மர்ம விலங்கின் நடமாட்டம் இருப்பதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள புளியம்பட்டி பகுதியில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான 4 ஆடுகள் மற்றும் 1 கோழி ஆகியவற்றை கடந்த 2 நாட்களுக்கு முன்பு மர்ம விலங்கு கடித்து கொன்றது. இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு செய்துள்ளனர். அப்போது தெருநாய்கள் கடித்ததால் ஆடுகள் மற்றும் கோழி இறந்ததாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் புளியம்பட்டி பகுதியில் […]
