Categories
தேசிய செய்திகள்

சற்றுமுன்… அரசு பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்து… 5 பெண்கள் உட்பட 9பேர் பரிதாப பலி!!

ஆந்திராவில் ஆற்றுப் பாலத்தை கடந்தபோது அரசு பேருந்து கவிழ்ந்ததில் 5 பெண்கள் உட்பட 9பேர் இறந்துள்ளனர்.. ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் ஏலூர் அருகே சிறிய பாலத்தின் வழியாக அரசு பேருந்து சென்றபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து தலைகுப்புற ஆற்றில் கவிழ்ந்துள்ளது. இதையடுத்து இதனை கண்ட அந்த பகுதி மக்கள் உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளார்கள்.  மீட்பு படையினர் அங்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.. இதில் 5 பெண்கள் உட்பட 9பேர் பரிதாபமாக […]

Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கு தளர்வுக்கு பின்… முதன்முறையாக அளித்த அனுமதி… திருப்பதியில் திரளும் பக்தர்கள் கூட்டம்…!!

திருப்பதியில் ஊரடங்கு தளர்வுக்கு பிறகு முதல் முறையாக 50 ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப் பட்டுள்ளனர். ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள திருப்பதியில் ஊரடங்கு தளர்வு பின்னர் முதலில் 33 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்பின் படிப்படியாக அதிகளவு பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் திருப்பதியில் இலவச தரிசனத்தில் 20 ஆயிரம் பக்தர்கள், 300 ரூபாய் கட்டணத்தில் 20 ஆயிரம் பக்தர்கள், வி.ஐ.பி தரிசனம் மற்றும் ஸ்ரீவாணி […]

Categories
தேசிய செய்திகள்

புதுவகை மர்ம நோய்… அரிசியில் பூச்சுகொல்லி மருந்து… அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு….!!

ஆந்திராவில் புதிதாக தாக்கியுள்ள நோய்க்கான காரணம் குறித்து ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். ஆந்திர பிரதேச மாநிலம் கோதாவரி மாவட்டத்தில் உள்ள ஏலுரு என்ற பகுதியில் கடந்த டிசம்பர் மாதம் 5-ஆம் தேதி முதல் அப்பகுதியில் வசித்து வரும் பலருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதனால் முதியவர் முதல் குழந்தைகள் வரை என மொத்தம் 615 பேருக்கு தலை சுற்றல், வாந்தி, நடுக்கம், மயக்கம், குமட்டல், கீழே விழுதல் போன்ற அறிகுறிகள் தென்பட்டதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். […]

Categories
தேசிய செய்திகள்

வேறு யாருக்கும் கிடைக்க கூடாது…. கொலை செய்யப்பட்ட காதலி… தற்கொலை செய்த மாணவன்… ஆந்திராவில் பரபரப்பு…!!

காதல் திருமணம் செய்த மாணவியை குத்திக் கொலை செய்துவிட்டு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பெனுமூர் தூர்பள்ளி பகுதியில் சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு காயத்ரி என்ற கல்லூரி படிக்கும் மகள் உள்ளார். இவரும் பூதலப்பட்டு சித்தமாகுல பள்ளியில் வசித்து வரும் டெல்லி பாபு என்ற பிளஸ்டூ மாணவனும் இரண்டு வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் அங்குள்ள ஒரு கோவிலில் கடந்த 2 […]

Categories
தேசிய செய்திகள்

போலீஸ் ஸ்டேஷனுக்குள் சரக்கு அடிக்கும் காவலர்கள்… வைரலாகும் வீடியோ..!!

இந்துபூர் நகர போலீஸ் ஸ்டேஷனுக்குள் மதுகுடித்த  3 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.  ஆந்திர பிரதேச மாநிலத்தில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள், மணல் மற்றும் போதைப் பொருள்கள் கடத்தப்படுவதைத் தடுக்க அம்மாநில அரசு போதைப் பொருள் கடத்தல் தடுப்பு சிறப்புப் பிரிவை அமைத்தது. அதன் அடிப்படையில், எல்லைப் பகுதிகளில் சட்டத்திற்கு விரோதமாக விற்பனை செய்யப்படும் மதுபாட்டில்களை பறிமுதல் செய்து வருகிறது. அவ்வாறு பறிமுதல் செய்யப்படும் மது பாட்டில்கள் அனைத்துமே போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு வரப்பட்டு ஒரு தனி அறைகளில் […]

Categories
தேசிய செய்திகள்

மீண்டும் அதிர்ச்சி சம்பவம்… நாட்டு வெடிகுண்டை கடித்த பசு மாட்டின் வாய் கிழிந்த சோகம்..!!

ஆந்திராவில் மேய்ச்சலுக்கு சென்ற இடத்தில், அங்கிருந்த நாட்டு வெடிகுண்டை கடித்த பசு மாட்டின் வாய் கிழிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரப் பிரதேச மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் பஞ்சனி என்ற பகுதியில் பசு மாடு ஒன்று மேய்ச்சலுக்காக காட்டுப்பகுதிக்கு சென்றது.. இந்தநிலையில் மாட்டின் வாய் பகுதி கொடூரமாக கிழிந்து தொங்கிய நிலையில், இரத்தம் சொட்ட சொட்ட பரிதாபமாக திரும்பி வந்தது.. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மாட்டின் உரிமையாளர், இது குறித்து போலீஸ் ஸ்டேஷனில் புகாரளித்தனர்.. அந்தப் […]

Categories
தேசிய செய்திகள்

மனிதாபிமானமற்ற செயல்… ஜேசிபியின் மூலம் அடக்கம் செய்யப்பட்ட முதியவரின் உடல்..!!

ஆந்திராவில், 72 வயதுடைய முதியவர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நிலையில், அவரது உடலை ஜேசிபியின் உதவியோடு அகற்றி, நகராட்சி ஊழியர்கள் புதைத்துள்ளனர்.. ஆந்திரப் பிரதேச மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் உதயம்புரம் தாலுகா பலசா நகராட்சிக்குட்பட்ட பகுதியில் 72 வயதுடைய முதியவர் ஒருவர் கொரோனாவால் உயிரிழந்தார். மரணத்திற்குப் பின்பே அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது பரிசோதனையில் உறுதியானது. இதனையடுத்து அந்த முதியவரின் உடலை தொற்று பரவிவிடுமோ என பயந்து ஜேசிபி இயந்திரத்தின் மூலம் நகராட்சி ஊழியர்கள் தூக்கிச் […]

Categories
தேசிய செய்திகள்

“உடனடியா ஆலையை மூடுங்க”… விஷவாயுவால் உயிரிழந்தோரின் உடல்களை வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள்!!

விஷவாயு கசிந்த ஆலையை மூடக்கோரி பொதுமக்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விஷவாயு தாக்கி உயிரிழந்த 3 பேரின் உடலை தனியார் ஆலைக்கு முன்பு வைத்து ஆர்ப்பாட்டத்தை நடத்தி வருகின்றனர். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே உள்ள ஆர்.ஆர்.வெங்கடாபுரம் கிராமத்தின் அருகே எல்.ஜி.பாலிமர்ஸ் இன்டஸ்ட்ரி என்ற ரசாயன ஆலை இயங்கி வருகிறது. இந்த ரசாயன ஆலையில் நேற்று முன்தினம் அதிகாலை திடீரென ஸ்ட்ரைன் வாயுக்கசிவு ஏற்பட்டது. விஷவாயு கசிவால் 200க்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர். இரண்டு குழந்தை உட்பட […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

12 பேரை கொன்னுட்டீங்க…! ”ஒழுங்கா 50 கோடி கொடுங்க” சாட்டையடி உத்தரவு …!!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் விஷவாயு கசிவால் ஏற்பட்ட விபத்து தொடர்பாக  தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே உள்ள ஆர்.ஆர்.வெங்கடாபுரம் கிராமத்தின் அருகே எல்.ஜி.பாலிமர்ஸ் இன்டஸ்ட்ரி என்ற ரசாயன ஆலை இயங்கி வருகிறது. இந்த ரசாயன ஆலையில் நேற்று அதிகாலை திடீரென வாயுக்கசிவு ஏற்பட இதனால் ஆலையை சுற்றியுள்ள 10 கிராமங்களில் மக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தனர். காற்றில் கலந்து பரவிய விஷ வாயுவால் கிராமத்தினருக்கு கண்கள் எரிச்சல் மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

விஷவாயு கசிவு விவகாரம்: உரிய விளக்கம் அளிக்க மத்திய அரசுக்கு பசுமை தீர்ப்பாயம் நோட்டீஸ்..!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் விஷவாயு கசிவால் ஏற்பட்ட விபத்து தொடர்பாக மத்திய அரசுக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. விஷவாயு கசிவு ஏற்பட்ட தனியார் நிறுவனத்திற்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதை விவகாரத்தில் மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், எல்.ஜி பாலிமர்ஸ் நிறுவனம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மக்களை தாக்கிய கொடிய விஷவாயு: நேற்று ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் விஷவாயு கசிவால் 5,000-திற்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர். இரண்டு குழந்தை உட்பட 13 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

விஷவாயு காரணமாக பலர் உயிரிழந்த செய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்: முதல்வர் பழனிசாமி!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் ரசாயன ஆலையில் விஷவாயு கசிவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். விஷவாயு கசிவு காரணமாக பலர் உயிரிழந்தனர் என்ற செய்தி அறிந்து மிகுந்த வேதனையும், துயரமும் அடைந்தேன் என அவர் கூறியுள்ளார். விஷவாயு சம்பவத்தில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அனைவரும் குணமடைய பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் விஷவாயு கசிவால் 5,000-திற்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர். ஒரு குழந்தை உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளதாக […]

Categories
தேசிய செய்திகள்

விசாகப்பட்டினத்தில் விஷவாயு தாக்கிய சம்பவம்:: தேசிய பேரிடர் மேலாண்மையுடன் மோடி ஆலோசனை..!

விசாகப்பட்டினம் விஷவாயு கசிவு சம்பவம் தொடர்பாக பேரிடர் மேலாண்மை அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார். மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர். ஆலோசனையை தொடர்ந்து, விசாகப்பட்டினம் விஷவாயு கசிவு தொடர்பாக ஆந்திர முதல்வருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். மாநில அரசுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என பிரதமர் உறுதி அளித்துள்ளார். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் விஷவாயு கசிவால் 2,000-திற்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர். […]

Categories
தேசிய செய்திகள்

விசாகப்பட்டினம் விஷவாயு சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது… ராகுல் காந்தி..!

விசாகப்பட்டினம் விஷவாயு சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவிப்பதாகவும், பாதிக்கப்பட்டோர் குணமடைய பிரார்த்திக்கிறேன் என்றும் அவர் கூறியுள்ளார். விஷவாயுவால் பாதிக்கப்பட்ட பகுதி பொதுமக்களுக்கு காங்கிரஸ் தொண்டர்கள் உதவ வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் விஷவாயு கசிவால் 2,000-திற்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர். ஒரு குழந்தை உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விசாகப்பட்டினம் அருகே உள்ள ஆர்.ஆர்.வெங்கடாபுரம் கிராமத்தின் அருகே எல்.ஜி.பாலிமர்ஸ் இன்டஸ்ட்ரி […]

Categories
தேசிய செய்திகள்

ஆந்திராவில் கொரோனாவுக்கு முதல் பலி… உறுதி செய்த சுகாதாரத்துறை!

ஆந்திரப்பிரதேசத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக முதல்முறையாக ஒருவர் பலியாகியுள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் காட்டு தீயைப்போல வேகமாக பரவி வருகின்றது. இதனை இப்படியே விட்டுவிட்டால் நாடு பெரும் இழப்பை சந்தித்துவிடும் என்பதால், மிகப்பெரிய பாதிப்பை தவிர்க்கும் வகையில் மத்திய அரசு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளது. இருப்பினும் நாளுக்குநாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. இன்று மதிய நிலவரப்படி கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் 2500-ஐ தாண்டியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.இந்நிலையில், […]

Categories
தேசிய செய்திகள்

நண்பா எழுந்துருடா… உனக்கு ஒன்னும் இல்ல… உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய குரங்கு… வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ!

ஆந்திரப் பிரதேசத்தில் மின்சாரம் தாக்கியதில் உயிருக்குப் போராடி கொண்டிருந்த குரங்கை மற்றொரு குரங்கு தனது உயிரைப் பணயம் வைத்து மீட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் நந்திகாமா (Nandigama) என்ற இடத்தில் ஏராளமான அனுமன் மந்திகள் (குரங்குகள்) உள்ளன. அப்பகுதியில் சுற்றித்திரிந்து விளையாடுவதை இந்த குரங்குகள் வழக்கமாக கொண்டுள்ளது. இந்நிலையில் இதில் ஒரு குரங்கு உயரமான மின்கம்பத்தைக் கடந்து செல்லும் போது திடீரென மின்சாரம் தாக்கியதில் மயக்கமடைந்து, தலைகீழாக தொங்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தது. இதனைப் […]

Categories
தேசிய செய்திகள்

இரு சுவருக்கிடையே… மூச்சு திணறி சிக்கி தவித்த சிறுவர்கள்..!!

ஆந்திராவில் இரண்டு குறுகிய சுவர்களுக்கு இடையே தவறி விழுந்த 2 சிறுவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். ஆந்திர மாநிலம்  குண்டூர் மாவட்டம் நூலகப்பேட்டையில் இருக்கும் பள்ளியின் சுவரையொட்டி ஒரு குறுகிய சுற்றுச்சுவர் உள்ளது. இந்தநிலையில் அந்த சுவரில் மேல் ஏறி இரு பள்ளி சிறுவர்கள் ஜாலியாக விளையாடிக் கொண்டிருந்தனர். இருவருக்கும் வயது 4. அப்போது எதிர்பாராதவிதமாக ரமணபாபு மற்றும் முன்னா ஆகியோர் இரு சுவர்களுக்கு இடையில் தவறி விழுந்து விட்டனர். இதையடுத்து இருவரும் கதறி அழுதுள்ளனர். அதைதொடர்ந்து சத்தம் […]

Categories
தேசிய செய்திகள்

செவிலியர்களுக்கு பாலியல் தொல்லை… காவல் நிலையத்திலிருந்து தப்பிய மருத்துவர்..!!

ஆந்திராவில் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட இருந்த அரசு மருத்துவர் காவல்நிலையத்தில் இருந்து தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரப்பிரதேச மாநிலம் நெல்லூர் மாவட்டம் உதயகிரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரவீந்திரநாத் தாகூர் என்பவன் மருத்துவராகப் பணியாற்றி வந்தான். இவன் அங்கு வேலை பார்க்கும் செவிலியர்கள் இருவருக்கு அடிக்கடி தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறி, வியாழக்கிழமை (நேற்று) செவிலியர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் அவனை அடித்து, உதைத்து போலீசில் ஒப்படைத்தனர். இதையடுத்து […]

Categories
தேசிய செய்திகள்

வேட்பாளர்களுக்கு எச்சரிக்கை… ஓட்டுக்கு பணம் கொடுத்தால் 3 ஆண்டு சிறை… ஆந்திர அரசு அதிரடி!

ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் யாராவது ஓட்டுக்கு பணம் கொடுத்தால் 3 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும் வகையில் சட்டத்திருத்தம் செய்யப்படவுள்ளது. ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக இன்று  அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் நிறைவடைந்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நானி, அடுத்த மாதம் (மார்ச்) 15-ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார். மேலும் பஞ்சாயத்து ராஜ் சட்டத்தில் சில திருத்தங்களை […]

Categories
தேசிய செய்திகள்

ஆந்திர மாநில எம்.எல்.ஏ. ஒருவரைக் கொன்ற வழக்கு – சரணடைந்த மாவோயிஸ்ட்..!!

ஆந்திர மாநில எம்.எல்.ஏ. ஒருவரைக் கொன்ற வழக்கில் சந்தேகிக்கப்படுபவர், ஒடிசாவின் மல்கன்கிரி மாவட்டத்தில் இன்று காவல்துறை முன் சரணடைந்தார். ஆந்திர மாநில எம்.எல்.ஏ. ஒருவரைக் கொன்ற வழக்கில், குற்றவாளியைக் கண்டுபிடித்து தருபவருக்கு 4 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என ஒடிசா அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில், ஒடிசாவின் மல்கன்கிரி மாவட்டத்தில் இன்று காவல்துறை முன் மாவோயிஸ்ட் ஜிப்ரோ ஹபிகா சரணடைந்தார். இதுகுறித்து, மல்கன்கிரி காவல் கண்காணிப்பாளர் ரிஷிகேஷ் டி கிலாரி கூறும்போது, ‘2012ஆம் ஆண்டு தடைசெய்யப்பட்ட சிபிஐ (மாவோயிஸ்ட்) […]

Categories
தேசிய செய்திகள்

பிளாஸ்டிக் ஒழிப்பில் திருமலை திருப்பதி!

பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்கும் வகையில், நகராட்சி நிர்வாகம் பல்வேறு புதிய முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது. இயற்கை எழில் கொஞ்சும் சமூகத்தை உருவாக்குவதே அண்ணல் காந்தியடிகளின் கனவாக இருந்தது. இந்த கனவுக்கு தடையாக இருப்பது பிளாஸ்டிக் ஆகும். பிளாஸ்டிக்களுக்கு எதிரான போராட்டத்தை ஆந்திரப் பிரதேசத்தின் ஆன்மீக தலைநகரான திருப்பதி நகராட்சி தற்போது தொடங்கியுள்ளது. இதனால், பிளாஸ்டிக் பயன்பாடு வெகுவாகக் குறைந்துள்ளது. உள்ளூர் வாசிகள் 3 லட்சத்து 50 ஆயிரம் பேரை தவிர்த்து, திருப்பதி கோயிலுக்கு நாள்தோறும் லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

4 வயது சிறுமியை சீரழித்த சிறுவர்கள்… பாய்ந்தது போக்ஸோ..!!

நான்கு வயது சிறுமியை இரண்டு சிறுவர்கள் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரா மாநிலம் காக்கிநாடா நகரத்தைச் சேர்ந்த நான்கு வயது சிறுமி ஒருவர் வீட்டில் தனியாக இருந்தபோது, இரு சிறுவர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இதையடுத்து சிறுமியின் தாயார் காவல் நிலையத்தில் புகாரளித்தார். புகாரின் அடிப்படையில் எட்டு வயது சிறுவனையும் 12 சிறுவனையும் காவல் துறையினர் கைது செய்தனர். இருவர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், மருத்துவப் […]

Categories
தேசிய செய்திகள்

நெஞ்சில் பாய்ந்த பந்து – சிறுவன் உயிரிழந்த பரிதாபம்..!!

பேட்ஸ்மேன் அடித்த பந்து தாக்கியதில் சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரப் பிரதேசத்தில் கர்னூல் மாவட்டத்தில் உள்ள அடோனி பகுதியில் வசித்துவந்த மோஹின் (10) என்ற சிறுவன், தனது நண்பர்களுடன் கிரிக்கெட் மைதானத்திற்குச் சென்றுள்ளான். அப்போது, மைதானத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போட்டியைக் காண தனது இரண்டு நண்பர்களுடன் சென்றுள்ளான். அப்போது, பேட்ஸ்மேன் அடித்த பந்து நேராக மோஹின் நெஞ்சில் பட்டுள்ளது. இதில் பலத்த காயமடைந்த மோஹின், மைதானத்திலேயே சுருண்டு விழுந்துள்ளான். இதைப் பார்த்த மோஹின் […]

Categories
தேசிய செய்திகள்

பஸ் யாத்திரா செல்ல முயன்ற சந்திரபாபு நாயுடு கைது.!!

விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக பஸ் யாத்திரா மேற்கொள்ளவிருந்த முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டார். ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி உருவாக்கிய ஜி.என். ராவ் குழு ஆந்திராவிற்கு மூன்று தலைநகரங்களை உருவாக்க வேண்டும் என அறிக்கை சமர்ப்பித்தது. அதன்படி அமராவதி சட்டப்பேரவை தலைநகராகவும், விசாகப்பட்டினம் நிர்வாகத் தலைநகராகவும், கர்னூல் நீதித்துறை தலைநகராகவும் பிரிக்கப்பட ஆலோசனை செய்யப்படும் என்று கடந்த டிசம்பர் 17ஆம் தேதி ஜெகன்மோகன் ரெட்டி கூறியிருந்தார். ஆனால், அமராவதியை தலைநகராக்கும் திட்டத்திற்காக நிலங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

‘CAA – NRC குறித்த ஆக்கப்பூர்வமான விவாதம் தேவை’ – வெங்கையா நாயுடு..!

குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவை குறித்த ஆக்கப்பூர்வமான விவாதம் தேவை என குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். ஆந்திரப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் மாரி சன்னா ரெட்டியின் 100ஆவது பிறந்தநாளை முன்னிட்டு ஹைதராபாத்தில் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில், கலந்துகொண்டு உரையாற்றிய குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, “குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவை குறித்து மக்கள் ஆக்கப்பூர்வமாக விவாதிக்க வேண்டும். சட்டம் எதற்கு கொண்டு வரப்பட்டது, […]

Categories
தேசிய செய்திகள்

பெட்ரோல் போடுங்கள்… வெங்காயத்தை வெல்லுங்கள்… போட்டிக்கு தயாரா..!!

ஆந்திராவிலுள்ள பெட்ரோல் பங்கில், பெட்ரோல் வாங்குபவர்களுக்கு குலுக்கல் முறையில் வெங்காயம் பரிசாக அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வெங்காயத்தின் விலை சமீப ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு விண்ணை முட்டியுள்ளது. ஒரு கிலோ வெங்காயம் ரூபாய் 180 முதல் 220 வரை விற்கப்பட்டுவருகிறது. இதனால் பெரும்பாலான பொதுமக்கள் வெங்காயம் வாங்காமல் சமையல் செய்து வருகின்றனர். ஆனாலும் சமையலில்  வெங்காயம் முக்கிய பங்கு வகிக்கிறது. அதிக விலைக்கு வெங்காயம் விற்கப்படுவதை சமூக ஊடகங்களில் பலரும் மீம்ஸ் செய்து நக்கலடித்து வருகின்றனர். இந்நிலையில், […]

Categories
தேசிய செய்திகள்

மது விற்பனையை குறைக்க ..!! ஆந்திர அரசு புதிய நடவடிக்கை

ஆந்திராவில் மதுபானங்களை விற்பனை செய்ய ப்ரீ பெய்டு கார்டு முறையை அறிமுகப்படுத்த ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது.   லிக்கர் கார்டு என்ற பெயரில் ஏடிஎம் கார்டை போன்று இருக்கும் இதில் மைக்ரோசிப் பொருத்தப்பட்டிருக்கும்.ஆதார்,பான் கார்டு நகலை வழங்கி ஐந்தாயிரம் ரூபாய் கொடுத்து கார்டு ஐப் பெற்றுக் கொள்ள வேண்டும். 25 வயது நிரம்பியவர்களுக்கு மட்டுமே மதுபான அட்டை வழங்கப்படும். அட்டையை வாங்கினால் ஒரே நேரத்தில் அட்டையில் உள்ள பணம் முழுவதற்கும் மது வாங்கமுடியாது. ஒரு அட்டையை […]

Categories
தேசிய செய்திகள்

எதிர்க்கட்சிகளிடம் பணிந்த ஜெகன் மோகன் அரசு..!!

முதலமைச்சரின் அலுவலகம் மற்றும் குடியிருப்பை புதுப்பிக்க ரூ.3.10 கோடி ஒதுக்கப்பட்ட விவகாரத்தில், எதிர்க்கட்சிகளின் விமர்சனத்தை அடுத்து ஜெகன் மோகன் அரசு திட்டத்தை கைவிட்டது. ஆந்திராவில் ஜெகன் மோன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஜெகன் மோகன் ரெட்டி அண்மையில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், முதலமைச்சரின் குடியிருப்பு மற்றும் அலுவலகம் ரூ.3 கோடியே 10 லட்சம் செலவில் புதுப்பிக்கப்படும் என கூறியிருந்தார். இது எதிர்கட்சிகளால் விவாதப் பொருளாக மாறிவிட்டது. மக்கள் […]

Categories
தேசிய செய்திகள்

ஆந்திர பள்ளி மாணவர்களுக்கு நிகழ்ந்த கொடுமை… பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சி..!!

ஆந்திராவில் 2 பள்ளி மாணவர்கள் ஆசிரியரால் கொடுமைப்படுத்தப்பட்ட சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திர பிரதேச மாநிலத்தின், அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் இரண்டு மாணவர்கள், பள்ளி ஆசிரியர்களால் மனிதாபிமானமற்ற முறையில் தண்டிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் இரண்டு கால்களும் கயிற்றால் கட்டப்பட்டு உள்ளது. இதுகுறித்து பள்ளி ஊழியர்களிடம் விசாரித்த போது, அந்த இரண்டு மாணவர்களும் அதீத சேட்டை செய்கின்றனர். ஆகவே கயிற்றால் கட்டி வைத்துள்ளோம் என்று பதில் உரைத்துள்ளனர். இதுகுறித்த காணொலிக் காட்சிகள் […]

Categories
தேசிய செய்திகள்

ஊடகங்கள் மீது கடுமையான உத்தரவு… திரும்பப்பெறும் வரை ஓயமாட்டோம்… சந்திரபாபு நாயுடு எச்சரிக்கை..!!

ஊடகங்கள் மீது மாநில அரசு செயல்படுத்திவரும் கடுமையான உத்தரவுகளை திரும்பப்பெறும் வரை ஓயப்போவதில்லை என முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு எச்சரித்துள்ளார். தொலைக்காட்சிகள், பத்திரிக்கைகள், வார இதழ்கள், சமூக ஊடகங்கள் ஆகியவற்றில் அரசு குறித்து பொய்யான, தவறான, அவதூறு பரப்பும் செய்திகளை வெளியிட்டால் வழக்கு தொடரப்பட்டு கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஆந்திரா அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அவ்வண்ணமே ஊடக நிறுவனங்கள் மீது வழக்குத் தொடர அரசுத் துறைகளின் செயலாளர்களுக்கு அதிகாரம் வழங்கிய உத்தரவு தொடர்பாக ஒய்.எஸ். […]

Categories
தேசிய செய்திகள்

ஆந்திர முன்னாள் சபாநாயகர் தூக்கு போட்டு தற்கொலை..!!

ஆந்திர முன்னாள் சபாநாயகர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆந்திரபிரதேச மாநிலத்தின்  முன்னாள் சபாநாயகர் கோடல சிவபிரசாத் ராவ். தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த சிவபிரசாத் கடந்த 2016 ஆம் ஆண்டு சந்திரபாபு நாயுடு ஆட்சியின் போது சட்டப்பேரவை சபாநாயகராக இருந்துள்ளார். இந்நிலையில்   ஐதராபாத்தில் உள்ள தனது வீட்டில் சிவபிரசாத் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இவர் தற்கொலை செய்துள்ளதால் குடும்பத்தினர் அதிர்ச்சியில் உள்ளனர். தற்கொலை குறித்த காரணம் தெரியவில்லை.  முன்னதாக இவர் மீது சட்ட பேரவையில் இருந்து […]

Categories
மாநில செய்திகள்

‘கொலை மிரட்டல்’ இளம்பெண் பூச்சி மருந்து குடித்து தற்கொலை…!!!!

ஆந்திர மாநிலத்தில் கொலை மிரட்டல் விட்டதால் இளம்பெண் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   ஆந்திர மாநிலத்தில் மேற்கு கோதாவரி மாவட்டத்தை சேர்ந்த ரத்னஸ்ரீ  என்ற 18 வயது இளம் பெண்ணின் பெற்றோர் சமீபத்தில் உயிரிழந்ததால் தனது பாட்டி வெங்கம்மாவுடன் வாழ்ந்து வந்தார். இந்நிலையில் கடந்த ஒருவருடமாக கல்லூரி சென்று வருகையில் வமிசெட்டி என்கின்ற இளைஞர் ரத்னஸ்ரீயை அடிக்கடி தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில்  சிறிது வேலையாக வெங்கம்மா வீட்டில் இருந்து வெளியில் சென்றதால்  ரத்னஸ்ரீ மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.இதை எப்படியோ தெரிந்த கொண்ட வமிசெட்டி அவர் வீட்டிற்குள் சென்று ரத்னஸ்ரீயை கொலை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் ஆந்திர பெண்கள் 2 பேர் பேருந்து மோதி பலி..!!

சென்னை  நந்தனம் அருகே  மாநகர பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் ஆந்திராவை சேர்ந்த 2 பெண்கள் உயிரிழந்தனர்.  ஆந்திராவை சேர்ந்த சுதா, நாகலெட்சுமி, பவானி ஆகிய மூவரும் சென்னை வேளச்சேரியில் தங்கியிருந்து,  எழும்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் 3 பேரும் இன்று காலை 9 மணி அளவில் ஒரே பைக்கில் சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது கிழக்கு தாம்பரத்தில் இருந்து பாரிமுனை நோக்கி மாநகர பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது இவர்கள் பேருந்தை […]

Categories
தேசிய செய்திகள்

விமானநிலையத்தில் கெடுபிடி “சலுகைகளை கட்” சோதனை செய்யப்பட்ட முன்னாள் முதல்வர் ..!!

ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு சலுகைகளை மறுத்த  விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் கெடுபிடி செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், ஆந்திர பிரதேச முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடுக்கு மாவோயிஸ்டு அச்சுறுத்தல்கள் இருப்பதால் இசட்பிளஸ் பாதுகாப்பு அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. இதனால் அவர் எங்கு சென்றாலும் அவருக்கு பாதுகாப்பாக துப்பாக்கி ஏந்திய போலீசாரும் உடன் செல்வார்கள்.இந்நிலையில் நேற்று இரவு  விஜயவாடா விமான நிலையத்துக்கு சந்திரபாபு  நாயுடன்  ஆந்திர மாநிலத்தின் முன்னாள் உள்துறை அமைச்சர் சின்ன  ராஜப்பாவும் வந்திருந்தார். சந்திரநாயுடுக்கு இசட்பிளஸ் பாதுகாப்பு இருப்பதால் நேரடியாக வி.ஐ.பி.க்கள் […]

Categories
சென்னை பல்சுவை மாவட்ட செய்திகள்

கடும் வறட்சி… நாளுக்கு நாள் அதிகரிக்கும் காய்கறிகள் விலை… கோயம்பேட்டில் 25 முதல் 40% வரை அதிகரிப்பு..!!

வறட்சியால் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் காய்கறிகளின் விலை 25 முதல் 40% வரை அதிகரித்துள்ளது. கோடை வெயிலின் கொடூர தாக்கத்தினால் ஏரிகள், குளங்கள், மற்றும் ஆறுகளில் தண்ணீர் வற்றி வறண்டு காணப்படுகிறது. சில கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இந்த வறட்சியால் விவசாயிகள் பெரிதும் கவலைப்படுகின்றனர். முக்கியமாக காய்கறிகளை உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்கள் இந்த வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளனர். வறட்சி காரணமாக காய்கறிகளின் விளைச்சல் மிக குறைந்துள்ளது. இதன் காரணமாக சென்னையில் கோயம்பேடு காய்கறி சந்தையில் காய்கறிகளின் […]

Categories
தேசிய செய்திகள்

கோவா கடற்கரையில் செல்பி எடுக்க முயன்று உயிரை விட்ட பெண் டாக்டர்.!!

கோவா கடற்கரையில் செல்பி எடுக்க முயன்ற இளம் பெண் மருத்துவர்  ராட்சஅலையில் சிக்கி  உயிரிழந்தார்.  ஆந்திராவில் ஜக்கையா பேட்டையை  சேர்ந்தவரான இளம்பெண் மருத்துவர் ரம்யா கிருஷ்ணா,  கோவா அரசு மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். இவர் நேற்று மாலை கோவா கடற்கரைக்கு சென்றார். அங்கு அவர் கடலை பின்புலமாகக் கொண்டு  தமது செல்போனில் செல்பி எடுக்க முயன்றார். அப்போது திடீரென எழுந்த ராட்சத கடல் அலை அவரை கடலுக்குள் இழுத்துச் சென்றது. உடனே இதனை கண்ட மீனவர்கள் கடலில் குதித்து அவரை மீட்க போராடினர். போலீசாரும் அவர்களுடன் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“ஆந்திர மாநில முதல்வர் துரைமுருகன் சந்திப்பு” உறுதியாகிறதா 3_ஆவது அணி…!!

ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவை திமுக_வின் பொருளாளர் துரைமுருகன் இன்று சந்தித்து பேசியுள்ளது அரசியலில் கவனிக்கத்தக்கதாக பார்க்கப்படுகின்றது. மக்களவை தேர்தலின் வாக்குப்பதிவு நிறைவடையும் சூழலில் பல்வேறு முக்கிய திருப்பமாக அரசியல் சந்திப்பு நடைபெற்று வருகின்றது. அதில் ஆந்திர மாநிலத்தின் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை திமுக_வின் பொருளாளர் துரைமுருகன் இன்று சந்தித்து பேசியுள்ளது அரசியலில் கவனிக்கத்தக்கதாக பார்க்கப்படுகின்து. நேற்றைய தினம் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் திமுக தலைவர் முக. ஸ்டாலினை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். இது நட்பு ரீதியிலான சந்திப்பு என்று […]

Categories
தேசிய செய்திகள்

கரையை கடக்கும் பானி புயல்….. ஆந்திர துறைமுகங்களில் 10-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்….!!

புயல் கரையை கடக்க தொடங்கியதால் ஆந்திராவில் 2 துறைமுகங்களில் 10-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வங்கக் கடலில் உருவாகியுள்ள பானி புயல் அதிதீவிர புயலாக மாறியுள்ள நிலையில் இன்று ஒடிஸா மாநிலத்தின்  புரி மாவட்ட தெற்கு கடலோரப் பகுதியின் கோபால்பூர் மற்றும் சந்த்பாலிக்கு இடையே கரையைக் கடக்க துவங்கியது. கரையை கடக்கும் போது, 1 மணிக்கு 200 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும் என்றும், இந்த புயல் காலை 8மணி முதல் 11மணி வரை கரையை கடக்கும் எனறும் வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்த […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள் வானிலை

தமிழகம் , ஆந்திரா_விற்கு எச்சரிக்கை….. “மிக கனமழை_க்கு வாய்ப்பு” வானிலை ஆய்வு மையம் தகவல்…!!

வங்க கடலில் உருவாகியுள்ள உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதிஅடுத்த 24 மணி நேரத்தில் வலுவடைந்து புயலாக மாறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்ட தகவலில் ,  வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி பின்பு வலுப்பெற்று  புயலாக மாற வாய்ப்புள்ளது என்றும், இந்த புயலுக்கு ஃபனி என பெயரிடப்படும் என்றும் தெரிவித்திருந்தது. மேலும் வருகின்ற […]

Categories
தேசிய செய்திகள்

டிக்கெட் பரிசோதகருக்கு பிளேடால் வெட்டு….. இரண்டு தமிழர்கள் கைது…!!

திருப்பதியில் இரயிலில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்ததை கண்டித்ததால் டிக்கெட் பரிசோதகரை, பிளேடால் தாக்கியதாக  இருவரை  போலீசார் கைது செய்தனர். திருப்பதி – சென்னை நோக்கி  பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட  இரயில் ரயில் ரேணிகுண்டா இரயில் நிலையத்தில் நின்றது. இதையடுத்து டிக்கெட் பரிசோதகர் உமாமகேஸ்வரன் அனைத்து பயணிகளிடமும் டிக்கெட் பரிசோதனையில் ஈடுபட்டார். பரிசோதனையின் போது வேலூர் மாவட்டம் அரக்கோணத்தை சேர்ந்த வெங்கடேஷ், விஜயன் ஆகிய இருவர்  டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாக டிக்கெட் பரிசோதகர் அவர்களை  கடுமையாக திட்டியதால் ஆத்திரம் அடைந்த  […]

Categories
தேசிய செய்திகள்

“நாங்கள் அதிரடி படையினர்” ரூ.1,70,00,000 பறித்த கும்பல்….!!

அதிரடிப்படை என்று தொழிலதிபரின் காரில் சோதனையிட்டு, ரூ.1.70 கோடி பணத்தை பறித்துச் சென்ற மோசடி கும்பல் சிக்கியது. பாராளுமன்றத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகிய நாளில் இருந்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது. இதையடுத்து தேர்தலில் வாக்காளர்களுக்கு பரிசுப் பொருள் மற்றும் பணப்பட்டுவாடாவை தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படை ,  போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் முறையான ஆவணமில்லாதவற்றை பறிமுதல் செய்கின்றனர். இதை தங்களுக்கு சாதகமாக்கி சோதனை என்ற பெயரில் பணம் பறிக்கும் கும்பலும் சில இடங்களில் கைவரிசை காட்டுகிறது. […]

Categories

Tech |