கொரோனா தடுப்பூசி உடனடியாக போட வேண்டும் என கூறி பொதுமக்கள் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றிலிருந்து பொதுமக்களை பாதுகாக்கும் பொருட்டு அனைவரும் தடுப்பூசி போட வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்திலுள்ள நெசவாளர் காலனி ஆரம்ப சுகாதார நிலையத்தில் டோக்கன்கள் அடிப்படையில் தடுப்பூசி போடும் பணியானது நடைபெற்று கொண்டிருக்கிறது. இதனையடுத்து 18 வயது முதல் 44 வயதுக்குட்பட்ட பலர் டோக்கன் அடிப்படையில் நீண்ட […]
