தாமிரபரணி ஆற்றங்கரையில் கிடைத்த மாரியம்மன் வெண்கல சிலையை நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் வைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முறப்பநாடு கைலாசநாதர் ஆலயம் முன்பு ஓடும் தாமிரபரணி ஆற்றில் மாரியம்மன் வெண்கல சிலையானது கிடைத்துள்ளது. இந்த சிலையின் வலது கையில் உடுக்கையும், அதே கையில் வாளும் இருகின்றது. இந்த சிலையின் இடது கையானது உடைக்கப்பட்ட நிலையில் காணப்பட்டுள்ளது. இந்த சிலையானது சுமார் 2 அடி உயரம் கொண்டதாகவும், பிற்கால வார்ப்பு மூலம் செய்யப்பட்ட சிலை […]
