களியக்காவிளை சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வில்சன் கொலை செய்யப்பட்ட வழக்கில் கொலையாளிகளுடன் தொடர்பிலிருந்த மேலும் 11 பேரை பிடித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வரும் சூழலில், கொலையாளிகள் குறித்து தகவல் தெரிவிப்போருக்கான வெகுமதியை ரூ.7 லட்சமாக உயர்த்தி தமிழ்நாடு காவல் துறை அறிவித்துள்ளது. சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் கொலையாளிகள் குறித்து தகவல் அளிப்போருக்கான வெகுமதியை உயர்த்தி காவல் துறை அறிவித்துள்ளது.கன்னியாகுமரி மாவட்டம் படந்தாலுமூடு சோதனைச் சாவடியில் ஜனவரி 8ஆம் தேதி இரவு பணியிலிருந்த […]
