பொய் பேசுவதற்கு மு.க.ஸ்டாலினுக்கு நோபல் பரிசு வழங்கலாம் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். அதிமுக- பாஜக கூட்டணி சார்பில் தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் வேட்பாளராக போட்டியிடும் பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜனை ஆதரித்து கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்த வேனில் தேர்தல் பரப்புரை செய்தார். அப்போது பேசிய தமிழக முதலமைச்சர் பழனிசாமி, “மக்களவைத் தேர்தலில் மத்தியில் நிலையான ஆட்சி அமைய வேண்டும். திறமையான பாரத பிரதமரை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும். அப்படி திறமையான, […]
