தனது விலை உயர்ந்த நாய் காணாமல் போயுள்ளதாகவும், அதனைக் கண்டுபிடித்து தருபவர்களுக்கு ஒரு லட்சம் ரொக்கப்பரிசு வழங்கப்படும் எனவும் நபர் ஒருவர் கூறியிருந்த நிலையில், அவரின் நாய் மீண்டும் கிடைத்துள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்தவர் சதீஷ். இவர் தனது வீட்டில் வளர்த்துவந்த நாயை காணவில்லை என்று கூறி ஹனுமந்தநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அவர் கொடுத்திருந்த புகாரில், தனது நாய் அலாஸ்கன் மாலமுட்டே (alaskan malamute) வகையைச் சேர்ந்தது என்றும், அதன் மதிப்பு ரூ. […]
