ஆந்திரா ஸ்பெஷல் பருப்பு பொடி தேவையான பொருட்கள் : பொட்டுக்கடலை – 1 கப் காய்ந்த மிளகாய் – 7 பூண்டு – 4 பல் சீரகம் – 1/2 டேபிள்ஸ்பூன் உப்பு – தேவையான அளவு செய்முறை: ஒரு கடாயில் காய்ந்த மிளகாய் மற்றும் சீரகத்தை போட்டு முதலில் வறுத்தெடுத்துக் கொள்ள வேண்டும். பின் மிக்ஸியில் மிளகாய் , சீரகம், பூண்டு, பொட்டுக்கடலை, உப்பு சேர்த்து நைஸாக அரைத்தெடுத்தால் சுவையான ஆந்திரா ஸ்பெஷல் பருப்பு பொடி தயார் !!!
