Categories
மாநில செய்திகள்

83 ஆயிரம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கம் – முதலமைச்சர் பெருமிதம்!

 அரசு இதுவரை மேற்கொண்டுள்ள ஒப்பந்தங்களின்படி 83 ஆயிரம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளதாக தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னை தரமணியில், டிஎல்ஃஎப் நிறுவனம், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகத்துடன் டிட்கோ இணைந்து செயல்படுத்தும் புதிய தகவல் தொழில்நுட்ப பூங்காவிற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து திட்ட மாதிரியையும் அவர் திறந்து வைத்தார். தொழில்நுட்ப நிறுவனங்கள் நிறைந்திருக்கும் தரமணி பகுதியில், 5,000 கோடி ரூபாய் மதிப்பில், 68 லட்சம் சதுர அடி பரப்பளவில், பல […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

‘திமுகவில் வாரிசு அரசியல்தான் நிலைத்திருக்கும்’ – ஜெயக்குமார் விமர்சனம்..!!

அதிமுகவில் கடைக்கோடித் தொண்டன் கூட தலைமை பொறுப்புக்கு வரலாம், ஆனால் திமுகவில் வாரிசு அரசியல்தான் நிலைத்திருக்கும் என்று அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 124ஆவது பிறந்தநாளையொட்டி, சென்னை கடற்கரை சாலையில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், பாண்டியராஜன், பெஞ்சமின் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், பெண்களுக்காக தனிப்படை அமைத்தவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் எனவும் 27 தலைமுறைகளாக படைப் பொறுப்பில் அவரது […]

Categories
தேனி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

பறிபோன பதவி…. ”ஆப்படித்த நீதிமன்றம்”…. டென்ஷனில் OPS ….!!

தேனி மாவட்ட ஆவின் நிர்வாகக்குழு தலைவராக ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ராஜா நியமிக்கப்பட்டதை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. தேனி மாவட்டத்தின் ஆவின் நிர்வாகக்குழு தலைவராக துணை முதலவர் ஓபிஎஸ் சகோதரர் ஓ.ராஜா மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டதற்கு எதிராக மாவட்டத்தின் பழனிசெட்டிபட்டி தொடக்க பால் கூட்டுறவு சங்க தலைவர் அமாவாசை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில் ஆவின் விதிமுறைகளை மீறி ஓ.ராஜா_வும், ஆவின் நிர்வாகக்குழு உறுப்பினர்களும்  நியமிக்கப்பட்டதாகவும்,  தலைவர், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பாஜக ஸ்கெட்ச்….. ”ரஜினியை தாக்கும் அமைச்சர்கள்…. தட்டி தூக்கிய எடப்பாடி …!!

பெரியார் விவகாரத்தில் நடிகர் ரஜினியை தமிழக அமைச்சர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். கடந்த 20ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக அமைச்சர்கள் முக்கியமானவர்கள் 8 பேரை அழைத்து பேசியிருக்கிறார். முக்கியமானவர்கள் லிஸ்டில் ஓபிஎஸ் இல்லாதது தான் ஹைலைட். இந்த கூட்டம் கிட்டதட்ட 4 மணி நேரம் நடந்து இருக்கிறது. இந்த கூட்டத்தில் பல முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் வெளிப்பாடுதான் ரஜினியை திடீரென அதிமுக […]

Categories
அரசியல்

பெரியார் கருத்துக்களை கோபுரத்துல வைக்கனும்…… அவரால தான் இந்த இடத்துக்கு வந்தேன்….. OPS அனல் பறக்க பேச்சு….!!

தந்தை பெரியாரின் கருத்துக்கள் கோபுரத்தில் வைக்கப்பட வேண்டியவை என்று துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.  சென்னை புத்தக கண்காட்சி நிறைவு விழாவில் கலந்து கொண்ட ஓ பன்னீர்செல்வம் புத்தக கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த அரங்குகளை பார்வையிட்டார். பின்  கீழடி அகழாய்வு என வைக்கப்பட்ட பொருட்களை பார்வையிட்ட பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், இளம் எழுத்தாளர்கள் தங்கள் சிந்தனைகளை நாட்டு மக்களுக்கு கற்று கொடுக்கும் பணியை எந்த சூழ்நிலையிலும் நிறுத்தக்கூடாது என்று கேட்டுக்கொண்டார். மேலும் தன்னை போன்றவர்கள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ரஜினி ஆர்.எஸ்.எஸ் திட்டத்தின்படி இயங்குகிறார் – வேல்முருகன் குற்றச்சாட்டு

ரஜினி தமிழ்நாட்டிலுள்ள பல பிரச்னைகள் குறித்து வாய் திறக்காமல் மவுனியாக இருந்துவிட்டு மக்களை மடைமாற்றுவதற்காக தற்போது ஆர்எஸ்எஸ் திட்டத்தின்படி பெரியார் பற்றி அவதூறாக பேசியுள்ளார் என தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் குற்றஞ்சாட்டியுள்ளார். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ரவிச்சந்திரனை அவரது இல்லத்தில் சந்தித்த பின் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் செய்தியாளார்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது, கால் நூற்றாண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்துவரும் ராஜீவ் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 7 பேர் விடுதலை குறித்து […]

Categories
அரசியல்

கலைஞர் பண்ணல….. நாங்களும் பண்ணமாட்டோம்….. மனச்சாட்சியுடன் பேசுங்க…. அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் பேச்சு…!!

கருணாநிதி முதல்வராக இருந்த போது  தஞ்சை பெரிய கோவிலில் ஏன் தமிழில் குடமுழுக்கு நடத்த வில்லை என்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார். தஞ்சை கீழவாசலில் நடந்த எம்ஜிஆர் பிறந்த நாள் விழாவில் பங்கேற்று பேசிய அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம் தஞ்சை குடமுழுக்கு குறித்து பேசினார். அதில்,  1997இல் தஞ்சை பெரிய கோவிலில் கும்பாபிஷேகத்தை அன்றைக்கு முதல்வராக இருந்த கலைஞர் கருணாநிதி அவர்கள் தமிழில் கும்பாபிஷேகம் நடத்த வில்லை. இன்றைக்கு மு க […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக…. கேட்காமலையே அள்ளி கொடுக்கும்….. செங்கோட்டையன் புகழாரம்…!!

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி கேட்காமலேயே மக்களுக்கு அனைத்தையும் வழங்கும் ஆட்சி என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.  சென்னை கோடம்பாக்கத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 103 ஆவது பிறந்த நாள் விழா நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு  பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சென்னை அதிமுகவின் கோட்டையாக மாறியுள்ளது என்றும், இனி வரும் உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுகவை எந்த கட்சியாலும்  வெற்றி பெற முடியாது என்றும் தெரிவித்துள்ளார். எடப்பாடி […]

Categories
மாநில செய்திகள்

டாஸ்மாக் கடை குறித்து தமிழ்நாடு அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி …..!!

டாஸ்மாக் கடை அமைக்கக் கூடாது என கிராம பஞ்சாயத்துகள் தீர்மானம் நிறைவேற்றினால் அதை செயல்படுத்த ஏன் புதிய சட்டம் இயற்றக் கூடாது என்று தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. டாஸ்மாக் கடை இடமாற்றம் செய்வது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தொடரப்பட்ட வழக்கு விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு அந்த வழக்கினை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி. சாஹி, நீதிபதி கார்த்திகேயன், நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு […]

Categories
சேலம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

முதலமைச்சருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு …!!

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலம் வருவதையொட்டி அவருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஜனவரி 21ஆம் தேதி சென்னையிலிருந்து விமானம் மூலமாக, சேலம் வரவுள்ளார். இதனால், அவருக்கு இசட் பிளஸ் (Z+) பாதுகாப்பு வழங்கும்படி, சம்பந்தப்பட்ட விமான நிலையங்கள், காவல் கண்காணிப்பு மண்டல காவல் துறை ஆகியவற்றிற்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. முதலமைச்சரின் உயிருக்கு ஆபத்து உள்ளதால், அவருக்கு இசட் பிளஸ் பிரிவு பாதுகாப்பு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளதாக காவல் துறை அலுவலர்கள் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தன்னலமற்ற உழைப்பால் தான் முதல்வர் ஆனேன்….. ஜெயலலிதா பேரவையில் EPS பேச்சு….!!

ஜெயலலிதா ஆட்சியில் தன்னலமற்று உழைத்த  உழைப்பால் தான் இந்த பதவிக்கு வந்ததாகமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதா பேரவை ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய முதலமைச்சர் பழனிசாமி, அரசு திட்டங்களை கிராமம்  முதல் நகரங்கள் வரை மக்களுக்கு துரித நேரத்தில் செயல்படுத்த வேண்டும் என்று தொண்டர்களை கேட்டுக் கொண்டதோடு, அது குறித்த விளக்கத்தையும் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுமென்றார். தொடர்ந்து பேசிய  அவர், மாண்புமிகு முன்னாள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

‘ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராக அமைச்சரவைக் கூட்டத்தில் கொள்கை முடிவு எடுங்கள்’ – ஸ்டாலின்

இன்று கூடும் தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டத்தில் ஹைட்ரோகார்பன் திட்டங்களை அனுமதிக்க மாட்டோம் என்று கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள், குடியுரிமை திருத்த சட்ட மசோதா போன்ற பரபரப்பான அரசியல் சூழ்நிலைகளில், இன்று தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் கூடவுள்ளது. இக்கூட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்த மத்திய அரசின் புதிய உத்தரவுக்கு எதிராக கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எத்தனைக் கட்சிதான் மாறுவார்… குழப்பத்தில் திருநாவுக்கரசர்’ – கடம்பூர் ராஜூ கிண்டல்

 பல்வேறு கட்சிகளுக்குச் சென்று திரும்பிய திருநாவுக்கரசர் தற்போது எங்கே இருக்கின்றார் என்பது தெரியாமல் குழம்பி போயிருப்பதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ கிண்டலாக விமர்சித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் மேலத்தட்டப்பாறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் இன்று நடைபெற்றது. இம்முகாமில் செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கலந்துகொண்டு, குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி, தூத்துக்குடி மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணிகளைத் தொடங்கி வைத்தார். அதன் பின்னர் […]

Categories
அரசியல் சென்னை

“ஹைட்ரோ கார்பன்” சுற்றுசூழல் அனுமதியும் தேவையில்லை….. மக்கள் கருத்தும் தேவையில்லை….. மத்திய அரசின் முடிவுக்கு ஸ்டாலின் கண்டனம்….!!

இன்று நடைபெற உள்ள தமிழக அமைச்சரவை கூட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள், குடியுரிமை திருத்த மசோதா சட்டம் உள்ளிட்ட பரபரப்பான அரசியல் சூழ்நிலை நிலவி வரும் இவ்வேளையில், தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் விவசாயிகளை அடியோடு அழிக்க பார்க்கும் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக கொள்கை முடிவு எடுக்க வேண்டும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பாஜகவுடன் சேர்ந்து அதிமுகவும் மூழ்கப் போகிறது – திருநாவுக்கரசர் சாடல்

பாஜக மூழ்கும் படகு, அதில் ஏறி பயணம் செய்துவரும் அதிமுக, பாஜகவுடன் சேர்ந்து அடுத்த தேர்தலில் மூழ்கப் போகிறது என்று காங்கிரஸ் எம்.பி.திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் திருச்சி மக்களவை உறுப்பினர் திருநாவுக்கரசர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலை பொறுத்தவரை திமுக காங்கிரஸ் கூட்டணியில் காங்கிரஸ் கேட்ட பல்வேறு இடங்கள் கிடைக்கவில்லை. அதனால், ஏற்பட்ட பிரச்னைகளால் திமுக, காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தனர். தற்போது, திமுக தலைவர் ஸ்டாலினால் இந்தப் […]

Categories
மாநில செய்திகள்

வேஷ்டியை மடித்துக்கட்டி….. தலைப்பாகையுடன் முதலவர்…. வெங்கையா பாராட்டு ..!!

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வயலில் இறங்கி வேலைசெய்வதைப் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது என குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு பாராட்டியுள்ளார். குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தனது ட்விட்டர் பக்கத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நெற்பயிருடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அந்த ட்வீட்டில் வெங்கையா நாயுடு, “கடந்து வந்த பாதையை மறக்காத தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வயலில் இறங்கி வேலை செய்வதைப் பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. இது மக்களை ஊக்கப்படுத்துகிறது. […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“சொத்து தகராறு” அதிமுக பிரமுகர் வீட்டில் கல்வீச்சு….. அண்ணன் தம்பி கைது….!!

ராணிப்பேட்டையில் அதிமுக பிரமுகர் வீட்டில்  கல்வீசி தாக்குதல் நடத்திய ஒரே குடும்பத்தை சேர்ந்த  அண்ணன் தம்பி இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.    ராணிபேட்டை மாவட்டம் கலவை பகுதியை அடுத்த மாம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஹரிதாஸ். இவர் அப்பகுதி அதிமுக பிரமுகர் ஆவார். இவருக்கும் இவரது அண்ணன் குடும்பத்தாருக்கும் இடையே நீண்ட நாட்களாக சொத்து தகராறு இருந்து வந்துள்ளது. இதையடுத்து நேற்று முன்தினம் இரவு சொத்து கேட்டு அதிமுக பிரமுகர் வீட்டின் வெளியே நின்று அவரது அண்ணன் மகன்களான […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக நிர்வாகிக்கு வந்த சோகம்…. 4 பேர் உயிரிழப்பால் அதிமுகவினர் அதிர்ச்சி …!!

ஸ்டெர்லைட் ஆலையின் அருகேயுள்ள பாலத்தின் கன்டெய்னர் லாரி காரில் மோதி விபத்துக்குள்ளனாதில் காரிலிருந்த பொள்ளாச்சி ஜெயராமனின் உறவினர்கள் உட்பட நான்கு பேர் உயிரிழந்தனர். தூத்துக்குடி – மதுரை தேசிய நெடுஞ்சாலையானது எப்போதும் பரபரப்பாக காணப்படக்கூடிய ஒன்று. இச்சாலையின் வழியே பெரிய கன்டெய்னர்களை ஏற்றிச் செல்லும் லாரிகள், கனரக வாகனங்கள் ஆகியவற்றின் போக்குவரத்து அதிகளவில் இருக்கும். இந்நிலையில், நேற்றிரவு 11:30 மணியளவில் தூத்துக்குடியிலிருந்து மதுரையை நோக்கி ஸ்டெர்லைட் ஆலைப்பகுதியின் அருகே வேலை முடிக்கப்படாத பாலத்தின் வழியாகச் சென்றுகொண்டிருந்த கன்டெய்னர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நமது அம்மா படித்தால் பொது அறிவு வளரும் – ஜெயக்குமார்..!!

முரசொலி பற்றி ரஜினி தவறாக கூறவில்லை என்றும் நமது அம்மாவை படியுங்கள் பொது அறிவு வளரும் எனவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.  மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 103ஆவது பிறந்தநாளை தமிழ்நாடு மக்கள் மிகச் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். அதிமுகவினர் எம்ஜிஆரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவியும் மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், சென்னை கிண்டியில் உள்ள எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு அமைச்சர் ஜெயக்குமார் மலர்தூவி மரியாதை செலுத்தினார். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எம்ஜிஆரின் பிறந்தநாளை முன்னிட்டு அன்னதானம் – அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்பு

மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 103ஆவது பிறந்தநாளை முன்னிட்டு ராயபுரத்தில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 103-ஆவது பிறந்தநாள் விழா இன்று தமிழ்நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டுவருகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னை ராயபுரத்தில் அதிமுக சார்பில் ஏழை, எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக கட்சி நிர்வாகிகள் ஆகியோர் கலந்துகொண்டு எம்ஜிஆரின் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதைசெலுத்தினர். பின்னர், அமைச்சர் […]

Categories
மாநில செய்திகள்

எம்ஜிஆர் சிலைக்கு முதலமைச்சர் மலர்த்தூவி மரியாதை!

எம்ஜிஆர் பிறந்த நாளை முன்னிட்டு, கிண்டி எம்ஜிஆர் பல்கலைக் கழக வளாகத்தில் உள்ள எம்ஜிஆர் திருவுருவச்சிலைக்கு முதலமைச்சர் பழனிசாமி மலர்த்தூவி மரியாதை செய்தார். முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 103ஆவது பிறந்தநாளை அதிமுக தொண்டர்கள் தமிழ்நாடு முழுவதும் கொண்டாடி வருகின்றனர். அதன் ஒரு அங்கமாக சென்னை கிண்டி எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக் கழக வளாகத்தில் உள்ள எம்ஜிஆர் திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் மலர்த்தூவி மரியாதை செலுத்தினர். அதனைத்தொடர்ந்து அமைச்சர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”பொய் பிரச்சாரம் செய்யுறாங்க” எதிர்க்கட்சிகள் மீது EPS பாய்ச்சல் …!!

தமிழ்நாட்டில் எதிர்க்கட்சிகள் பொய் பிரசாரம் செய்கின்றன என முதலமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் காரட்டூர் மணி தலைமையில் கொங்கணாபுரம் பகுதியில் திமுக, அமமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, விசிக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி சுமார் 1500க்கும் மேற்பட்ட நபர்கள் தங்களை முதலமைச்சர் முன்னிலையில் அதிமுகவில் இணைத்துக்கொண்டனர். அவர்கள் மத்தியில் பேசிய முதலமைச்சர், அதிமுக தமிழ்நாட்டில் சிறப்பாக ஆட்சி நடத்திவருகிறது. தமிழ்நாட்டில் எதிர்க்கட்சிகள் பல்வேறு பொய் பிரசாரங்களை செய்கின்றன. […]

Categories
தேனி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

குடும்பத்தினருடன் பொங்கல் கொண்டாடிய ஓ.பி.எஸ்

துணை முதலமைச்சர் ஓ.பன்னீரசெல்வம் பெரியகுளத்தில் உள்ள தனது இல்லத்தில் குடும்பத்தினருடன் பொங்கல் வைத்து கொண்டாடி மகிழ்ந்தார். தமிழர் திருநாளாம் தை முதல் நாளான இன்று தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. தை பொங்கலை அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது குடும்பத்தோடு கொண்டாடி மகிழ்ந்தனர். சேலத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது குடும்பத்தினர், அதிமுக தொண்டர்களுடன் பொங்கலை கொண்டாடினார். அதேபோல் தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பெரியகுளம் அக்ரஹாரத் தெருவில் உள்ள தனது […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பொங்கல் விழா: கிரிக்கெட் , வாலிபால் விளையாடிய அமைச்சர் …..!!

அம்மா இளைஞர் விளையாட்டு திட்டத்தில் தொடங்கப்பட்ட மைதானத்தில் தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் கிரிக்கெட் விளையாடி இளைஞர்களை உற்சாகப்படுத்தினார். தமிழ்நாட்டில் கிராமங்களில் உள்ள இளைஞர்களின் ஆரோக்கியம் மற்றும் மன வளத்தை மேம்படுத்தவும் கூட்டு மனப்பான்மையை உருவாக்கும் நோக்கில், 12 ஆயிரத்து 524 கிராம ஊராட்சிகள் மற்றும் 528 பேரூராட்சிகளில் அம்மா இளைஞர் விளையாட்டு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக தமிழ்நாடு அரசு சார்பில் 70 கோடியே 23 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் […]

Categories
மாநில செய்திகள்

துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பொங்கல் வாழ்த்து!

மதுரை செல்லும்முன் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மக்களுக்கு தனது பொங்கல் வாழ்த்தினைத் தெரிவித்தார். இன்று (ஜனவரி 14) பிறந்தநாள் கொண்டாடவிருக்கும் தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்திற்கு நேற்று அதிமுக தொண்டர்கள், பூங்கொத்து கொடுத்தும், சால்வை அணிவித்தும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த ஓ. பன்னீர்செல்வம், உலகெங்கும் வாழும் தமிழர்கள் அனைவருக்கும், பத்திரிகையாளர்களுக்கும் தனது பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்தபின் மதுரைக்குப் புறப்பட்டுச் சென்றார். பின்னர் […]

Categories
கடலூர் கரூர் கிருஷ்ணகிரி தர்மபுரி நாகப்பட்டினம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விருதுநகர் வேலூர்

தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பரிசு விநியோகம் தொடக்கம் – அலைமோதிய மக்கள் கூட்டம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து நியாய விலைக் கடைகளிலும் அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் இன்று முதல் தொடங்கியது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் இன்று முதல் தொடங்கியது. இன்று முதல் வருகின்ற 13ஆம் தேதிவரை அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் பொதுமக்களுக்கு பரிசுத் தொகுப்பு வழங்கப்படும். வழங்கப்படும் பொருட்கள் ஒருகிலோ பச்சரிசி ஒருகிலோ சர்க்கரை 2 அடி நீள கரும்பு துண்டுகள் 20 கிராம் முந்திரி, […]

Categories
மாவட்ட செய்திகள்

கொடுங்க ஐயா…. கொடுங்க…. பொங்கல் பரிசு வாங்க குவிந்த பொதுமக்கள் …!!

தமிழ்நாடு அரசு பொங்கல் பரிசு வழங்குவதாக அறிவித்ததைத் தொடர்ந்து, வாணியம்பாடியைச் சேர்ந்த நியாயவிலைக் கடைகளின் முன்பு ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். தமிழர் திருநாளாகிய பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழ்நாட்டிலுள்ள 2 கோடியே 5 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு சிறப்புப் பொங்கல் பரிசு வழங்க, தமிழ்நாடு அரசு 2,245 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. இதையடுத்து, திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள 3 லட்சத்து 12 ஆயிரத்து 971 குடும்ப அட்டைதாரர்களுக்கான பொங்கல் பரிசு, அந்தந்த கிராம நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. […]

Categories
மாநில செய்திகள்

2019 – 2020ஆம் ஆண்டிற்கு கூடுதல் நிதியாக 6,580 கோடி ஒதுக்கீடு – நிதி அமைச்சர்..!!

நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்த 2019-2020 ஆம் ஆண்டிற்கான இரண்டாவது துணை நிதிநிலை அறிக்கையில் கூடுதலாக 6,580 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2019-2020 ஆம் ஆண்டிற்கான இரண்டாவது துணை நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார். அதில், மொத்தமாக 6 ஆயிரத்து 580 கோடி ரூபாய் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2020ஆம் ஆண்டு 1000 ரூபாய் ரொக்கப் பணத்துடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு […]

Categories
மாநில செய்திகள்

தமிழ்நாடு அரசுக்கு விருது மழை! – முதலமைச்சர் பெருமிதம்!

தமிழ்நாடு அரசால் விருது மழை பொழிந்து வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேரவையில் பெருமிதம் தெரிவித்துள்ளார். ஆளுநர் உரை மீதான பதிலுரையில் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர், அரசுமுறைப் பயணமாக வெளிநாடுகளுக்கு சென்றதன் மூலம் லண்டனில் புகழ்வாய்ந்த கிங்ஸ் மருத்துவமனையின் கிளை, தமிழகத்தில் விரைவில் அமைக்கப்பட இருப்பதாகத் தெரிவித்தார். உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு பிறகு 19 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் 63 புதிய ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு அதன் மூலம் 83 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாகியிருப்பதாகக் கூறிய அவர், […]

Categories
மாநில செய்திகள்

உதவி ஆய்வாளர் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம்: முதலமைச்சரின் இரங்கலும் அறிவிப்பும்.!!

கன்னியாகுமரியில் சுட்டுக்கொல்லப்பட்ட உதவி ஆய்வாளர் வில்சன் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழ்நாடு – கேரளா எல்லையான கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை பகுதி சோதனைச்சாவடியில் காவல் துறையினர் இன்று காலை பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காரில் வந்த அடையாளம் தெரியாத இருவர், காவல் உதவி ஆய்வாளர் வில்சனை துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பினர். இதில் வில்சன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தமிழ்நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்த […]

Categories
மாநில செய்திகள்

அதிமுகவுக்கு தில் இல்லை…. எடப்பாடிக்கு தைரியம் இல்லை…. துரைமுருகன்

அதிமுக_வுக்கு தில் இல்லை என்று சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபையின் 3 ஆம் நாள் அமர்வு இன்று தொடங்கியது. அதில் குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பான திமுகவின் தீர்மானத்தை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள சபாநாயகர் தனபால் மறுப்பு தெரிவித்ததால் திமுக எம்எல்ஏக்கள் அவையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். இதனையடுத்து சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் கூறுகையில் , குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து கேரள அரசு கண்டன தீர்மானம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“எடப்பாடி பழனிசாமிக்கு தில் இல்லை”… வெளிநடப்பு செய்தபின் துரைமுருகன் காட்டம்!

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற அதிமுக அரசுக்கு தில் இல்லை என்று எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் விமர்சித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில், குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து விவாதிக்க திமுக அனுமதி கோரியது. அதற்கு பேரவைத் தலைவர் தனபால் மறுப்பு தெரிவித்ததையடுத்து, திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த துரைமுருகன், ‘குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து கேரள அரசு கண்டனத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளதுபோல், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சோலிய முடிச்ச தளபதி…. ”செந்தில் பாலாஜிக்கு செக்” …. ஆட்டம் காணும் கரூர் …!!

தமிழகத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் திமுக நிர்வாகிகளை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது. தமிழக்கத்தில் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகளில் திமுக முன்னிலையில் இருந்தாலும் அக்கட்சிக்குள் இருக்கும் உள்கட்சி பூசல்களையும் இந்த முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளது கட்சியின் தலைமையில் விவாதத்தை கிளப்பியுள்ளது. இதில் முதன்மையான இடத்தில் உள்ளது கரூர் மாவட்ட முடிவுதான். அங்குள்ள 12 மாவட்ட கவுன்சிலர்களில் 9 இடத்தை அதிமுக பிடித்துள்ளதால் திமுகவுக்கு வெறும் 3 இடம் மட்டும் தான் கிடைத்துள்ளது.அதே சறுக்கலை தான் ஒன்றிய கவுன்சிலில் […]

Categories
மாநில செய்திகள்

பெண்ணை காப்பாற்றும் போது உயிரிழந்த இளைஞர்…. குடும்பத்திற்கு ரூ 10,00,000 – முதல்வர் அறிவிப்பு.!!

திருவள்ளூரில் பெண்ணை காப்பாற்ற சென்று உயிரிழந்த இளைஞர் குடும்பத்திற்கு ரூ 10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் முன்பதாக முதல்வர் பழனிசாமி ஒரு சில அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது திருவள்ளூரில் பெண்ணை காப்பாற்ற சென்று உயிரிழந்த யாகேஷ் குடும்பத்திற்கு ரூ 10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றார். மேலும் பலத்த காயமடைந்த சார்லி என்ற இளைஞர் குடும்பத்திற்கு ரூ […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

குடியுரிமை திருத்த சட்டம் : மு.க.ஸ்டாலினுக்கு முதல்வர் காட்டமான பதிலடி …!!

குடியுரிமை திருத்த சட்ட விவகாரம் தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் மு.க.ஸ்டாலின் பேச்சுக்கு முதலமைச்சர் காட்டமான பதிலடி கொடுத்தார். சட்டசபையில் குடியுரிமை திருத்த சட்ட விவகாரம் குறித்து எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் பேசியதையடுத்து அதிமுக கழக உறுப்பினர்களுக்கும், தி.மு.க. உறுப்பினர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் சபையில் கூச்சல், குழப்பம் நிலவியது. அப்போது முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி எழுந்து தி.மு.க. உறுப்பினர்களுக்கு காட்டமாக பதிலளித்தார். சட்டப்பேரவையில் கவர்னர் உரை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு ஸ்டாலின் பேசினார். […]

Categories
மாநில செய்திகள்

இனி காலை டிபன்…. ”அரசின் அசத்தல் திட்டம்”…. பட்டைய கிளப்பும் அரசு பள்ளிகள் …!!

தமிழகம் முழுதும் பொங்கல் பரிசாக அரசுப் பள்ளிகளில் காலை சிற்றுண்டி உணவு வழங்கும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி விரைவில் அறிவிக்க இருக்கிறார் என்கிறார்கள் கோட்டை வட்டாரத்தில். ’ஏன் பள்ளிக் கூடம் போகலையா?’ என்று கிராமத்தில் ஒரு சிறுவனைப் பார்த்து முதல்வர் காமராஜர் கேட்டபோது, ‘பள்ளியோடத்துல கஞ்சி ஊத்துவாங்களா?’ என்று அந்த சிறுவன் காமராஜரைப் பார்த்துக் கேட்டான். அப்போதுதான் பள்ளிக் கூடங்களில் மதிய உணவு போட்டால் மாணவர்கள் அதிக அளவில் படிக்க வருவார்கள் என்ற சிந்தனை விதை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சீ… சீ…. என்ன ? இது….. ஆளுநர் உரையை கிண்டல் செய்த ஸ்டாலின் ….!!

ஆளுநரின் உரை , பய அறிக்கையாக ( Statement of Fear) மட்டுமே இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். இன்று மூன்றாவது நாளாக நடைபெற்றுவரும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் ஆளுநர் உரை மீதான விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார். ஸ்டாலின் எழுப்பிய கேள்விகள்: நல்லாட்சி குறியீட்டில் முதலிடம் என சொல்லும் தமிழ்நாடு அரசு, குற்றங்களின் எண்ணிக்கையை எடுத்துக் கொள்ளாமலேயே சட்டம் ஒழுங்கில் சிறந்து விளங்குகிறது என எப்படி சொல்லலாம். 250க்கும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

MPஆ இருந்தா என்ன ? தலைமை தாங்குவீங்களா ? கைது செய்து மாஸ் காட்டிய காவல்துறை ….!!

மத்திய அரசைக் கண்டித்து சி.ஐ.டி.யு, எ.ஐ.டி யு.சி உட்பட பத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர் சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை தலைமையேற்று நடத்திய இரண்டு மக்களவை உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டனர். கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையைக் கண்டித்தும் வேலையில்லா திண்டாடத்தைக் கண்டித்தும் சி.ஐ.டி.யு, எ.ஐ.டியு.சி உட்பட பத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர் சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை மக்களவை உறுப்பினர் பி.ஆர். நடராஜன், திருப்பூர் மக்களவை உறுப்பினர் சுப்புராயன் தலைமையில் நடைபெற்ற […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நாங்கள் உங்களின் எதிரி அல்ல ….. ஜன.25இல் முதல்வரின் முக்கிய சந்திப்பு …!!

குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக சிறுபான்மையின சமூகத்தைச் சேர்ந்த தலைவர்களை முதலமைச்சர் பழனிசாமி ஜன. 25ஆம் தேதி சந்தித்துப் பேசவுள்ளார். நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்குப் பெரும் எதிர்ப்பலை கிளம்பியுள்ளது. இந்தச் சட்டத்தில் இஸ்லாமிய மக்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறி தமிழ்நாட்டிலும் பல்வேறு போராட்டங்கள் நடந்துவருகின்றன. தமிழ்நாடு சட்டப்பேரவையிலும் குடியுரிமை திருத்தச் சட்ட விவகாரம் எதிரொலித்தது. இந்நிலையில் இன்று மனிதநேய ஜனநாயக கட்சியைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர் தமிமுன் அன்சாரி, முக்குலத்தோர் புலிப்படை கட்சியைச் சேர்ந்த சட்டப்பேரவை […]

Categories
மாநில செய்திகள்

என்ன விட்டுருங்க…. நான் அப்படி பேசல ….. நெல்லை கண்ணன் மனு …!!

பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித் ஷா குறித்து அவதூறாகப் பேசியதாக, தன் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நெல்லை கண்ணன் மனு தாக்கல் செய்துள்ளார். மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி, நெல்லை மேலப்பாளையத்தில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் மாநாடு நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய நெல்லை கண்ணன் பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தலைவர் அமித் ஷா குறித்து அவதூறாகப் பேசிய குற்றத்திற்காக கைது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அத பத்தி பேசிவீங்களா ? எதிர்க்க திராணி இருக்கா ? துரைமுருகன் காட்டம் …!!

 மத்திய அரசு கொண்டுவரும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை தமிழ்நாடு அரசு எதிர்த்து பேசத் தயராக உள்ளதா? என்று கூறுங்கள் உங்களை நம்புகிறோம் என்று துரைமுருகன் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் விமர்சித்து பேசினார். நேற்றைய சட்டசபையில் ஆளுநர் உரை மீதான விவாதத்தில் எம்எல்ஏ செம்மலை, எதிர்கட்சி துணை தலைவர் துரைமுருகன் இடையே நடந்த உரையாடல். செம்மலை: குடியுரிமை விவகாரத்தில் இலங்கைத் தமிழர்கள் மீது மிகுந்த அக்கரையோடு திமுகவினர் பேசுகிறீர்கள். 2009ஆம் ஆண்டில் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டார். […]

Categories
Uncategorized அரசியல் மாநில செய்திகள்

அதைப் பற்றி பேசாதீங்க… யாருக்கும் அஞ்சமாட்டோம்…. சட்டப்பேரவையில் காரசார விவாதம்.!!

குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக சட்டப்பேரவையில் மூன்றாவது நாளான இன்றும் காரசாரமாக விவாதம் நடைபெற்றது. இன்று நடைபெற்ற மூன்றாம் நாள் சட்டப்பேரவை நிகழ்வில், ஆளுநர் உரை மீது நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய எதிர்க்கட்சிச் தலைவர் ஸ்டாலின்: ஆளுநர் உரை, அரசின் செய்தி அறிக்கைபோல் அமைந்துள்ளது . Railway guide போல் உள்ளது. அதில், குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து தேடித்தேடிப் பார்த்தேன் எதுவும் இல்லை என்றார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சபாநாயகர்: […]

Categories
மாநில செய்திகள்

தமிழக சட்ட பேரவையில் 3 சட்டத்திருத்த மசோதாக்கள் தாக்கல்!!

தமிழக சட்ட பேரவையில் 3 சட்டத்திருத்த மசோதாக்களை அமைச்சர்கள் தாக்கல் செய்தனர். தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 6ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது . ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் உரையாற்றினார். ஆளுநர் உரையின் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. மூன்றாவது நாளான இன்று கூட்டுறவு சங்க திருத்த மசோதாவை அமைச்சர் செல்லூர் ராஜு சட்ட பேரவையில் தாக்கல் செய்தார். அந்த மசோதாவின் படி கூட்டுறவு சங்கத்தலைவர் உறுப்பினர் தவறு செய்தால் மாவட்ட இணைப்பதிவாளரே […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக ஆட்சியில் இஸ்லாமியருக்கு பாதிப்பா? வாய்ப்பே இல்லை – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

என்.ஆர்.சி சட்டத்தினால் தமிழ்நாட்டில் ஒரு இஸ்லாமியருக்கு பாதிப்பு ஏற்பட்டாலும் அவர்களுக்கு ஆதரவாக அதிமுகதான் முதல் குரல் கொடுக்கும் என்று வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சட்டப்பேரவையில் தெரிவித்தார். சட்டப்பேரவை கூட்டத் தொடரில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், சிறுபான்மை மக்களுக்கு நிதியுதவி வழங்குவதாகக் கூறும் அதிமுக, குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்காதது ஏன் என்று கேள்வி எழுப்பினார். ஸ்டாலினின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் உதயகுமார், “குடியுரிமை திருத்தச் சட்டம் இன்னும் அமல்படுத்தப்படவில்லை. உச்ச நீதிமன்றத்தில் இது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

CAA எதிர்ப்பு: முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்த முகமது அபூபக்கர்

குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து முதலமைச்சர் அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி கருத்து கேட்க வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர் முகமது அபூபக்கர் வலியுறுத்தினார். சட்டப்பேரவையில் இன்று ஆளுநர் உரை மீது நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது, பேசிய இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியைச் சேர்ந் முகமது அபூபக்கர்: “என்ஆர்சி, என்பிஆர், சிஏஏ, இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்தில் குடியுரிமை குறித்த தெளிவான சட்டங்கள் வரையறுக்கப்பட்டுள்ளது. ஆனால், இப்போது திருத்தியமைக்கப்பட்ட குடியுரிமை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நெல்லை கண்ணன் கைது குறித்து முதலமைச்சர் விளக்கம்!

நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டதில் எந்த உள்நோக்கமும் இல்லை என்று முதலமைச்சர் பழனிசாமி சட்டப்பேரவையில் விளக்கமளித்துள்ளார். ஆளுநர் உரையின் மீது பேசிய காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் பிரின்ஸ், குடியுரிமை திருத்தச் சட்டத்தை சுட்டிக்காட்டி அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோலம் போட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தது ஏன்? என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த முதலமைச்சர் பழனிசாமி: கோலம் போடுபவர்கள் அவரவர் வீட்டு வாசலில் போட்டால் பிரச்னை இல்லை. அடுத்தவர் வீட்டில் கோலம் போட்டு அந்த வீட்டு உரிமையாளர் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : பொங்கலுக்கு சிறப்பு பேருந்து அறிவிப்பு ….!!

பொங்கலுக்கு அறிவிக்கப்பட்டுள்ள சிறப்பு பேருந்து குறித்து அமைச்சர் MR விஜயபாஸ்கர் தெரிவித்தார். சென்னை பல்லவன் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக போக்குவரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில் , பொங்கலுக்கு வழக்கம் போல் சென்னையில் தற்காலிக பேருந்து நிலையங்கல் அமைக்கப்பட்டு அங்கிருந்து வெளியூறுகளுக்கு பேருந்துகள் செல்லும்.  சென்னையிலிருந்து 4950 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. மொத்தம் 29, 213 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. வருகின்ற 12 13 14 ஆகிய நாட்களில் பேருந்து இயக்கப்படும்.பொங்கல் பண்டிகை முடிந்த பின் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தாடி வைத்துக் கொண்டு ….. பைத்தியக்காரன்….. கோமாளி …. அமைச்சரையே வசைபாடிய MLA …!!

அமைச்சர் உதயகுமாரை கடுமையான  வார்த்தைகளால் திமுக MLA ஜெ.அன்பழகன் பேசியது சர்சையை ஏற்படுத்தியுள்ளது. சட்டமன்ற கூட்டத்தொடரில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் செய்தியாளர்களை சந்தித்த போது ,  இலங்கை தமிழகர்களுக்கு இரட்டை குடியுரிமை தரப்படும் என்று ஏன் இந்த கபட நாடக ஆடுறீங்க. இதே மசோதா மேலவையில் வரும்போது இந்திய குடியுரிமை திருத்த சட்ட மசோதாவுக்கு எதிராக அதிமுக 11 பேர் , பாமக அன்புமணி என அனைவரும் எதிர்த்து ஓட்டு போட்டு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக ஏதில் ? முதலிடம் …. ஆதங்கத்தில் அடுக்கிய MLA ….!!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட திமுக MLA ஜெ.அன்பழகன் செய்தியாளர்களை சந்தித்தார். தமிழக சட்டசபை மரபுக்கு எதிராக செயல்பட்டதாக கூறி திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் கூட்டத்தொடர் முழுவதும் நீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து பேரவை வளாகத்தில் பேசிய அவர் , சட்டம் ஒழுங்கை பேணி காப்பதில் தமிழகம் முதல் இடம் என்று முதல்வர் சொல்லியிருகிறார்கள். ஏதில் ? முதலிடம் கொடுத்தார்கள். சட்ட ஒழுங்கு சரியில்லை என்றால் முதலிடம் கொடுத்துள்ளார்கள் என்கிறார். நெல்லை கண்ணனை கைது பண்ணீங்க சரி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அடிமையா இருக்கீங்க……. ”உடனே கோவம் வருது”….. MLA அன்பழகன் காட்டம் …!!

சட்ட ஒழுங்கில் தமிழகம் முதலிடம் என்று ஆளுநர் உரையில் கூறி இருந்ததற்கு திமுக MLA அன்பழகன் கடும் விமர்சனம் செய்துள்ளார். இன்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அமைச்சர் எஸ்.பி வேலுமணியை ஒருமையில் பேசியதாக திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் கூட்டத்தொடரில் இருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து சட்டப்பேரவை வாயிலில் செய்தியாளர்களை சந்தித்த திமுக MLA ஜெயக்குமார் அமைச்சர் மற்றும் அதிமுக அரசை கடுமையாக சாடினார். அப்போது அவர் கூறுகையில் , நான் பேசுவதை அவர்களால் தாங்க முடியவில்லை. குடியுரிமை […]

Categories

Tech |