பொதுமக்கள் வசதிக்காக 108 ஆம்புலன்ஸ் சேவை வசதி செய்து தரவேண்டும் என அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள தாயில்பட்டியில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையமாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இங்கு சுப்ரமணியபுரம், தாயில்பட்டி, சல்வார்பட்டி, வெற்றிலையூரணி, மீனாட்சிபுரம், கனஞ்சம்பட்டி, வெம்பக்கோட்டை, போன்ற பகுதிகளில் உள்ள கிராம மக்கள் தினமும் சிகிச்சைக்காக தரம் உயர்த்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வருகின்றனர். இந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு குழந்தைகளை பெற்ற தாய்மார்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் அதிக […]
