சட்ட விரோதமாக குக்கரில் சாராயம் காய்ச்சிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள காமநாயக்கன்பாளையம் பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் அவ்வழியாக வேகமாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். இதனையடுத்து மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் ஒரு கேனில் கள்ளச்சாராயம் வைத்திருந்தது காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. அதன் பின் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர் வதம்பச்சேரி பகுதியில் வசிக்கும் சுந்தர்ராஜ் என்பது தெரியவந்துள்ளது. மேலும் சுந்தர்ராஜ் வருமானம் […]
