அறந்தாங்கி அருகே தண்ணீர் டம்ளரை திருடியதற்காக காவலர் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்துள்ள மேற்பனைக்காடுபேட்ட பகுதியில் தண்ணீர் பந்தல் வைக்கப்பட்டுள்ளது. இப்பந்தலில் வைக்கப்பட்ட தண்ணீர் டம்ளர்கள் அனைத்தும் ஒவ்வொன்றாக காணாமல் போகி உள்ளது. இதைத்தொடர்ந்து அப்பகுதியில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டது.இந்த நிலையில் கடந்த சனி கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் இரண்டு காவலர்கள் தண்ணீர் டம்ளரை திருடிச் செல்லும் காட்சி அந்த சிசிடிவி கேமராவில் பதிவானது. இதையடுத்து தகவல் அறிந்த காவல் கண்காணிப்பாளர் […]
