உலகின் நுரையீரல் என்று வர்ணிக்கப்படும் அமேசான் காடுகள் கொரோனா ஊரடங்கை பயன்படுத்தி பல லட்சம் மரங்கள் வெட்டப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் இருந்து கொரோனா காரணமாக உலகின் பல்வேறு நாடுகள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. இதனை பயன்படுத்திக்கொண்ட கார்ப்பரேட் நிறுவனங்கள் பிரேசிலில் உள்ள அமேசான் காடுகளை வேகமாக அழிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் அமேசான் காடுகளை அளிப்பது 64% அளவுக்கு அதிகரித்துள்ளதாக பிரேசிலின் தேசிய விண்வெளி ஆராய்ச்சி மையம் கூறியுள்ளது. […]
