சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம் பகுதியில் அருண்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 12-ஆம் வகுப்பு மாணவியை காதலித்து திருமணம் செய்துள்ளார். தற்போது அந்த மாணவி 4 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். இந்நிலையில் மாணவி பரிசோதனை செய்வதற்காக அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு மாணவிக்கு 17 வயதுதான் ஆகிறது என்பதை அறிந்த மருத்துவர்கள் குழந்தைகள் பாதுகாப்பு நன்னடத்தை […]
