கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து மீண்டவர்கள் பிளாஸ்மா தானம் செய்தால் அவர்களுக்கு ரூபாய் ஐந்தாயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என ஆந்திர மாநில அரசு தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறையில் பிளாஸ்மா சிகிச்சை முறை என்பது பல மாநிலங்களில் பயன்படுத்தக்கூடிய முக்கிய சிகிச்சை முறையாகும். இந்த சிகிச்சைக்கு மனித உடம்பில் இருக்கக்கூடிய பிளாஸ்மா செல் தேவைப்படுவதால் […]
