சாலையோரம் நிறுத்தியிருந்த ஆம்புலன்ஸ் வாகனம் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அரண்மனை குளம் ரோடு பகுதியில் தங்கசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் சொந்தமாக ஆம்புலன்ஸ் வைத்துள்ளார். இந்நிலையில் தங்கசாமி தனது ஆம்புலன்சை நாகல் நகர் ரவுண்டானா அருகில் இருக்கும் சாலை ஓரத்தில் நிறுத்தி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். சிறிது நேரத்தில் ஆம்புலன்ஸ் தீப்பற்றி எரிவதை பார்த்த பொதுமக்கள் தங்கசாமிக்கும், தீயணைப்பு வீரர்களுக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி தீயணைப்பு […]
