பீகாரில் AK 47 துப்பாக்கிகள், கையெறி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் இன்னும் 3 அல்லது 4 நாட்களில் சரணடைய உள்ளதாக எம்எல்ஏ ஆனந்த குமார் சிங் வீடியோ வெளியிட்டுள்ளார். பீகார் மாநிலம் பாட்னா தொகுதியில் சுயேச்சை எம்எல்ஏவான ஆனந்த குமார் சிங் வீட்டில் ஆயுதங்கள் பதுக்கபட்டிருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்களுடன் அங்கு விரைந்த காவல்துறையினர் ஆனந்த் சிங் வீட்டிலிருந்து ஏகே47 கையெறி குண்டு உள்ளிட்ட ஆயுதங்களை கைப்பற்றினர். சோதனை […]
