இந்திய கிரிக்கெட் வீரர் அஜிங்க்யா ரஹானே ட்விட்டரில் வீடியோ பதிவிட்டு அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் இன்று 73-ஆவது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடியேற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அதே போல சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் முதல்வர் பழனிசாமி தேசியக்கொடியை ஏற்றி வைத்து மக்களுக்கு உரையாற்றினார். இந்த சுதந்திரதின நன்னாளில் எந்த வித அசம்பாவிதங்களும் ஏற்படாமல் இருக்க நாடு முழுவதும் பாதுகாப்பு […]
