Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

பல்வேறு குற்ற செயல்கள்…. 3 பேர் மீது பாய்ந்த குண்டர் சட்டம்…. மாவட்ட ஆட்சியரின் உத்தரவு…!!

3 பேரை காவல்துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள புதுச்சாவடி கிராமத்தில் ராஜசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவரை கட்ட பஞ்சாயத்து வழக்கில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அனுமதியின்றி கருக்கலைப்பு செய்து பெண்ணின் சாவிற்கு காரணமான கிருஷ்ணவேணி என்பவரையும், திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் புரட்சி தமிழன் என்பவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவர்கள் பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். எனவே குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய போலீஸ் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

கடையில் இருந்த பொருள்…. வசமாக சிக்கிய உரிமையாளர்…. போலீஸ் நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக கடையில் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த உரிமையாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள ஜெயங்கொண்டம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சிதம்பரம் சாலையில் இருக்கும் ஒரு கடையில் சட்ட விரோதமாக புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து கடை உரிமையாளரான குமாரனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அதன்பின் சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள புகையிலை பொருட்களை […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

தூங்கி கொண்டிருந்த டிரைவர்…. திடீரென நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

லாரியில் இருந்து தவறி விழுந்து டிரைவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள வெண்டயம்பட்டி கிராமத்தில் ராஜசேகர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் சுண்ணாம்பு கற்களை ஏற்றிக்கொண்டு ராஜசேகர் அரியலூர் மாவட்டத்தில் இருக்கும் கீழப்பழுவூரில் உள்ள சிமெண்ட் நிறுவனத்திற்கு சென்றுள்ளார். இதனை அடுத்து சுண்ணாம்பு கற்களை லாரியில் இருந்து இறக்கிய பிறகு ராஜசேகர் படுத்து தூங்கியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக லாரியில் இருந்து தவறி கீழே விழுந்து காயமடைந்த ராஜசேகரை அருகில் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

வாலிபர் செய்த செயல்…. பெற்றோர் அளித்த புகார்…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

15 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ  சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் நல்லநாயகபுரம் கிராமத்தில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார்.  இந்நிலையில் செல்வராஜ் அதே பகுதியில் வசிக்கும் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனை சிறுமி தனது பெற்றோரிடம் கூறி கதறி அழுதுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் செல்வராஜ் மீது புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

சார் அங்க போய் பாருங்க…. சுற்றி வளைத்த அதிகாரிகள்…. 5 வாலிபர்கள் கைது…!!

சட்ட விரோதமாக மணல் கடத்த முயன்ற 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள கீழப்பழுவூர் பகுதியில் சட்ட விரோதமாக மணல் கடத்தப்படுவதாக கிராம நிர்வாக அதிகாரிக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி கிராம நிர்வாக அதிகாரி மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்த போது அங்கு சிலர் பொக்லைன் எந்திரம் மூலம் டிராக்டர்களில் மணல் கடத்த முயன்றது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அவர்களை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“வெட்டப்பட்ட எலுமிச்சை மரம்” விவசாயிக்கு நடந்த விபரீதம்…. போலீஸ் நடவடிக்கை…!!

முன்விரோதம் காரணமாக விவசாயியை தாக்கியவர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள செட்டித்திருக்கோணம் பகுதியில் விவசாயியான அன்பழகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் மாரிமுத்து என்பவருக்கும் இடையே சொத்து பிரச்சனை காரணமாக ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் மாரிமுத்து அன்பழகனின் நிலத்தில் இருந்த எலுமிச்சை மரத்தை வெட்டியுள்ளார். இதனால் அன்பழகன் மற்றும் மாரிமுத்துவிற்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கோபமடைந்த மாரிமுத்து அன்பழகனை சரமாரியாக தாக்கியுள்ளார். இதனால் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

வேதனையில் இருந்த பெண்…. திடீரென நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தாய் இறந்த துக்கத்தில் இருந்த பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள அயன்ஆத்தூர் பகுதியில் மர வியாபாரியான கண்ணதாசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வளர்மதி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு வளர்மதியின் தயாரான ஜெகதாம்பாள் உயிரிழந்துவிட்டார். இந்நிலையில் தாயை இழந்த துக்கத்தில் மன உளைச்சலில் இருந்த வளர்மதி தனது வீட்டில் யாரும் இல்லாத […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

இந்த வயதில் திருமணமா….? வாலிபர் செய்த செயல்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

சிறுமியை கர்ப்பமாக்கி திருமணம் செய்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள திருசின்னபுரம் பகுதியில் ராஜசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கார்த்திக் என்ற மகன் உள்ளார். இவர் அரியலூர் மாவட்டத்தில் வசிக்கும் 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததால் அவர் தற்போது கர்ப்பமாக இருக்கின்றார். இந்நிலையில் இருவரின் குடும்பத்தினரும் கார்த்திக்கிற்கு அந்த சிறுமியை திருமணம் செய்து வைத்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் துறையினர் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

எல்லை பிரிக்க வேண்டாமா….? சகோதரருக்கு நடந்த கொடூரம்…. போலீஸ் விசாரணை…!!

சொத்து பிரச்சனையில் இருவர் இணைந்து முதியவரை அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள உதயநத்தம் கிராமத்தில் விவசாயியான ரங்கநாதன் என்ற முதியவர் வசித்து வருகிறார். இவருக்கும் இவரது சகோதரரான பஞ்சநாதன் என்பவருக்கும் இடையே சொத்து பிரச்சினை காரணமாக ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் பஞ்சநாதனும், அவரது மகன் விக்னேஷ் என்பவரும் இணைந்து பிரச்சனைக்குரிய வயலில் வேலி அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து அறிந்த ரங்கநாதன் வயலுக்கு சென்று இடத்தை அளந்து எல்லை […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

தோட்டத்தில் இருந்த பொருள்…. வசமாக சிக்கிய மூவர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக சாராய ஊறல் போட்ட குற்றத்திற்காக 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள பொய்யூர் கிராமத்தில் சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதாக மதுவிலக்கு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சௌந்தர்ராஜன் என்பவரது வயலில் ஒரு பேரலில் சாராய ஊறல் போட்டு வைத்திருப்பதை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் 50 லிட்டர் சாராய ஊறலை […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

மேற்கூரை அமைக்கும் பணி….. அதிர்ச்சியடைந்த நிறுவனத்தினர்…. போலீஸ் நடவடிக்கை…!!

சிமெண்ட் ஆலையில் இரும்பு பொருட்களை திருடிய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள வி.கைகாட்டி பகுதியில் அல்ட்ராடெக் நிறுவனத்திற்கு சொந்தமான சிமெண்ட் ஆலை அமைந்துள்ளது. இந்த நிறுவனத்திற்கு சொந்தமான இடத்தில் மேற்கூரை அமைக்கும் பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இதற்காக தகர சீட்டு மற்றும் இரும்பு கம்பிகள் அந்த இடத்தில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மர்ம நபர் 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள இரும்பு பொருட்களை திருடி விட்டு சென்றுள்ளார். இதுகுறித்து சிமெண்ட் நிறுவனத்தினர் விக்கிரமங்கலம் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

வெளியே சென்ற பெண்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு…!!

வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் பணத்தை திருடி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள ஜெயங்கொண்டம் பகுதியில் பார்வதி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றுள்ளார். இந்நிலையில் மீண்டும் திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து பார்வதி அதிர்ச்சி அடைந்தார். அதன்பின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 25 ஆயிரம் ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்துள்ளது. […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

சுத்தம் செய்த விவசாயி…. வீட்டிற்கு அருகில் கிடந்த சடலம்…. அரியலூரில் பரபரப்பு….!!

வீட்டிற்கு அருகில் 5 மாத ஆண் குழந்தையின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஆதிச்சனூர் கிராமத்தில் விவசாயியான விஜய் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் விஜய் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது தனது வீட்டிற்கு அருகில் 5 மாத ஆண் குழந்தையின் உடல் துணியால் சுற்றப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குழந்தையின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வீட்டில் பதுக்கிய பொருள்…. போலீஸ் நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள கொலையனூர் பகுதியில் காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் அதே பகுதியில் வசிக்கும் செந்தில் குமார் என்பவரது வீட்டில் சோதனை செய்துள்ளனர். அப்போது வீட்டிற்கு பின்புறம் செந்தில்குமார் மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிந்த காவல்துறையினர் செந்தில்குமாரை கைது செய்ததோடு,  அவரிடம் இருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்து தீவிர விசாரணை […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

பெற்றோர் அளித்த புகார்…. பாதுகாப்பு கேட்ட காதல் ஜோடி…. போலீஸ் விசாரணை…!!

காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் பாதுகாப்பு கேட்டு காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள மீன்சுருட்டி பகுதியில் சிற்றரசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருப்பூரில் இருக்கும் பனியன் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் சிற்றரசனும், அதே நிறுவனத்தில் வேலை பார்க்கும் காவியா என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் பெற்றோர்கள் பிரித்து விடுவார்களோ என்ற அச்சத்தில் காதலர்கள் இருவரும் திருப்பூர் பண்ணாரி அம்மன் கோவிலில் வைத்து திருமணம் செய்துள்ளனர். இதனையடுத்து பாதுகாப்பு கேட்டு காதல் திருமணம் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

முதியவர் செய்த செயல்…. சிறுமிக்கு நடந்த கொடுமை…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

70 வயது முதியவர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரங்கோட்டை கிராமத்தில் சுந்தரம் என்ற முதியவர் வசித்து வருகிறார். இவர் சைக்கிள்களுக்கு பஞ்சர் ஒட்டும் வேலை செய்து வருகின்றார். இந்நிலையில் சுந்தரம் அதே பகுதியில் வசிக்கும் 9 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதுகுறித்து அந்த சிறுமி அவரது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து சிறுமியின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் ஒன்று சேர்ந்து முதியவரை […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

நிழற்குடையில் தஞ்சமடைந்த குடும்பம்…. அதிகாரிகளின் ஏற்பாடு….. நெகிழ்ச்சி சம்பவம்…!!

பேருந்து நிறுத்த நிழற்குடையில் தஞ்சமடைந்த தொழிலாளியின் குடும்பத்தினருக்கு அதிகாரிகள் தங்குமிடம் ஏற்பாடு செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள ஜெயங்கொண்டத்தில் சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிடங்களுக்கு டைல்ஸ் ஒட்டும் வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு கீதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு சபரிவாசன் என்ற மகன் இருக்கிறான். இந்த சிறுவன் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சங்கருக்கு சர்க்கரை நோய் மற்றும் ரத்த அழுத்தம் காரணமாக வாத நோய் ஏற்பட்டுள்ளது. […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

நோயால் பாதிக்கப்பட்ட தொழிலாளி…. பயணிகள் நிழற்குடையில் தஞ்சம்…. சிரமப்படும் குடும்பத்தினர்….!!

டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி தனது மனைவி மற்றும் மகனுடன் பேருந்து நிலைய நிழற்குடையில் தஞ்சம் அடைந்துள்ளார். அரியலூர் மாவட்டத்திலுள்ள ஜெயங்கொண்டத்தில் சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிடங்களுக்கு டைல்ஸ் ஒட்டும் வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு கீதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு சபரிவாசன் என்ற மகன் இருக்கிறான். இந்த சிறுவன் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சங்கருக்கு சர்க்கரை நோய் மற்றும் ரத்த அழுத்தம் காரணமாக வாத […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

முன்விரோதத்தால் ஏற்பட்ட தகராறு…. 10 பேர் மீது வழக்குப்பதிவு…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

முன்விரோதம் காரணமாக மோதிக்கொண்ட 10 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள கீழப்பழுவூர் கிராமத்தில் கலியபெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அஜய்குமார் என்ற மகன் உள்ளார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் முருகன் என்பவருக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டபோது ஒருவரை ஒருவர் கத்தி மற்றும் அரிவாளால் தாக்கி உள்ளனர். இதனால் காயம் அடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

நகராட்சி அலுவலகம் முற்றுகை….. துப்புரவு பணியாளர்களின் போராட்டம்…. அரியலூரில் பரபரப்பு…!!

ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் நகராட்சி ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் ஒப்பந்த அடிப்படையில் 120 துப்புரவு பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மாவட்ட கலெக்டர் அறிவித்தபடி 259 ரூபாய் மட்டுமே அவர்களுக்கு ஊதியமாக வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் அவர்களுக்கு உயர்த்தப்பட்ட சம்பளமான 292 ரூபாய் வழங்கப்படவில்லை. இதுகுறித்து ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் சார்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

பேக்கரியில் திருட முயற்சி…. வசமாக சிக்கிய இருவர்…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!

பேக்கரியில் பணத்தை திருட முயன்ற குற்றத்திற்காக இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள கீழப்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் பேக்கரி ஒன்று அமைந்துள்ளது. இந்த பேக்கரி டீ குடிப்பதற்காக 2 பேர் சென்றுள்ளனர். இந்நிலையில் கல்லாப்பெட்டியில் அமர்ந்திருந்தவர் எழுந்து சிறிது தூரம் சென்றுள்ளார். அப்போது அந்த இரண்டு பேரும் கல்லாவில் இருந்த பணத்தை திருடிவிட்டு தப்பி ஓட முயற்சி செய்துள்ளனர். இதனை பார்த்ததும் அங்கிருந்தவர்கள் இரண்டு பேரையும் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்து […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

நடந்து சென்ற குடும்பத்தினர்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. அரியலூரில் சோகம்…!!

நடந்து சென்று கொண்டிருந்தபோது வாகனம் மோதிய விபத்தில் பெண் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள மெய்க்காவல்புத்தூர் பகுதியில் அண்ணா துரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு அருண் குமார் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் அண்ணாதுரை தனது மனைவி மற்றும் மகனுடன் சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்றுள்ளார். இதனையடுத்து அவ்வழியாக வேகமாக சென்ற வாகனம் இவர்கள் மீது பலமாக மோதி விட்டு நிற்காமல் சென்றுள்ளது. இந்த […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

வெளியே சென்ற காதலர்கள்….. கிணற்றுக்குள் பாய்ந்த மோட்டார் சைக்கிள்…. அரியலூரில் நடந்த சோகம்…!!

காதலர்கள் சென்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிள் கிணற்றுக்குள் பாய்ந்ததால் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள உடையார்பாளையம் பகுதியில் 23 வயது இளம்பெண் வசித்து வருகிறார். இவர் காஞ்சிபுரத்தில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் இந்த இளம்பெண்ணும், மோகன்ராஜ் என்ற வாலிபரும் காதலித்து வந்துள்ளனர். இவர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள புதுச்சாவடி பகுதியில் இருக்கும் தைல மர காட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-டிப்பர் லாரி மோதல்…. தலை நசுங்கி பலியான வாலிபர்… அரியலூரில் பரபரப்பு….!!

மோட்டார் சைக்கிள் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் எலக்ட்ரீசியன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள காரப்பாக்கம் கிராமத்தில் எலக்ட்ரீசியனான மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மணிகண்டன் மளிகை பொருட்கள் வாங்குவதற்காக கீழப்பழுவூர் நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இதனை அடுத்து அங்கிருக்கும் கல்லூரி அருகில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வேகமாக வந்த டிப்பர் லாரி மணிகண்டனின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதி விட்டது. இதனால் நிலைதடுமாறி கீழே […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

ஜவுளி கடையில் நடந்த சம்பவம்…. சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

மர்ம நபர் கடைக்குள் புகுந்து குத்துவிளக்கு, பிள்ளையார் சிலை, பணம் போன்றவற்றை திருடிச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள ரெட்டிபாளையம் கிராமத்தில் பாலசுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மீன்சுருட்டி பகுதியில் ஜவுளி கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் பாலசுப்பிரமணியனின் மகனான மணிகண்டன் என்பவர் கடையை திறப்பதற்கு சென்றபோது ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். அதன் பின் உள்ளே சென்று பார்த்தபோது 10000 ரூபாய் பணம், வெள்ளி முலாம் பூசப்பட்ட […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

பெண்ணுக்கு நடந்த கொடுமை…. அ.தி.மு.க நிர்வாகி கைது…. அரியலூரில் பரபரப்பு….!!

மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக அ.தி.மு.க நிர்வாகி கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள மண்ணுளி கிராமத்தில் அ.தி.மு.க கிளை செயலாளரான தியாகராஜன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் தியாகராஜன் 27 வயதான மாற்றுத்திறனாளி பெண்ணுடன் நெருக்கமாக பழகியுள்ளார். மேலும் அந்த மாற்றுத்திறனாளி பெண்ணை தியாகராஜன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து அறிந்ததும் அந்த பெண்ணின் சகோதரர் கயர்லாபாத் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

திடீரென பற்றி எரிந்த வீடுகள்…. தீயணைப்பு வீரர்களின் போராட்டம்…. அரியலூரில் பரபரப்பு…!!

இரண்டு வீடுகள் தீப்பற்றி எரிந்த விபத்தில் பணம் மற்றும் ஆவணங்கள் எரிந்து நாசமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள வாரணவாசி பகுதியில் முருகேசன் என்ற விவசாயி வசித்து வருகிறார். இவர் காலையில் தனது வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் மதிய நேரத்தில் திடீரென முருகேசன் வீட்டு மேற்கூரை தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் கொழுந்து […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

கணவருடன் ஏற்பட்ட தகராறு…. பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

குடும்ப பிரச்சனை காரணமாக பெண் எலி பசையை தின்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஆதனூர் கிராமத்தில் கூலி தொழிலாளியான சித்திரவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர்கள் தமயந்தி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சனை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த தமயந்தி தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் எலி பசையை தின்று தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

நண்பர்களின் ஏமாற்று வேலை…. சிறுமிக்கு நடந்த கொடுமை…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

நண்பர்கள் இணைந்து 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள நாகமங்கலம் கிராமத்தில் ரஞ்சித் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சத்யராஜ், விஜய், ரமேஷ் என்ற மூன்று நண்பர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் நண்பர்கள் நான்கு பேரும் வெவ்வேறு நாட்களில் ஆசை வார்த்தைகள் கூறி அதே பகுதியில் வசிக்கும் 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இது குறித்து அறிந்த சிறுமியின் தாயார் ஜெயம்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு பிறந்த குழந்தை….. வாலிபர்கள் செய்த செயல்….. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

வாலிபர்கள் 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள விழுதுடையான் கிராமத்தில் பிரகாஷ் என்ற வாலிபர் வசித்து வருகிறார். இந்நிலையில் பிரகாஷ் அப்பகுதியில் வசிக்கும் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனை அறிந்த உடன் அதே கிராமத்தில் வசிக்கும் சிவகுமார் என்ற வாலிபரும் சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்நிலையில் இந்த சிறுமி கர்ப்பமாக இருப்பது அவரது தாய்க்கு தெரியவந்துள்ளது. இதுகுறித்து சிறுமியின் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. சிறுவர்களிடம் இருந்த பொருள்…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!

கஞ்சா வைத்திருந்த குற்றத்திற்காக சிறுவர்கள் உட்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள பேருந்து நிலையம் அருகில் இருக்கும் தங்கும் விடுதியில் சிலர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அங்கு நின்று கொண்டிருந்த ஜெயக்குமார் மற்றும் இரண்டு சிறுவர்கள் சட்டவிரோதமாக கஞ்சா வைத்திருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இவர்கள் திருச்சியில் இருந்து […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

வேலைக்கு சென்ற தந்தை…. நடந்த அதிர்ச்சி சம்பவம்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

தண்ணீர் தொட்டியில் சிறுவன் சடலமாக கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள தட்டாஞ்சாவடி கிராமத்தில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரஞ்சிதா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஹரி, சந்தீப் என்ற 2 மகன்கள் இருந்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ரஞ்சிதா இறந்துவிட்டதால் மணிகண்டன் தனது மகன்களுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மணிகண்டன் வேலைக்கு சென்ற பிறகு வீட்டிற்கு அருகில் இருக்கும் தண்ணீர் தொட்டியில் சிறுவன் சந்தீப் சடலமாக […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“தண்ணீருக்குள் பயிற்சி” வாலிபருக்கு நடந்த விபரீதம்…. கதறி அழுத குடும்பத்தினர்…!!

கிணற்றுத் தண்ணீரில் மூச்சடக்கி பயிற்சி மேற்கொண்ட வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள சன்னாவூர் கிராமத்தில் ஆண்டனி என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு காவல்துறையினர் சார்பில் நடத்தப்பட்ட உடல்தகுதி தேர்வில் ஆண்டனி கலந்து கொண்டுள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் இருக்கும் விவசாய கிணற்றில் ஆண்டனி தண்ணீருக்குள் மூச்சடக்கி பயிற்சி மேற்கொண்டுள்ளார். அப்போது மூச்சு திணறல் ஏற்பட்டு அண்டனி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வனத்துறையினர் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

மேய்ந்து கொண்டிருக்கும் போது…. சினை மாட்டுக்கு நடந்த விபரீதம்…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி…!!

கழிவு நீர்த் தொட்டிக்குள் விழுந்த சினை மாட்டை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள மதனத்தூர் கிராமத்தில் சேகர் என்பவர் வசித்து வருகிறார்.  இவருக்கு சொந்தமான சினை மாடு அதே கிராமத்தில் வசிக்கும் சண்முகம் என்பவரது தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்தது. இந்நிலையில் அங்குள்ள கழிவு நீர் தொட்டியின் மீது  ஏறி நடந்த போது எதிர்பாராதவிதமாக மூடி உடைந்ததால் சினை மாடு 20 அடி ஆழ தொட்டிக்குள் தவறி விழுந்து விட்டது. […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-கார் மோதல்…. முதியவருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் நடராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ராஜன் தனது மோட்டார் சைக்கிளில் தாவுத்தாய் குளம் நோக்கி சென்றுள்ளார். இதனையடுத்து அவ்வழியாக வேகமாக சென்ற கார் நடராஜனின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதி விட்டது. இதனால் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

இப்படியும் இருக்குமா….? வித்தியாசமாக பிறந்த ஆட்டு குட்டி…. ஆச்சரியத்துடன் பார்க்கும் பொதுமக்கள்…!!

ஒற்றை கண்ணுடன் பிறந்த ஆட்டுக்குட்டியை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள தென்கச்சி பெருமாள் நத்தம் கிராமத்தில் சிவகுருநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஆடு, மாடுகளை வளர்த்து வருகின்றார். இந்நிலையில் இவருக்கு சொந்தமான ஆடு 2 குட்டிகளை ஈன்றுள்ளது. அதில் ஒரு ஆட்டுக்குட்டி வித்தியாசமாக நெற்றியில் ஒற்றை கண்ணுடன் பிறந்துள்ளது. இதுகுறித்து அறிந்ததும் அந்த கிராமத்தில் வசிக்கும் ஏராளமான பொதுமக்கள் அங்கு சென்று ஒற்றை கண்ணுடன் பிறந்த ஆட்டுக்குட்டியை ஆச்சரியத்துடன் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

அப்போது வெளிய வரல…. அச்சத்தில் தவித்த பொதுமக்கள்… வனத்துறையினரின் முயற்சி…!!

பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றித்திரிந்த முதலையை மீனவர்கள் பிடித்து விட்டனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள குலவடையான் கிராமத்தில் சித்தேரி என்ற குளம் அமைந்துள்ளது. இந்நிலையில் இந்த குளத்தில் இருந்த முதலை இரவு நேரத்தில் கிராமத்துக்குள் நுழைந்து பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அங்குமிங்கும் சுற்றி திரிந்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்த வனத்துறை அதிகாரிகள் குளத்தில் கிடந்த முதலையை இரண்டு நாட்களாக கண்காணித்துள்ளனர். ஆனால் முதலை குளத்திலிருந்து வராததால் வனத்துறையினர் பொதுமக்களிடம் அது வெளியே வந்தால் உடனடியாக தகவல் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“குழந்தையை எங்கிட்ட கொடு” வீட்டிலிருந்து வந்த துர்நாற்றம்…. நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

கூலித்தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கூலி தொழிலாளியான ரமேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு உதயகுமாரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 8 மாதத்தில் ஆண் குழந்தை இருக்கின்றது. இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான ரமேஷ் தினமும் மது அருந்துவிட்டு தனது மனைவியை தாக்கியுள்ளார். இதனால் உதயகுமாரி  கோபித்துக் கொண்டு தனது குழந்தையுடன் பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். இதனை அடுத்து […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

இந்த வேலை தான் நடக்குதா….? வசமாக சிக்கிய வாலிபர்…. கைது செய்த காவல்துறையினர்…!!

சட்ட விரோதமாக மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள மீன்சுருட்டி பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினருக்கு அப்பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் நடத்திய சோதனையில் அதே பகுதியில் வசிக்கும் காமராஜர் என்பவர் வீட்டில் மது பாட்டில்களை பதுக்கி வைத்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் சட்ட விரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“நிறைய மூட்டைல இருக்கு” சோதனையில் சிக்கிய பொருள்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

மணல் அள்ளுவதற்கு பயன்படுத்தப்பட்ட லாரியை அதிகாரிகள் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள காரைபாக்கம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் அவ்வழியாக வேகமாக சென்ற லாரியை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது அதில் பல மூட்டைகளில் மணல் கடத்திச் சென்றதை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதனை அடுத்து மணல் கடத்திய குற்றத்திற்காக காவல்துறையினர் லாரியை பறிமுதல் செய்துள்ளனர். ஆனால் குற்றவாளிகள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“தங்கச்சி சாப்பாடு செய்” அண்ணன் எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

தங்கையுடன் ஏற்பட்ட தகராறில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள தா.பழூர் பகுதியில் அறிவழகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாவீரன் என்ற மகன் இருந்துள்ளார். இவரது தாய் இறந்துவிட்டதால் அறிவழகன் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு மாவீரன் வேலைக்கு சென்று தனது அண்ணன் மற்றும் தங்கையை பராமரித்து வந்துள்ளார். இந்நிலையில் மாவீரன் வீட்டில் சாப்பாடு செய்ய சொல்லி தனது தங்கையிடம் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

லாரியை தட்டினது யாரு…? நள்ளிரவில் நடந்த சம்பவம்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

லாரி டிரைவரிடம் இருந்து பணம் மற்றும் செல்போனை பறித்து சென்ற சிறுவன் உட்பட 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள கடாரங்கொண்டான் கிராமத்தில் வேல்முருகன் என்ற லாரி டிரைவர் வசித்து வருகிறார். அதே பகுதியில் கிளீனர் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் லாரியில் ஜல்லி கற்களை ஏற்றிக்கொண்டு வேல்முருகன் மற்றும் பிரகாஷ் ஆகிய இருவரும்  உடையார்பாளையம் பகுதிக்கு வந்துள்ளனர். அப்போது அசதியாக இருந்ததால் இரண்டு பேரும் லாரியை ஓரமாக நிறுத்திவிட்டு தூங்கியுள்ளனர். இதனையடுத்து […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

எனக்கு மது வாங்கி தா… சிறுவனின் மூர்க்கத்தனமாக செயல்… கைது செய்த காவல்துறையினர்…!!

மது வாங்கி தர மறுத்ததால் வாலிபரை சிறுவன் சோடா பாட்டிலால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள உடையார்பாளையம் பகுதியில் ரஞ்சித் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னையில் இருக்கும் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ரஞ்சித் அப்பகுதியில் உள்ள ஏரிக்கு குளிக்க சென்ற போது 17 வயது சிறுவன் மது வாங்கி தருமாறு ரஞ்சித்துடன் தகராறு செய்துள்ளார். இதனை அடுத்து ரஞ்சித் மது வாங்கி தர முடியாது என அந்த […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

அதில் கலந்த மாத்திரைகள்… வசமாக சிக்கிய வாலிபர்… விசாரணையில் வெளிவந்த தகவல்…!!

சாராயத்தில் போதை மாத்திரைகளை கலந்து விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள கொளத்தூர் பகுதியில் சட்டவிரோதமாக சாராயம் விற்பனை செய்யப்படுவதாக ஆண்டிமடம் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினரை பார்த்ததும் அங்கிருந்து ஒரு வாலிபர் தப்பி ஓட முயற்சி செய்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் அவரை மடக்கி பிடித்து விசாரித்ததில், அந்த நபர் அதே பகுதியில் வசிக்கும் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

வெளுத்து வாங்கிய மழை… பற்றி எரிந்த தென்னை மரம்… அரியலூரில் பரபரப்பு…!!

மின்னல் தாக்கி தென்னைமரம் தீ பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள வாளரகுறிச்சி கிராமத்தில் செந்தில்குமார் என்ற விவசாயி வசித்து வருகிறார். இந்நிலையில் அப்பகுதியில் இடி மின்னலுடன் கனமழை பெய்துள்ளது. அப்போது மின்னல் தாக்கி செந்தில்குமாரின் வீட்டுத் தோட்டத்தில் இருந்த தென்னைமரம் திடீரென தீப்பற்றி எரிந்து விட்டது. இவ்வாறு மின்னல் தாக்கி தென்னை மரம் தீப்பிடித்து எரிந்ததை அப்பகுதி மக்கள் அதிர்ச்சியுடன் பார்த்துள்ளனர். மேலும் தென்னை மரத்தில் பற்றிய தீ மற்றொரு மரத்திற்கும் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

கொரோனா குறித்து கவலை இல்லை…. கட்டுப்பாடுகளை மதிக்காத மக்கள்…. கோரிக்கை விடுத்த சுகாதார துறையினர்….!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஆண்டிமடம் பகுதியில் கட்டுப்பாடு விதிமுறைகளை பின்பற்றாமல் பலர் வெளியே சுற்றுகின்றனர். தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த அரசு முழு ஊரடங்கு அமல்படுத்தி உள்ளது. இதனால் பொதுமக்கள் கட்டுப்பாடு விதிமுறைகளை முறையாக பின்பற்றுகின்றனரா என காவல்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஆண்டிமடம் பகுதியில் கொரோனா தொற்று அச்சமில்லாமல் ஏராளமான பொதுமக்கள் வெளியே வருகின்றனர். இவர்களை காவல்துறையினர் நிறுத்தி விசாரித்தபோது உணவு மற்றும் மருந்துகளை வாங்க செல்வதாக […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

வாட்டி வதைத்த வெயில்…. திடீரென்று பெய்த மழை…. மகிழ்ச்சியில் மக்கள்….!!

உடையார்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள தா.பழூர் பகுதியில் கடுமையான வெப்பம் நிலவி வந்தது. இந்த வெப்பம் அக்னி நட்சத்திரம் முடிந்தும் குறையாமல் இருந்ததால் மக்கள் மிகுந்த அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில் நேற்று தா.பழூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை 5 மணி முதல் இரவு வரை விட்டு விட்டு லேசாக மழை பெய்துள்ளது. இதனால் பூமி குளிர்ந்து மக்களுக்கு மகிழ்ச்சியை […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

மது பாட்டிலினுள் கிடந்த பாம்பு குட்டி…. குடிச்சவருக்கு என்னாச்சு….? பரபரப்பில் அரியலூர்….!!

மது பாட்டிலினுள் பாம்பு குட்டி இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள உடையார்பாளையம் பகுதியில் சுரேஷ் என்ற விவசாயி வசித்து வருகிறார். இவருக்கு அடிக்கடி மது அருந்தும் பழக்கம் உள்ளது. இந்நிலையில் இவர் மதுபான கடைக்கு சென்று மது பாட்டிலை வாங்கி விட்டு வீட்டிற்கு வந்து டம்ளரில் ஊற்றி மது அருந்தியுள்ளார். பின்னர் மீதமுள்ள மதுவை இரண்டாவதாக டம்ளரில் ஊற்றிக் கொண்டிருக்கும் போது பாட்டிலினுள் பாம்பு குட்டி ஒன்று இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

சட்டவிரோதமாக நடைபெற்ற விற்பனை… வசமாக சிக்கிய 2 பெண்கள்… கைது செய்த காவல்துறை…!!

சட்டவிரோதமாக மது விற்பனை செய்த இரண்டு பெண்களை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள கோரைக்குழி பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்பகுதியில் மது விற்பனை நடைபெறுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் அவர்கள் அப்பகுதியில் உள்ள வீடுகளில் சோதனை நடத்தியுள்ளனர். அப்போது அம்பிகா வீட்டின் பின்புறத்தில் மதுபாட்டில்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அம்பிகாவை கைது செய்து அவரிடம் இருந்த […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

எவ்வளவு நாளா சொல்லுறோம்… உடனே நடவடிக்கை எடுங்க… மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்…!!

குறைந்த அழுத்த மின்சாரத்தை சீரமைத்து தர கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள நாகமங்கலம் கிராமத்தில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களுடைய வீடுகளில் கடந்த இரண்டு மாதங்களாக குறைந்த அழுத்த மின்சாரத்தால் டிவி, மின்விசிறி, மின்மோட்டார், குளிர்சாதனப் பெட்டி, மிக்சி, கிரைண்டர் போன்ற மின்சாதன பொருட்கள் சரியாக இயங்கவில்லை. இதனால் மின்சாதன பொருட்கள் பழுதடைந்து போகின்றது. மேலும் குடிநீரும் சரியாக விநியோகிக்கப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகின்றனர். இதுகுறித்து அவர்கள் சம்மந்தப்பட்ட […]

Categories

Tech |