எங்களது வேகப்பந்து வீச்சாளர்களுக்கும், விராட் கோலிக்கும் இடையிலான பரபரப்பான போட்டியாக இருக்கும் என்று தென்னாப்பிரிக்கா பேட்டர் எய்டன் மார்க்ரம் கூறியுள்ளார். 8ஆவது ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 12 போட்டிகள் ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் இன்று இந்திய கிரிக்கெட் அணி இன்று அக்.,30ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. இந்திய அணி தொடர்ச்சியாக 2 போட்டிகளில் (பாகிஸ்தான், நெதர்லாந்து) வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்து வீறுநடை போடுகிறது. […]
