கலெக்டர் அலுவலகத்தில் வைத்து வாக்கு எண்ணிக்கை மைய அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடைபெற்றுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை மைய அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு கலெக்டர் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றுள்ளது. இதற்கு தேர்தல் பார்வையாளர் எம். பிரதீப்குமார் தலைமை தாங்கியுள்ளார். அப்போது அவர் கூறியதாவது, இம்மாவட்டத்தில் 19-ஆம் தேதி வாக்குப்பதிவும் மற்றும் 22-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை அலுவலர்கள் அனைவரும் தேர்தல் நடைமுறைகளை கட்டாயமாக பின்பற்ற […]
