ஜனநாயக நாடுகளின் பட்டியலில் இந்தியா பின்தங்கியுள்ளதைத் தொடர்ந்து, அதிகாரத்தில் உள்ளவர்கள் நாட்டை துண்டாடுவதாக சிதம்பரம் குற்றஞ்சாட்டியுள்ளார். ஜனநாயக நாடுகளில் மனித உரிமைகள் எப்படி காக்கப்படுகிறது என்பது குறித்த பட்டியலை ‘தி எகனாமிக் இன்டெலிஜன்ஸ் யூனிட்’ என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது. இதில், இந்தியா 10 இடங்கள் கீழே சென்று 51ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. ஜனநாயக முறை குறைந்ததற்கு மனித உரிமைகள் பறிக்கப்படுவதே காரணம் என்று ‘தி எகனாமிக் இன்டெலிஜன்ஸ் யூனிட்’ கருத்து தெரிவித்தது. தேர்தல் நடத்தும் முறை, பன்முகத்தன்மை, […]
