மருத்துவமனை வளாகத்தில் நடந்த கார் குண்டு வெடிப்பில் 30 பேர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டில் லோகர் மாகாணத்தில் தலைநகரில் மருத்துவமனை ஒன்று உள்ளது. இந்த மருத்துவமனையின் வாசலில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு கார் திடீரென வெடித்து சிதறியுள்ளது. இந்த சம்பவம் நேற்று மாலை சுமார் 6.50 மணியளவில் நிகழ்ந்துள்ளது. இந்த குண்டு வெடிப்பில் சுமார் 30 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 70 பேர் படுகாயமடைந்துள்ளனர். அவர்களில் பலர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று […]
