தோனியின் ஓய்வு குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். நட்சத்திரங்களைப் போல் எண்ணிலடங்காத ரசிகர்களை சம்பாதித்து உள்ள பிரபல கிரிக்கெட் வீரர் எம்எஸ் தோனி இன்டர்நேஷனல் கிரிக்கெட் விளையாட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இவரது இந்த அறிவிப்பு பலருக்கு அதிர்ச்சியையும், பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து பல பிரபலங்களும், திரையுலகினரும் அரசியல் கட்சி தலைவர்களும், தோனி ஓய்வு குறித்து தங்களது கருத்துகளை சமூக வலைதளங்களில் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர். […]
