தற்போதைய கிரிக்கெட்டில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்துவதற்கே அத்தனை சிரமங்கள் மேற்கொள்ள வேண்டும். எதிரணியின் கிண்டல், கேலி, கோபம் என பேட்ஸ்மேன் பந்துவீச்சாளரின் கனவத்தைத் திசைதிருப்ப முயன்றுகொண்டே இருப்பார். ஒவ்வொரு பவுண்டரியும் பந்துவீச்சாளரின் நம்பிக்கையை சுக்குநூறாக்கிவிடும். ஆனால் கும்ப்ளே 26.3 ஓவர்களை வீசி 74 ரன்கள் மட்டுமே கொடுத்து 10 விக்கெட்டுகளையும் கைப்பற்றியது எளிதான விஷயமல்ல. இந்த சம்பவம் நடந்து 21 ஆண்டுகள் கடந்தும், இந்திய ரசிகர்கள் கும்ப்ளே பத்து விக்கெட்டுகள் வீழ்த்திய நாளின் நினைவுகளைக் கொண்டாடி வருகின்றனர். […]
