மது பிரியர்கள் மாவட்ட எல்லையை ஆபத்தான முறையில் கடப்பதால் உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாததால் மது பிரியர்கள் மாவட்ட எல்லையை கடந்து சென்று மதுவினை வாங்குகின்றனர். இந்நிலையில் மடத்துக்குளம் பகுதியில் இருக்கும் டாஸ்மாக் கடைக்கு செல்வதற்காக மது பிரியர்கள் ஆபத்தான முறையில் அமராவதி ஆற்றை கடந்து செல்கின்றனர். அதிலும் சிலர் ராஜாவாய்க்காலை கடந்து செல்லும்போது தனது சைக்கிளை தூக்கிக்கொண்டு குறுக்கே போடப்பட்டிருக்கும் கட்டையின் மீது நடந்து செல்கின்றனர். இவ்வாறு ஆபத்தான […]
