நடிகர் கமல்ஹாசன் என்ன வேண்டுமானாலும் பேச அவர் என்ன ஜனாதிபதியா இல்லை கவர்னரா என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார். நடைபெற இருக்கும் 4 சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தில் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. 4 தொகுதிகளில் ஒன்றான அரவக்குறிச்சி தொகுதியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளருக்கு ஆதரவாக கமல் பிரசாரம் செய்த போது , சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என்று கூறியது பெரும் சர்சையை ஏற்படுத்தியது. பிஜேபி […]
