பிரதமர் மோடி கேதார்நாத் புனித குகையில் நீண்ட நேர தியானம் முடித்த பின் எனக்கும் கேதார்நாத்துக்கும் உணர்வுப்பூர்வமான உறவு உள்ளது என்று கூறினார். பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக அறிவிக்கப்பட்டு, ஏற்கனவே 6 கட்ட தேர்தல் நடந்து முடிந்த நிலையில் இன்று இறுதிக்கட்ட தேர்தல் காலை 7 மணிக்கு தொடங்கி நடந்து வருகிறது. இந்த தேர்தலுக்காக தொடர் தேர்தல் பிரச்சாரம் செய்து வந்த பிரதமர் மோடி, உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத் கோவிலுக்கு நேற்று பாரம்பரிய உடையில் நடந்து சென்று வழிபாடு செய்தார். […]
