அம்பேத்கரின் 63ஆவது நினைவு நாளை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் அம்பேத்கரின் சிலைக்கு அரசியல் தலைவர்களும் பல்வேறு இயக்கங்களும் பொதுமக்களும் மலர்த் தூவி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். திருவள்ளூர்: சட்ட மாமேதை அம்பேத்கரின் 63ஆவது நினைவு நாளையொட்டி திருவள்ளூர் மாவட்ட திமுக சார்பில் திருவள்ளூர் பேருந்து நிலையம் அருகே மாவட்டச் செயலாளர் ஆவடி சாமு நாசர், திருவள்ளூர் தொகுதி எம்எல்ஏ விஜி ராஜேந்திரன், பூந்தமல்லி தொகுதி எம்எல்ஏ கிருஷ்ணசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். […]
