விஷ வண்டுகள் கடித்ததால் மாற்றுத்திறனாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள செட்டிபாளையம் பகுதியில் இருக்கும் பூங்காவை சீரமைக்கும் பணியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 71 பணியாளர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இந்நிலையில் அப்பகுதியில் இருந்த வேப்ப மரத்தில் கூடு கட்டியிருந்த விஷ வண்டுகள் இந்த பணியாளர்களை துரத்தி சென்று கடித்துள்ளன. இதனையடுத்து மாற்றுத்திறனாளியான கார்த்தி என்பவர் ஓட முடியாமல் இருந்ததால் விஷ வண்டுகள் அவரை சூழ்ந்து கடித்துள்ளது. […]
