வெளிநாடுகளில் வேலை செய்யும் இந்தியர்கள் கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 79 பில்லியன் டாலர்கள் தொகையை இந்தியாவிற்கு அனுப்பியுள்ளனர். வெளிநாடுகளில் வேலை செய்பவர்கள் அவரவர்களின் சொந்த நாட்டுக்கு அனுப்பும் தொகையின் பட்டியலை உலக வங்கியானது 2018_ஆம் ஆண்டை கணக்கில் எடுத்துக்கொண்டு புள்ளி விவரங்களை வெளியிட்டது. அதில் உலகத்திலேயே இந்தியர்கள் தான் வெளிநாடுகளில் பணி புரிந்து கொண்டு அதிக தொகையை இந்திய நாட்டுக்கு அனுப்பியுள்ளனர். இது குறித்து வெளியிட்டுள்ள பட்டியல் விவரத்தில் , இந்தியா கடந்த 2018ஆம் ஆண்டில் சுமார் 79 பில்லியன் டாலர்கள் தொகையை பெற்று முதலிடத்தில் உள்ளது. மேலும் […]
