கி […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு … விழிப்புணர்வு கொடுத்த மகளிர் காவல்துறையினர்… துண்டு பிரசுரம் விநியோகம்…!!

குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையம் சார்பாக நடத்தப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் உத்தரவின் பேரில் அனைத்து மகளிர் காவல் நிலையம் சார்பில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நடத்தப்பட்டுள்ளது. இந்த விழிப்புணர்வில் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் துறையினர் கலந்துகொண்டு பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து எடுத்துரைத்தனர். மேலும் பாலியல் குற்றங்களில் இருந்து பெண் குழந்தைகளை பாதுகாப்பதற்கான வழிமுறைகளையும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

கோவில் உண்டியல் உடைப்பு… சி.சி.டிவி-யில் பதிவான காட்சிகள்… ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்…!!

கிராமத்தில் உள்ள கோவிலில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை அடித்த நபரை நபரை நபரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள அடிக்காமலை கிராமத்தில் அய்யனார் மதுரைவீரன் கோவில் ஒன்று உள்ளது. இங்கு கடந்த 16 ஆம் தேதி பூசாரி பூஜையை முடித்தபின் கோவிலை பூட்டி விட்டு சென்றுள்ளார். அதன்பின் மறுநாள் காலை வந்து பார்த்த போது கோவில் கதவில் பூட்டியிருந்த பூட்டு உடைந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்பு உள்ளே […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

இத பண்ணி கொடுங்க… ரொம்ப கஷ்டமா இருக்கு… கோரிக்கை விடுத்த பொதுமக்கள்…!!

தரைப்பாலத்தை சீரமைக்க தர கோரி பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள குண்டவெளி கிராமத்தில் இருந்து வெத்தியார்வெட்டு கிராமத்திற்கு செல்ல தார் சாலை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் உள்ள கிராம மக்கள் அனைவரும் அதிகமாக அந்த சாலையை பயன்படுத்தி வந்துள்ளனர். இதற்கிடையே ஏரியில் இருந்து தண்ணீர் செல்வதற்காக அந்த சாலையின் குறுக்கே குழாய்கள் பதிக்கப்பட்டு தரைப்பாலம் ஒன்று அமைக்கப்பட்டது. அதன்பின் வழக்கமாக சாலையை பொதுமக்கள் பயன்படுத்தி வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த மாதம் பெய்த கனமழையால் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

அது அரசுக்கு சொந்தமானது… இப்படி பன்னிட்டாங்க… மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு…!!

அரசு மதுபான கடை ஊழியர்களை தாக்கி விட்டு பணத்தை பறித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள கரவெட்டிகுடிக்காடு கிராமத்தில் அரசு மதுபான கடை ஒன்று உள்ளது. இந்த கடையில் விற்பனையாளராக வேல்முருகன் மற்றும் மேற்பார்வையாளராக பரமசிவம் ஆகியோர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் நேற்று முன்தினம் விற்பனையை முடித்துவிட்டு  வசூலான 1 லட்சத்து 6 ஆயிரம் ரூபாயை பையில் எடுத்து கொண்டு கடையை அடைத்துவிட்டு இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அந்த சமயத்தில் மூன்று […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

மாநில அளவிலான போட்டி… 7 பிரிவிலும் வெல்லப்பட்ட பரிசு… திறமையை வெளிபடுத்திய அரசு பள்ளி மாணவர்கள்…!!

மாநில அளவிலான கராத்தே போட்டியில் சிலம்பூர் அரசு பள்ளி மாணவ மாணவிகள் 11 பேர் முதல் மற்றும் இரண்டாவது இடங்களை பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள சிலம்பூரில் இருக்கும் அரசு பள்ளி மாணவ மாணவிகள் மாநில அளவிலான கராத்தே போட்டியில் கலந்து கொண்டுள்ளனர். இந்த போட்டி தஞ்சை மாவட்டத்தில் வைத்து நடைபெற்றுள்ளது. இந்த போட்டியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 400க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டுள்ளனர். அதில் குறிப்பாக ஏழு […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

கெட்டுப்போனது இருக்கா… திடீரென்று கடைக்குள் நுழைந்த அதிகாரிகள்… சோதனையில் சிக்கினால் நோட்டீஸ்…!!

உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் இறைச்சி மற்றும் மீன் கடைகளில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள தா.பழூர் பகுதியில் செயல்பட்டு வரும் இறைச்சி மற்றும் மீன் கடைகளில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சசிகுமார், பொன்ராஜ், ஜஸ்டின் அமல்ராஜ், ஊராட்சி மன்ற தலைவர் கதிர்வேல், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேஷ் ஆகியோர் அடங்கிய குழு ஆய்வு மேற்கொண்டுள்ளனர். இந்த ஆய்வில் நோயுற்ற கோழிகள் மற்றும் ஆடுகள் வெட்டி விற்கப்படுகிறதா அல்லது கெட்டுப்போன […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

சீக்கிரமா மாத்தி கொடுங்க… ரொம்ப கஷ்டமா இருக்கு… கோரிக்கை விடுத்த பொதுமக்கள்…!!

சாலைப் பணிகள் கிடப்பில் போடப்பட்டதால் அவ்வழியாக வரும் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள நடுவலூர் கிராமத்திலிருக்கும் ஏரிக்கரை பகுதியில் சேதமடைந்த சாலை ஒன்று உள்ளது. அதனை சீரமைப்பதற்காக கடந்த 5 மாதங்களுக்கு முன்பு மனு கொடுக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில் பேரில் சாலைகளை சீரமைப்பதற்காக ஜல்லிக் கற்களை சாலையில் பரப்பியுள்ளனர். ஆனால் அதன்பின் எந்தவித பணியும் மேற்கொள்ளப்படாமல் சாலை அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் ஜல்லிக் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

முதல்ல இங்க தான் போகணும்… புது மண தம்பதிகளின் முடிவு… குவியும் பாராட்டுகள்…!!

திருமணம் முடிந்த கையோடு புதுமண தம்பதிகள் இணைந்து மரக்கன்று நட்ட சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்தது. அரியலூர் மாவட்டத்திலுள்ள நல்லாம்பாளையம் பகுதியில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓவிய ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு அதே பகுதியில் வசிக்கும் பத்மபிரியா என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்கள் இருவரும் திருமணம் முடிந்த உடனேயே நல்லம்பாளையம் அரசு பள்ளிக்கு சென்று அங்குள்ள மைதானத்தை சுற்றி மரக்கன்றுகளை நட்டனர். அதோடு இந்த புது மணத்தம்பதிகள் அனைத்து மரக்கன்றுகளையும் இனிவரும் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

நோட்டமிட்ட திருடன்… யாருமில்லாத நேரத்தில் கைவரிசை… மோப்ப நாயுடன் போலீஸ் ஆய்வு…!!

ஆசிரியை வீட்டின் பூட்டை உடைத்து பணத்தையும் நகையும் திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள ஜெயங்கொண்டம் பகுதியில் இருக்கும் செங்குந்தபுரம் கிராமத்தில் கொளஞ்சியப்பன்-ஹேமலதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சபரீஸ்வரன் என்ற ஒரு மகன் உள்ளான். ஹேமலதா அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஹேமலதா கொளஞ்சியப்பன் இருவரும் மருத்துவ பரிசோதனைக்காக தஞ்சாவூருக்கு சென்றுள்ளனர். சபரீஸ்வரன் தனது சித்தப்பா வீட்டிற்கு […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

உடல் நல பாதிப்பு…. மகனுக்கும் வாழ்க்கை அமையல…. தாய் எடுத்த விபரீத முடிவு….!!

பெண் எலி மருந்தை தின்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள பூண்டி கிராமத்தைச் சார்ந்தவர் சௌந்தர்ராஜன்-மங்கையர்கரசி தம்பதியினர். மங்கையர்கரசி கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். மங்கையர்கரசியின் மகனுக்கு வரன் பார்த்து வரும் நிலையில் வரன் ஏதும் சரியாக அமையவில்லை என்பதால் அவர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். கடந்த 26ஆம் தேதி அன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் எலி மருந்தை […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

நாட்டிலுள்ள அவலநிலை…. பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு…. துண்டு பிரசுரங்கள் கொடுத்து விழிப்புணர்வு….!!

பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம் பகுதியில் இருக்கும் அனைத்து மகளிர் காவல் நிலையத்தின் முன்பு குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்தும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்தும் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளையும் பெண்களையும் பாதுகாப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் கூறப்பட்டுள்ளது. மேலும் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

விதிமுறைகளை ஒழுங்காக கடைப்பிடிங்க…. பாதுகாப்பு ரொம்ப முக்கியம்…. பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம்….!!

சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டது. சாலை பாதுகாப்பு வார விழா அரியலூரில் உள்ள நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பாக நேற்று கொண்டாடப்பட்டது. இந்த விழாவிற்கு கோட்ட பொறியாளர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். இந்த விழாவில் அவர் பேசிய போது “வாகனங்கள் ஓட்டுபவர்கள் போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். எச்சரிக்கை பலகைகளை கவனித்து வாகனங்களை ஓட்ட வேண்டும். மேலும் அரியலூரை விபத்துக்கள் இல்லாத மாவட்டமாக மாற்ற வேண்டும்.” எனவும் கூறினார். […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

பதுக்கி வைத்து விற்பனை…. காவல்துறையின் நடவடிக்கை…. மூன்று பேர் அதிரடி கைது….!!

மது பாட்டிலை பதுக்கி வைத்து விற்பனை செய்த 3 பேரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள உடையார்பாளையம் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் மாசிலாமணி தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் உடையாற்பாளையத்தை சேர்ந்த குமார், பிளிச்சிகுலி கிராமத்தைச் சார்ந்த ரெங்கநாதன், இடையாரை சார்ந்த ஷங்கர், ஆகிய மூன்று பேரும் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து உடையார்பாளையம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து 3 பேரையும் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

அய்யோ… என் சங்கிலி போச்சே… கதறும் மூதாட்டி… மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு…!!

மூதாட்டியிடம் 6 பவுன் சங்கிலியை மர்மநபர் பறித்த சம்பவம் செந்துறை அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள ஈச்சங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் மீனாட்சி. இவர் தன் வீட்டிலிருந்து வெளியே வந்து தெருவில் நடந்து கொண்டிருக்கும் போது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள் மூதாட்டியின் கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் சங்கிலியை  பறித்துக்கொண்டு தப்பி சென்று விட்டனர். இச்சம்பவம் குறித்து மீனாட்சி தளவாய் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் தளவாய் காவல்துறையினர் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

அமைதியா போயிட்டு இருந்த மின்வாரிய ஊழியர்…. எதிரே வந்த பேருந்து…. எதிர்பாராமல் ஏற்பட்ட பெரும் இழப்பு….!!

மின்வாரிய ஊழியர் பஸ் மோதி பலியான சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் கிராமத்தைச் சார்ந்தவர் நல்லப்பன். இவர் மின்வாரியத்தில் மின்பாதை ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று மாலை கீழப்பழுவூர் பஸ் நிலையம் அருகில் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த பஸ் அவரது வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயம் அடைந்த நல்லபனை அருகில் உள்ளவர்கள் சிகிச்சைக்காக அரியலூர் அரசு […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

வீட்டில் யாரும் இல்லாத போது…! இந்திரா எடுத்த வீபரீத முடிவு… அரியலூரில் பரபரப்பு …!!

தூக்குப் போட்டு பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஜெயங்கொண்டம் அருகே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள ஜெயங்கொண்டம் பகுதியில் கீழத் தெருவை சேர்ந்தவர் சண்முகம் இந்திரா தம்பதியினர். சண்முகம் கூலித்தொழிலாளி வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு 4 வயது பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் இந்திரா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அக்கம் பக்கத்தினர் இந்திராவை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் வழியிலேயே அவர் உயிர் பிரிந்தது. […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

பணத்துக்காக நடந்த இரவு சம்பவம் …! அம்பலப்படுத்திய ஆடுகள்… கொத்தாக சிக்கிய கும்பல் …!!

மீன்சுருட்டி பகுதியில் ஆடுகளை திருட முயற்சித்த 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள மீன்சுருட்டி பகுதியில் இருக்கும் வீரசோழபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் வீரபாண்டியன். இவர் சரக்கு ஆட்டோ டிரைவராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் இரவில் தனது அக்காவான கமலியின் வீட்டில் வீர பாண்டியனும் அவரது தாயாரும் தூங்கிக் கொண்டிருந்த போது நள்ளிரவில் ஆடுகளின் சத்தம் கேட்டுள்ளது. இதனால் அவர்கள் எழுந்து பார்த்த போது மர்ம நபர்கள் ஆடுகளை திருடி கொண்டிருந்தது தெரியவந்தது. ஆடு […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

பக்கத்துல விளையாடிய குழந்தை…! சிறிது நேரத்தில் பரபரப்பு… அரியலூரில் துயர சம்பவம் …!!

செந்துரை பகுதியின் அருகே விளையாடிக் கொண்டிருந்த குழந்தை குட்டையில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள செந்துறை பகுதியில் இருக்கும் ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயராமன்-ஜான்சிராணி தம்பதியர். இவர்களுக்கு ஹன்சிகா, தனவர்ஷிணி என இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் சமாதி குட்டை ஏரிக்கரையில் குணபிரியன், ராஜபிரகதி, தனவர்ஷிணி, ஹன்சிகா ஆகிய நான்கு குழந்தைகளும் விளையாடிக் கொண்டிருந்தனர். இதனையடுத்து குணபிரியன், ஹன்சிகா, ராஜபிரகதி ஆகிய மூன்று குழந்தைகளும் ஏரியில் தவறி விழுந்தனர். இதனை கண்ட […]

Categories
அரியலூர்

கள்ளத்தனமா செய்த வேலை…. ரோந்து பணியில் போலீசார்…. பெண் உட்பட 4 பேர் கைது…!!

மது விற்பனை செய்த 4 பேரை உடையார்பாளையம் அருகே காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள உடையார்பள்ளம் என்ற பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் மாசிலாமணி மற்றும் பிற காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அந்த சமயத்தில் தத்தனூர் கிராமங்களைச் சேர்ந்த உலகநாதன், சுப்பிரமணியன், கோவிந்தசாமி, வெண்ணிலா ஆகிய நால்வரும் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து இவர்கள் நால்வரையும் காவல்துறையினர் கைது செய்து அவர்களிடம் இருந்த மது பாட்டில்கள் பறிமுதல் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

ஒரு சின்ன இட பிரச்சனை…. கல்லால் அடித்து… தம்பதிகளை தாக்கிய வாலிபர்… வலை வீசி தேடும் போலீசார்…!!

தம்பதிகளை தாக்கிய வாலிபர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஓலையூர் கிராமத்தில் பாலமுருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசித்து வரும் புரட்சிமணி என்பவரது குடும்பத்தினருக்கும் இடையே ஒரு இடம் தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் பாலமுருகனின் மனைவி சுகன்யா அவரது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த புரட்சிமணி சுகன்யாவை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு அதனை தட்டிக் கேட்க வந்த பாலமுருகனை தாக்கியுள்ளார். […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

அளவில்லாத பாசம்…. தாங்க முடியாத இழப்பு… அண்ணன், தம்பி உயிரிழப்பு…!!

அண்ணன் இறந்த சோகத்தை தாங்க முடியாமல் தம்பியும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள கூவத்தூர் குப்பம் கைகாட்டி என்ற பகுதியில் திருவேங்கடம் என்பவர் வசித்துவருகிறார். இவருக்கு பாலமுருகன், சுந்தரமூர்த்தி என்ற  இரு மகன்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் கூலி வேலை பார்த்து வந்தனர். இதில் சுந்தர மூர்த்திக்கு மீனா என்ற மனைவியும், 2 வயதில் ஆண் குழந்தையும் உள்ளனர். அதோடு பாலமுருகனுக்கு சத்யா என்ற மனைவியும் 2 ஆண் குழந்தை மற்றும் ஒரு […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“உடல்நல குறைவு” செலவு செய்ய முடியல…. நீதிமன்றத்தில் தூக்கிட்டு ஊழியர் தற்கொலை…!!

அரியலூர் கோர்ட்டு அறையில் வைத்து ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள குடும்ப நல நீதிமன்றம் பெருமாள் கோவில் தெருவில் ஒரு கட்டிடத்தில் இயங்க வருகின்றது. இந்த நீதிமன்றத்தில் தலைமை நிர்வாகியாக நெடுஞ்செழியன் என்பவர் பணிபுரிந்து வந்தார். இவருக்கு கீழப்பெரம்பலூர் சொந்த ஊராகும். இவர் நேற்று முன்தினம் வழக்கம் போல் நீதிமன்றத்திற்கு வந்து அலுவலகப் பணி பணியை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அவர் திடீரென தனது அறைக்குள் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

வயலுக்கு சென்ற ஜெயபால்….. வீட்டுக்கு திரும்பும் வழியில் அதிர்ச்சி… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தார்…!!

வயலில் வேலை செய்துவிட்டு வீட்டிற்கு திரும்பிய விவசாயி ஓட்டிய மொபட் மீது லாரி மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அரியலூர் மாவட்டத்திலுள்ள சாணக்கியாபுரத்தில் ஜெயபால் என்ற விவசாயி வசித்து வருகிறார். இவர் கல்லகம் கிராமத்தில் உள்ள அவரது வயலுக்கு சென்று விட்டு திரும்ப மொபட்டில் வீட்டிற்கு சென்று கொண்டிருக்கும் பொழுது, அரியலூரில் இருந்து பாடலூருக்கு சரக்கு ஏற்றி வந்த டிப்பர் லாரி ஜெயபாலின் மொபட் மீது மோதியது.  இதில் படுகாயமடைந்த ஜெயபால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“ராஜ வீதியை காணவில்லை” வடிவேலு கதையா இருக்கு…. ஆட்சியரிடம் முறையிட்ட மக்கள்…!!

ராஜ விதியை காணவில்லை எனக் கூறி கிராம மக்கள் அனைவரும் இணைந்து கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர் அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரத்தை தலைமையிடமாக கொண்டு மாமன்னன் ராஜேந்திர சோழன் ஆட்சி செய்தான். மாமன்னன் ராஜேந்திர சோழன் மாளிகைமேட்டில் உள்ள தனது அரண்மனையில் இருந்து பிரகதீஸ்வரர் கோவில் செல்லும் வழியில் ஒரு கணக்க விநாயகர் கோவிலை கட்டி வழிபட்டுள்ளார். மன்னன் முதலில் விநாயகரை வழிபட்ட பின்னரே ராஜவீதி வழியாக பிரகதீஸ்வரர் கோவிலுக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

அரியலூரில் கொடூரம் : 4 வயது சிறுமிக்கு நிகழ்ந்த சோகம்…. 32 வயது இளைஞன் கைது…!!

அரியலூர் அருகே 4 வயது சிறுமியை  பாலியல் வன்கொடுமை செய்த 32 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.  இந்தியாவில் நாளுக்கு நாள் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. தொடர் முயற்சியை, அரசும், அரசு அதிகாரிகளும் தொடர்ந்து பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். ஆனால், சட்டம் கடுமையாக்கப்பட்டால் மட்டுமே, இதுபோன்ற குற்றங்கள் குறையும் என ஒருபுறம் கருத்துக்கள் தொடர்ந்து எழுந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் அரியலூர் மாவட்டம் பெரிய கிருஷ்ணாபுரம் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

ரூ2-க்கு மினரல் வாட்டர்….. வெகுநாள் தாகத்தை தனித்த ஊராட்சி தலைவர்….. குவியும் பாராட்டு…..!!

அரியலூர் அருகே குக்கிராமம் ஒன்றிற்கு ரூபாய் 2இல்  மினரல் வாட்டர் வழங்கி வரும்  ஊராட்சி மன்ற தலைவருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.  அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வெங்கட கிருஷ்ணாபுரம் ஊராட்சியில் கிட்டத்தட்ட 325 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கே வசிக்கக்கூடிய பெரும்பான்மையான மக்கள் விவசாய குடிமக்கள் என்பதால், அவர்கள் குடிப்பதற்கு பெருமளவு நிலத்தடி நீரையே நம்பி இருக்கும் சூழ்நிலை இருந்தது. நிலத்தடி  குடிநீர் அத்தனை சுவையாக இல்லாமல் இருந்ததால், அப்பகுதி மக்கள் தேவைக்கு நீர் அருந்தினார்களே  […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

½ பவுன் நகைக்காக….. 80 வயது பாட்டியை கொன்று…. சிறை சென்ற சிறுவன்….!!

அரியலூர் அருகே அரை பவுன் தங்க நகைக்கு ஆசைப்பட்டு 80 வயது பாட்டியை கொலை செய்த 14 வயது சிறுவன் சிறை சென்றுள்ளான்.  அரியலூர் மாவட்டம் செந்துறை பகுதியை அடுத்த குவாகம் காலனி பகுதியில் வசித்து வந்தவர் சிவகாமி. இவரது கணவர் இறந்த நிலையில், அவரது மகளான கலைச்செல்வி, அம்பிகா, இளவரசி, பானுமதி ஆகியோரும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் 80 வயது மூதாட்டியான சிவகாமி , குவாகம் காவல் நிலையம் அருகே தனியாக வசித்து […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

மாட்டை தொடர்ந்து….. இளம்பெண் மரணம்….. பலத்த காற்றால் நேர்ந்த சோகம்….!!

அரியலூர் அருகே மின்சாரம் தாக்கி பெண் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  அரியலூர் மாவட்டம் மேலராமநல்லூர் கிராமத்தில் வசித்து வருபவர் பழனிச்சாமி. அவரது மனைவி ஜெயமணி. இவர்கள் இருவரும் கூலி வேலை செய்து தங்களது பிழைப்பை நடத்தி வந்துள்ளனர். இவர்கள் இருவரும் சொந்தமாக மாடு ஒன்றை வளர்த்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு அவர் வளர்க்கும் மாடு  திடீரென அலறியது. சத்தத்தை கேட்டு ஜெயமணி வீட்டின் பின்புறம் மாட்டை பார்ப்பதற்காக சென்றுள்ளார். அதற்கு முன்பாக […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

அரியலூர் மாவட்டத்தில் கொரோனாவால் முதல் உயிரிழப்பு..!!

பூக்கடை வியாபாரி ஒருவர் கொரோனா தொற்றால் நேற்று உயிரிழந்ததன் மூலம் அரியலூர் மாவட்டத்தில் கொரோனாவால் முதல் பலி ஏற்பட்டுள்ளது. அரியலூர் நகரின் பிரதான கடை வீதியாக மாங்காய் பிள்ளையார் கோயில் தெரு இருக்கிறது.. இந்த தெருவில் ஒரு பூக்கடையை வைத்து வியாபாரம் செய்து வந்தவர் தான் முருகன். இவருக்கு 3 நாட்களுக்கு முன் காய்ச்சல் இருந்ததால், திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு  சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்தநிலையில், நேற்று காலை […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

கல்யாணம் செய்து வைக்காத தந்தை… மகன் செய்த கொடூரம்..!!

ஆண்டிமடம் அருகே கல்யாணம் செய்து வைக்காத ஒரே காரணத்தால் தந்தையை மகன் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள கொங்குநாட்டர் குப்பம் கிராமத்தில் வசித்து வருபவர் சக்கரவர்த்தி.. இவருக்கு வயது 70 ஆகிறது.. விவசாயக் கூலித் தொழிலாளியான இவருக்கு 3 மகன்களும், 2 மகள்களும் இருக்கின்றனர்.. இதில் மூத்த மகன் ஒருவருக்கும், 2 மகளுக்கும் சக்கரவர்த்தி கல்யாணம் செய்து வைத்து விட்டார்.. இந்நிலையில் மீதமுள்ள 2 மகன்களுக்கும் கல்யாணம் பண்ணி வைக்க […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

எப்ப பார்த்தாலும் கேம் விளையாடிட்டே இருக்க… கடுமையாக திட்டிய தந்தை… மகன் எடுத்த விபரீத முடிவு..!!

தந்தை திட்டியதால் எலி மருந்தை தின்று மாணவர் தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகேயுள்ள இலையூர் கிராமத்தை சேர்ந்த சின்னப்பன்  என்பவருடைய மகன் பிரபாகரன்..18 வயதுடைய பிரபாகரன் ஜெயங்கொண்டம் பகுதியிலுள்ள தொழிற்பயிற்சி நிலையத்தில் படித்து வந்தார்.. இந்த நிலையில் தான் நேற்று முன்தினம் இரவு பிரபாகரனிடம், அவரது தந்தை ‘எப்ப பார்த்தாலும் மொபைல் போனை வைத்துக்கொண்டு கேம் விளையாடிக் கொண்டே இருக்கிறாய்‘ என்று கூறி கடுமையாக திட்டியுள்ளார். இதனால் மனமுடைந்து போன […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று அரியலூர், ஈரோடு உள்ளிட்ட 4 மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை!

தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் இன்று ஒரே நாளில் 2,176 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 50,193 ஆக உயர்ந்துள்ளது. வெளிநாட்டில் இருந்து வந்த 54 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த 1,789 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று அரியலூர், ஈரோடு, பெரம்பலூர், திருப்பூர் ஆகிய 4 மாவட்டங்களில் புதிதாக யாரும் கொரோனோவால் பாதிக்கப்படவில்லை. சென்னை – 1,267, செங்கல்பட்டு – 162, […]

Categories
அரியலூர் மாநில செய்திகள்

அரியலூரில் கோயம்பேடு தொழிலாளர்கள் 32 பேர் உட்பட 36 பேர் இன்று குணமடைந்து டிஸ்சார்ஜ்!

அரியலூரில் கோயம்பேடு தொழிலாளர்கள் 32 பேர் உட்பட 36 பேர் குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் ஆறுதல் அளிக்கும் வகையில் தினமும் கணிசமான எண்ணிக்கையில் கொரோனா பாதித்த நபர்கள் குணமடைந்து வீடு திரும்பி வருகின்றனர். அந்த வகையில் அரியலூர் அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த கோயம்பேடு தொழிலாளர்கள் 32 பேர் உட்பட 36 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அரியலூரில் 275 […]

Categories
அரியலூர் தஞ்சாவூர் மாநில செய்திகள்

தஞ்சை மற்றும் அரியலூர் மாவட்டங்களில் நாளை முழு ஊரடங்கு இல்லை – ஆட்சியர்கள் முக்கிய அறிவிப்பு!

தஞ்சை மற்றும் அரியலூர் மாவட்டங்களில் நாளை முழு ஊரடங்கு இல்லை என அறிவித்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் மே 17ம் தேதி வரை இரண்டாவது முறையாக ஊரடங்கு உத்தரவானது நீட்டிக்கப்ட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 6,009ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 3,035 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சென்னை உள்ளிட்ட அதிக பாதிப்பு உள்ள பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் முழு ஊரடங்கை அமல்படுத்தி வந்தன. கொரோனா […]

Categories

Tech |