நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடுவோருக்கான விருப்பமனு விநியோகம் நிறைவு பெற்றுள்ளது. தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு வருகின்ற அக்டோபர் 21-ல் இடைத்தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அதிமுக நேற்று காலை 10 மணி முதல் விக்கிரவாண்டி, நாங்குநேரி தேர்தலில் போட்டியிட விரும்புவர்களுக்கு விருப்பமனு அளித்து வந்தது. நேற்று வரை மொத்தம் 27 பேர் விருப்ப மனு அளித்திருந்தனர். அதில் அதிகபட்சமாக நாங்குநேரி தொகுதியில் திரைப்பட இயக்குனர் நாஞ்சில் பி.சி அன்பழகன், கே ஆர் […]
