ஸ்டாலின் குறை கூறுவதையே வாடிக்கையாக கொண்டுள்ளார் என்றும், அரசு எப்படி செயல்படுகிறது என்பது தெரியாது என்றும் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி முதலீடுகளை கொண்டு வர அமெரிக்கா லண்டன், துபாய் என 13 நாட்கள் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்தார். முதல்வரின் இந்த பயணம் குறித்து ஸ்டாலின் முதல்வர் வெறுங்கையுடன் திரும்பியதாக விமர்சனம் செய்தார். பயணம் பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில் இன்று கோவையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய […]
