அரசு மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்றவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மதுரை மாவட்டத்திலுள்ள பள்ளப்பட்டி, புதுப்பட்டி, கொட்டாம்பட்டி பகுதிகளில் அரசு மதுபானங்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் ஒன்று கிடைத்துள்ளது, இந்த தகவலின் பேரில் காவல்துறையினர் அப்பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சோதனையில்கொட்டாம்பட்டியை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவர் அரசு மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்றது தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்து அவரிடமிருந்து 23 மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து […]
