மதுரையில் 30க்கும் மேற்பட்ட வீடுகளில் திருடிய நபரை சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் போலீசார் கைது செய்தனர். மதுரையில் உள்ள மகாத்மா காந்தி நகரை சேர்ந்தவர் ஜெயக்குமாரி. இவர் வீட்டின் கதவை தாழ்ப்பாள் போடாமல் நன்கு தூங்கிக்கொண்டு இருந்ததாக தெரிகிறது. இதனை நோட்டமிட்ட மர்ம நபர் வீட்டுக்குள் நுழைந்து 70 ஆயிரம் ரொக்க பணம், 2 சவரன் நகை மற்றும் வெள்ளி பொருட்களை திருடிச் சென்றுள்ளான். இதையடுத்து ஜெயக்குமாரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து […]
