ஆயுத பூஜையை முன்னிட்டு பூஜைக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக பொதுமக்கள் கடை வீதிகளில் அலைமோதியுள்ளனர். தமிழகத்தில் பெரிதும் போற்றப்படும் பண்டிகைகளில் ஆயுத பூஜை விழா சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். இந்த விழாவை தமிழக மக்கள் சீரும் சிறப்புமாக அவரவர் இல்லத்தில் கொண்டாடி வருவது வழக்கமாக இருக்கிறது. இந்நாளில் கல்வி கற்கும் அனைவரும் தங்களின் புத்தகங்கள் மற்றும் வாகனங்களுக்கு பொட்டு வைத்து சரஸ்வதி தாய்க்கு அவல், பூமாலை, கொண்டக்கடலை, பொரி மற்றும் பழங்கள் படையல் வைத்து ஆயுத பூஜை […]
