பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் மற்றும் காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டத்திலுள்ள அச்சங்குளம் கிராமத்தில் மாரியம்மாள் பட்டாசு ஆலை அமைந்துள்ளது. இந்த ஆலையில் திடீரென ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 12 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். மேலும் இந்த விபத்தில் 30க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர். இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், விருதுநகர் மாவட்டத்தில் […]
