மாற்றுத்திறனாளிகள் தாலுகா அலுவலகத்தில் அடுத்தடுத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள உத்தரமேரூர் தாலுக்கா அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டமானது மாவட்ட தலைவர் ஏழுமலை என்பவரின் தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட ஏராளமான மாற்றுத் திறனாளிகள் தனியார் துறையில் 5% வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் எனவும், உதவி தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர். இதனை அடுத்து உத்திரமேரூர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் […]
