தொடர் கனமழை காரணத்தினால் தண்ணீர் நிரம்பி வழிகின்ற ஏரியை அமைச்சர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருகின்றது. இதனால் இம்மாவட்டத்தில் இருக்கும் பெரும்பாலான ஏரிகள் நிரம்பி தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருக்கிறது. இந்நிலையில் இதன் காரணத்தினால் பொதுமக்கள் சிரமப்படும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இதனையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பாக பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு அரசு அதிகாரிகள் ஆய்வு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் தமிழகத்தில் […]
