ரேஷன் அரிசி கடத்திச் சென்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நாட்றம்பள்ளி பகுதியில் ரேஷன் அரிசி கடத்துவதாக மாவட்ட வழங்கல் அலுவலர் விஜயனுக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் அப்பகுதிக்கு விரைந்து சென்ற குடிமைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அந்த வழியாக வந்த லாரியை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்ததில் ஐந்து டன் ரேஷன்க் கடையின் […]
