200க்கும் அதிகமான பயங்கரவாதிகள் காஷ்மீருக்குள் ஊடுருவ முயற்சி செய்கின்றனர் என்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் தெரிவித்துள்ளார். காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370 மற்றும் 35ஏ-வை நீக்கி மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாகவும் பிரித்து மத்திய அரசு உத்தரவிட்டது. இதை தொடர்ந்து காஷ்மீரில் அசாம்பாவித சம்பவம் எதுவும் நடக்காமல் இருக்க பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான பாதுகாப்பு படை வீரர்கள் ஜம்மு முழுவதும் குவிக்கப்பட்டுள்ளனர்.அங்கு பல்வேறு பகுதிகளில் 144 தடை உத்தரவு , செல்போன், இணையதள சேவை இரத்து செய்து அரசியல் கட்சி […]
