ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூர் அட்கோ பகுதியில் 20க்கும் மேற்பட்ட கடைகள் அமைந்துள்ளது. இந்த கடைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலத்தில் கட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஓசூர் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் அந்த கடைகளை அகற்ற வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவின் பேரில் மாநகராட்சி நகரமைப்பு பிரிவு அதிகாரிகள் ஊழியர்களுடனும் பொக்லைன் எந்திரத்துடனும் கடைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அந்த சமயத்தில் அங்கு ஏராளமான […]
