பெரியாரை பற்றி பேசும்போது யோசித்து சிந்தித்து பேசவேண்டும் என்று நண்பர் ரஜினிக்கு முக ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். துக்ளக் இதழின் 50ஆவது ஆண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டு பேசினார். அப்போது ராமருக்கு காலணி மாலை அணிவித்து பெரியார் தலைமையில் திராவிடர் கழகத்தினர் ஊர்வலம் நடத்தியதாகவும், அந்த செய்தியை தைரியமாக வெளியிட்ட ஒரே இதழ் துக்ளக்தான் எனவும் புகழ்ந்தார். ரஜினியின் இந்தப் பேச்சு சமூகவலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மாநிலம் முழுவதும் ரஜினிக்கு எதிராக காவல் நிலையங்களில் […]
