மார்ச் 29ஆம் தேதி திமுகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெறுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது. திராவிட இயக்கத்தின் முதுபெரும் தலைவர்களில் ஒருவரான பேராசிரியர் அன்பழகன் கடந்த 7ஆம் தேதி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். திமுக ஆரம்பித்த முதல் தேர்தலிலேயே 1957 தேர்தலில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பேராசிரியர் கஅன்பழகன் 1977 இல் இருந்து திமுகவின் பொதுச் செயலாளராக இருந்துள்ளார். கிட்டத்தட்ட 43 ஆண்டுகளாக பொதுச்செயலாளர் பதவி வகித்த அவரின் இறப்பு திமுகவினரை உலுக்கியுள்ள நிலையில் வருகின்ற 29 இல் அண்ணா […]
