சென்னையில் திருமணம், மருத்துவம் தவிர மற்ற காரணங்களுக்காக ஏற்கனவே பெற்ற இ-பாஸ் செல்லாது, மறுபதிவு செய்ய வேண்டும் என காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் இன்று நள்ளிரவு 12 மணி முதல் 30ம் தேதி வரை 12 நாட்கள் முழு ஊரடங்கு மிக கடுமையாக பின்பற்றப்படும் என அறிவித்துள்ளார். மக்கள் வசிக்கும் இடத்தில் இருந்து 2 கி.மீ தூரத்துக்குள் உள்ள கடைகளுக்கு மட்டும் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. […]
