Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

என்ன..!.. விடுமுறை இல்லையா ? அங்கன்வாடி மீது பெற்றோர்கள் ஆதங்கம் ..!!

தமிழகத்தில் அங்கன்வாடி மையத்திற்கு விடுமுறை அளிக்காதது பெற்றோர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் தமிழகத்தில் உள்ள தொடக்கப்பள்ளிகளுக்கு விடுமுறை என்று தமிழக அரசு நேற்று உத்தரவிட்டது. கர்நாடகா, ஆந்திரா எல்லையோரத்தில் உள்ள வணிக வளாகங்கள் , திரையரங்குகள் மூடப்படும் என்ற உத்தரவையும் அறிவித்தது.  16ஆம் தேதி முதல் மார்ச் 31ம் தேதி வரை தமிழகத்தில் உள்ள ப்ரீகேஜி , எல்கேஜி , யூகேஜி  தொடங்கி ஐந்தாம் வகுப்பு வரை விடுமுறை என்று உத்தரவு […]

Categories
மாநில செய்திகள்

நாங்க ஓட்டு போடலானா ஜெயிச்சுருப்பீங்களா ? அமைச்சரிடம் பெண் ஆவேசம் …!!

விருதுநகரில் அமைச்சரிடம் இஸ்லாமிய பெண் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. விருதுநகரில் நடைபெற்ற பெட்ரோல் டீசல் சில்லரை விற்பனை நிலைய தொடக்கவிழாவில் அமைச்சர் செல்லூர் ராஜு , அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டு மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். அப்போது பாத்திமா என்ற பெண்  CAA , NRC குறித்து அமைச்சரிடம் கேள்வி எழுப்பினார். ஒருகட்டத்தில் ஆதங்கமடைந்த அந்த பெண் இஸ்லாமியர்கள் வாக்களிக்காமல் அதிமுக ஆட்சிக்கு வந்து இருக்கமுடியுமா ? என்று  அமைச்சரிடம் முறையிட்டார். அந்தப் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ரூ.60,00,00,000 வச்சுக்கோங்க…. ”கொரோனாவை கட்டுப்படுத்துங்க” – முதல்வர் உத்தரவு …!!

கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கி விட 60 கோடி அறிவித்து தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரபடுத்தி வருகின்றது. இதற்கான அறிவுறுத்தலையும் , உத்தரவையும் தமிழக முதல்வர் பிறப்பித்தார். அதில் , தமிழக மக்கள் தேவையின்றி வெளிமாநிலங்களுக்கு செல்ல வேண்டாம். பொது இடங்களில்கூடுவதை அடுத்த 15 நாட்களுக்கு தவிர்க்க வேண்டும். அனைத்து மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகளுக்கு மார்ச் 31ம் தேதி வரை விடுமுறை. வீட்டுக்குள் நுழையும்போது அவ்வப்போது கைகளை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிக இடங்களை பிடிக்கும் பாஜக ? எடப்பாடியின் அட்டகாசமான பதில் …!!!

கொரோனா குறித்த விடுமுறை அறிவிப்பு அதே தான் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, கரோனா வைரஸ் குறித்து மூத்த அமைச்சர்கள், துறையின் செயலாளர்களிடம் கலந்தாலோசித்து , கொரோனா வைரஸ்ஸை எப்படி கட்டுப்படுத்துவது என்பது குறித்து  அறிக்கை வெளியிட இருக்கிறோம். ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்தபோது அவர் குறித்த கருத்துக்களை விவாதிக்கலாம். அதை விட்டுவிட்டு கற்பனையாக ஏதும் பேசக் கூடாது. தமிழக பாஜகவின் புதிய […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

குட் நியூஸ் ”எல்.கே.ஜி., யு.கே.ஜிக்கு விடுமுறை” மாணவர்கள் மகிழ்ச்சி …!!

தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழக பள்ளிக் கல்வித் துறை ஆணையர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அனைத்து வகையான பள்ளிகளின் ப்ரீகேஜி , எல்கேஜி , யுகேஜி வகுப்புகளுக்கு விடுமுறை என்ற உத்தரவு பிறப்பிக்கப்படுள்ளது. தமிழகத்தின் கேரளாவை ஒட்டியுள்ள கன்னியாகுமரி , நெல்லை, தென்காசி ,தேனி ,கோவை ,திருப்பூர் ,நீலகிரி ஆகிய மாவட்டங்களில் ஐந்தாம் வகுப்பு வரை விடுமுறை என்றும் உத்தரவு பிறப்பிக்கப்படுள்ளது.  கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

25,690 பேருக்கு சம்பள உயர்வு….. 50,000 பேருக்கு இலவச மின் இணைப்பு…. அரசின் அசத்தல் அறிவிப்பு …!!

டாஸ்மாக் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு மற்றும் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக சட்டசபையில் மதுவிலக்கு துறை அமைச்சர் தங்கமணி ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரித்து அறிவிப்பு விட்டிருக்கிறார். அரசின் இந்த அறிவிப்பால் 25 ஆயிரத்து 690 பணியாளர் பணி பெறுவார்கள் என்றும் அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். டாஸ்மாக் பணியாளர்களுக்கு வருகின்ற ஏப்ரல் முதல் 500 ரூபாய் ஊதியம் உயர்த்தப்படுவதாக அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். அதே போல் விவசாயிகளுக்கு நடப்பாண்டில் 50 ஆயிரம் இலவச […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

உங்க பேச்சை யாரு கேட்டா ? திமுகவை நோஸ்ட்கட் செய்த எட்டப்பாடி ….!!

தமிழக சட்டப்பேரவையில் நேற்றைய விவாதத்தில் முக.ஸ்டாலினை நோஸ்கட் செய்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்தார். பள்ளிக்கல்வித்துறை இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டு துறை மற்றும் உயர்கல்வித் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நேற்று நடைபெற்ற போது ,  ஐந்தாம் வகுப்பு பொதுத் தேர்வை குறித்து திமுகவின் பொன்முடி பேசினார். இதற்க்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஐந்தாம் வகுப்பு , எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுவதன் மூலம் மாணவர்களின் கல்வித்தரம் உயரும் என்று […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

அமைதியான தமிழகம்…. டெல்லி போல மாற்ற முயற்சி…. ஸ்டாலினை சாடிய EPS ..!!

தமிழகத்தை டெல்லி போல பதற்றம் அடைய எதிர்க்கட்சிகள் முயற்சிக்கின்றது என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். தமிழகத்தில் தேசிய குடிமக்கள் பதிவேடு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தெரிவித்தார். இதை சுட்டிக்காட்டி இன்றைய சட்டசபை கூட்டத்தொடரில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் முக.ஸ்டாலின் தமிழகத்தில் தேசிய குடிமக்கள் பதிவேடு நடைபெறவில்லை என தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென கோரிக்கை விடுத்தார். இது தொடர்பான விவாதம் நடைபெற்ற போது பேசிய தமிழக முதலமைச்சர் எடப்பாடி […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

குட் நியூஸ் : 25 புதிய பள்ளிகள்…. 45 பள்ளிகள் தரம் உயர்வு…. முதல்வர் அறிவிப்பு ….!!

தமிழக சட்டசபையில் பள்ளிக்கல்வித்துறை தொடர்பான முக்கிய அறிவிப்புகளை தமிழக முதல்வர் அறிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் 114 விதியின் கீழ் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பள்ளிக்கல்வி குறித்த சில அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் தமிழகத்தில் 5 கோடியில் 25 அரசு துவக்கப் பள்ளிகள் துவங்கப்படும். 15 அரசு நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும். 30 அரசு உயர்நிலைப்பள்ளிகளில் 55 கோடி செலவில் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும். உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகள் என 1,890 பள்ளிகளில் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

JUST NOW : ”ஆர்.எஸ்.பாரதி மீது வழக்குப்பதிவு” திமுகவினர் அதிர்ச்சி …!!

திமுக அமைப்புச்செயலாளர் RS.பாரதி மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளது திமுகவினரை அதிர்ச்சி அடையவைத்துள்ளது. கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி இந்த கூட்டத்தில் திமுக எம்பியும் , திமுக அமைப்பு செயலருமான ஆர் எஸ் பாரதி கலந்து கொண்டார். இதில் பேசிய அவர் , தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு கலைஞர் போட்ட பிச்சை என தெரிவித்தார். அதே போல ஊடகத்தையும் மோசமாக விமர்சித்தார். இவரின் இந்த பேச்சுக்கு பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தற்போது காவல்நிலையத்தில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING : என்.பி.ஆர். நிறுத்திவைத்து – ”தீர்மானம் நிறைவேற்றுக” முக.ஸ்டாலின்

தமிழகத்தில் NPR நிறைவேற்றப்பட்டதற்கு தீர்மானம் நிறைவேற்றுங்கள் என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மத்திய அரசு கொண்டு வந்த தேசிய மக்கள் குடியுரிமை பதிவேட்டில் குறிப்பிட்ட சில விஷயங்களை நீக்க வேண்டும் , இதனால் இஸ்லாமிய மக்கள் அச்சப்படுகின்றனர் என தமிழக அரசு மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளதாகவும் , மத்திய அரசு எந்த பதிலும் அளிக்காத நிலையில் தமிழகத்தில் NPR பதிவை நிறுத்தியுள்ளதாக அமைச்சர் உதயகுமார் நேற்றைய செய்தியாளர் சந்திப்பில் கூறி இருந்தார். இந்நிலையில் இன்று […]

Categories
அரசியல் கல்வி மாநில செய்திகள்

குட் நியூஸ்…. ”இனி 4 முதன்மை பாடம்”….. ஆடியோ மூலம் பாடம்…. மாணவர்கள் மகிழ்ச்சி ….!!

இன்றைய சட்டசபை கூட்டத்தொடரில் மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் பள்ளிக்கல்வித்துறை செங்கோட்டையன் பள்ளிக்கல்வித்துறையில் புதிதாக 36 அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் சில,  உயர்கல்வியை தேர்வு செய்ய ஏதுவாக மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் பாடப்பிரிவு தேர்வு செய்யும் முறை மாற்றப்படும் மாணவர்கள் மூன்று அல்லது நான்கு முதன்மை பாடங்களை கொண்ட பாட வகுப்புகளை தேர்வு செய்ய வழிவகை செய்யப்படும் 10 வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் மாணவர் பெயருடன் பெற்றோர் பெயரும் தமிழ், ஆங்கிலத்தில் அச்சிடப்படும். மெட்ரிகுலேஷன் பள்ளி இயக்ககம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”கல்லூரி வளாகத்தில் CCTV கேமரா” உயர்கல்வித்துறையில் 44 அறிவிப்புகள் ….!!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் தமிழக உயர் கல்வித்துறையில் 44 புதிய அறிவிப்புகளை அமைச்சர் கேபி அன்பழகன் அறிவித்தார். அதில் சில , அண்ணா பல்கலைக்கழகத் துறைகள் மற்றும் நிர்வாகத்தின் மின்ஆளுமை நடைமுறைப்படுத்தப்படும். அண்ணா பல்கலைக்கழகத் துறைகள் மற்றும் நிர்வாகத்தில் ரூபாய் 1 கோடி செலவில் மின் ஆளுமை நடைமுறைப்படுத்தப்படும். 23 அரசு பலவகை தொழில்நுட்ப கல்லூரிகளுக்கு தொடர் இணைய வசதி ஏற்படுத்த 4.60 கோடி நிதி ஒதுக்கீடு. கல்லூரி வளாகங்களில் ரூபாய் 2.50 […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அப்படி காட்டுங்க…. இப்படி காட்டுங்க…. பயம் காட்டாதீங்க…. துரைமுருகன் பேச்சு …!!

கொரோனா வைரஸ் நடவடிக்கை குறித்து பேரவையில் நடந்த விவாதத்தில் சிரிப்பலை ஏற்பட்டது. நாடு முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து தமிழக சட்டமன்றத்தில் விவாதிக்க கோரி திமுக கொண்டுவந்த கவன ஈர்ப்பு தீர்மானம் விவாதிக்கப்பட்டது. இதில் பேசிய திமுக பொருளாளர் துரைமுருகன், கொரோனா பாதிப்பு குறித்து அரசு தான் பீதியை கிளப்புகிறது. போன் செய்தால் இரும்முகின்றார்கள். சட்டமன்றம் வந்தால் வெளியே உள்ள ஊழியர்கள் கையை சுத்தம் செய்ய இப்படி காட்டுங்க, அப்படி காட்டுங்க […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING : ”தமிழகத்தில் NPR நிறுத்திவைப்பு” அமைச்சர் அதிரடி …!!

தமிழகத்தில் NPR பதிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார். மத்திய அரசு கொண்டு வந்த CAA, NPR, NRC ஆகிய மூன்று சட்டத்தையும் எதிர்த்து தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டு வருகின்றது. பல்வேறு மாநில சட்டமன்றத்தில் இந்த சட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள தமிழகத்திலும் இதை எதிர்த்து தீர்மானம் ஏற்றவேண்டுமென்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து வந்தன.கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி NPR பதிவு தொடங்க இருக்கும் நிலையில் தமிழகத்தில் NPR பதிவை […]

Categories
மாநில செய்திகள்

வீட்டில் இருந்து புறப்பட ரஜினி… மலர் தூவி வழியனுப்பி வைத்த ரசிகர்கள்!!

சென்னை போயஸ் கார்டனிலிருந்து நடிகர் ரஜினிகாந்த் லீலா பேலஸிற்கு காரில் ஏறி புறப்பட்டுச் சென்றார். சென்னை போயஸ் கார்டன்வீட்டில் இருந்து வெளியே வந்த நடிகர் ரஜினிகாந்த் லீலா பேலஸ் ஹோட்டலில் செய்தியாளர்களை சந்திப்பதற்கு காரில் ஏறி புறப்படும் முன்பாக வீட்டின் முன்பு திரண்ட ரசிகர்களுக்கு கையசைத்து விட்டு அங்கிருந்து கிளம்பினார். அவர் காரில் போகும்போது ரசிகர்கள் மலர்தூவி அவரை வழியனுப்பி வைத்தனர். இன்னும் சற்று நேரத்தில் 10: 30 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார். ரஜினிகாந்த தனது முழுநேர […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆலோசனை கூட்டம்….. செய்தியாளர்கள் சந்திப்பு…. ரஜினி போருக்கு தயார் …!!

நடிகர் ரஜினிகாந்த் இன்று மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்த இருக்கின்றார். நடிகர் ரஜினிகாந்த் கடந்த 5 ஆம் தேதி  மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களை சந்தித்து, கட்சி தொடங்குவது குறித்து ஆலோசனை மேற்கொண்டார். அரசியலுக்கு வருவேன் என்ற அறிவிப்பைஎடுத்து 3ஆவது முறை நடைபெற்ற இந்த ஆலோசனையில் ஏதேனும் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சுமார் 1.30 மணி நேர ஆலோசனைக்கு பின் தனது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினி ஒரு […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

முதல் டார்கெட் இப்போது நான் தான் – அமைச்சர் வேலுமணி …..!!

செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எஸ்.பி வேலுமணி கூறியதாவது , திமுக_வின் முதல் டார்கெட் தற்போது நான்தான் என்று கூறினார். மேலும் பேசிய அவர் என் மீதான வழக்கு 13ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது, அது பற்றி தவறான தகவல்களை ஸ்டாலின் மூலம் கசிய விடுகின்றனர். என்னை பற்றி சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்ப தயாராக உள்ளனர் என கேள்விப்படுகிறேன். என் மீது எந்த குற்றச்சாட்டும் வேண்டுமானாலும் கூறட்டும் , ஆனால் பத்திரிக்கை , நீதித்துறையை விமர்சிக்க வேண்டாம். ஆர் எஸ் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”சட்ட பேரவையில் புதிய அறிவிப்புகள்” அமைச்சர்கள் அதிரடி …..!!

இன்றைய தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பண்ணன் 12 புதிய அறிவிப்புகளை அறிவித்தார். தமிழ்நாட்டில் 15 மாநகராட்சிகளில் சுற்றுச்சூழல் மேலாண்மை திட்டம் செயல்படுத்த தலா 8 லட்சம் நிதி ஒதுக்கப்படும். தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகளுக்கு ரூபாய் 2 கோடி செலவில் பயிற்சிகள் அளிக்கப்படும். காலநிலை மாற்றத்தை எதிர் கொள்ளும் வகையிலான திட்டத்தை உருவாக்க ரூபாய் 3.32 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். சுற்றுப்புற காற்றின் தன்மையை கண்காணிக்கும் திறனை அதிகரிக்க சேலத்தில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் திரையரங்கை மூட வேண்டும் – மார்க்சிஸ்ட் கட்சி வேண்டுகோள் …!!

தமிழகத்தில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து மார்க்சிஸ்ட் கட்சி செயலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.  சீனாவை அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. சீனா மட்டுமல்லாமல் தற்போது கொரோனா வைரஸ் தொற்றால் இத்தாலி, ஈரான், கனடா உள்ளிட்ட பல நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த கொரோனா வைரஸ் தாக்குதலால் இதுவரை ஒரு லட்சத்திற்கும் அதிகமான பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 4,000க்கும் அதிகமானோர் பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவையும் விட்டு வைக்காத கொரோனா வைரஸ் கேராளா , […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

அமைச்சர் திரும்ப திரும்ப சொல்லுறாரு….. நாங்க என்ன பண்ணட்டும்…. ஸ்டாலின் பேட்டி ….!!

திமுக வெளிநடப்பு செய்ததையடுத்து திமுக தலைவர் முக.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். NPR  சட்டத்தை நிறைவேற்றக் கூடாது , அதை திரும்பப் பெற வேண்டும் ,  சட்டமன்றத்தில் தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து பல நாட்களாக  வண்ணாரப்பேட்டை , மண்ணடி பகுதியில் மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். NPR சட்டத்தை இங்கு நிறைவேற்ற மாட்டோம் என்ற சட்டமன்றத்தில்  தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை தான் அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றார்கள். […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

NPR குறித்து முக.ஸ்டாலின் கேள்வி…. பதிலடி கொடுத்த அமைச்சர் உதயகுமார் …!!

தமிழக சட்டப்பேரவையில் ஸ்டாலின் எழுப்பிய NPR குறித்த கேள்விக்கு அமைச்சர் உதயகுமார் பதிலளித்துள்ளார். தமிழக சட்டசபையில் நடைபெற்ற இன்றைய விவாதத்தில் எதிர்க்கட்சி தலைவர் முக.ஸ்டாலின்  தேசிய குடிமக்கள் மக்கள் தொகை பதிவேடுக்கு எதிராக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கை விடுத்தார்.NPR-இல் இருக்கக்கூடிய புதிய கேள்விகள் தொடர்பாக தமிழக அரசு ஒரு கடிதத்தை மத்திய அரசுக்கு அனுப்பியது , அதற்கான பதில் வந்துவிட்டதா ? என்றும் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.NPR குறித்த மக்களின் சந்தேகங்களுக்கு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் ஒரே நாடு, ஒரே தேசம் திட்டம் – அமைச்சர் காமராஜ்

இன்றைய தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் பேசிய  உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு, விலைக் கட்டுப்பாடுத் துறை  அமைச்சர் காமராஜ் கூறும் போது , ஒரே நாடு ஒரே தேசம் திட்டத்தை தமிழகம் முழுவதும் செயல்படுத்துவது குறித்து முதலமைச்சர் விரைவில் நல்ல பதில் தருவார் அமைச்சர் காமராஜ் தெரிவித்தார் . மேலும் புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பிக்க மற்றும் பெயர் சேர்க்க , நீக்கம் செய்ய வசதியாக ரூபாய் 330 கோடியில் கணினி மயமாக்கப்பட்டுள்ளது என்றும் அவர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

எடப்பாடி ஐயா கொஞ்சம் எடை போடுங்க…. டி.ராஜேந்தர் கோரிக்கை …!!

வருகின்ற 27ஆம் தேதி முதல் புதிய திரைப்படங்களை திரையிடாமல் இருக்க முடிவு செய்துள்ளோம் என்று விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் டி.ராஜேந்தர் தெரிவித்தார். சென்னை , காஞ்சிபுரம் , திருவள்ளுவர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் டி.ராஜேந்தர் நேற்று செய்தியாளர்களை சந்தித்த போது , திரைப்படங்களுக்கான டி.டிஎஸ் , தமிழக அரசின் கேளிக்கை வரியை ரத்து செய்ய முடியாத நிலை உள்ளது. எனவே வருகின்ற 27ஆம் தேதி முதல் புதிய திரைப்படங்களை திரையிடாமல் இருக்க முடிவு செய்துள்ளோம். […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

கோழிக்கறி சாப்பிட்டால் கொரோனா…. வதந்தி பரப்பியவர் கைது…..!!

முட்டை , கோழிக்கறி சாப்பிடுவதால் கொரோனா வைரஸ் பரவாது என்று கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்னன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகின்றது. முதல்வர் , சுகாதாரத்துறை அமைச்சர் , சுகாதாரத்துறை செயலாளர் என அடிக்கடி ஆலோசனை கூட்டம் நடத்தி தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தி வருகின்றனர். தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது . இந்நிலையில் கோழிகறி ,முட்டை சாப்பிடுவதால் கொரோனா […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

JUST NOW : கொரோனா – திமுக கவன ஈர்ப்பு தீர்மானம் ….!!

கொரோனா வைரஸ் பரவியதை அடுத்து திமுக சார்பில் கவன ஈர்ப்புத் தீர்மான நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. திமுகவினர் கொரோனா வைரஸ் பாதிப்பு முன்னேற்பாடு நடவடிக்கைகளை அரசு என்ன எடுத்துள்ளது என்பது குறித்து தமிழக சட்டப்பேரவையில் விவாதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கவன ஈர்ப்பு தீர்மான நோட்டீஸ் கொடுத்துள்ளனர்.  இன்று தமிழக சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டுள்ளன. நாளை மறுதினம் மீண்டும் கூட்டும் போது கவன ஈர்ப்பு தீர்மானம் எடுத்துக் கொள்ளப்பட்டு விவாதிக்கப்படுமென்று தெரிகின்றது. தமிழகம் முழுவதும் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு […]

Categories
அரசியல்

ஓபிஎஸ் அணியினருக்கு நோட்டீஸ் – பின்னணி ….!!

அரசுக்கு எதிராக வாக்களித்த ஓபிஎஸ் உள்ளிட்ட 11 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கம் அளிக்க கோரி சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். 2017 ஆம் ஆண்டு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அரசு பொறுப்பேற்ற பிறகு பிப்ரவரி 18 ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. அதில் இப்போது துணை முதல்வராக இருக்கும் ஓ. பன்னீர்செல்வம் உள்பட 11 எம்எல்ஏக்கள் அரசுக்கு எதிராக வாக்களித்தனர். இந்த நிலையில் 11 சட்டமன்ற உறுப்பினர்கள் அதிமுக கொறடா உத்தரவை மீறி வாக்களித்தததால் அவர்களை […]

Categories
அரசியல்

சின்னம்மாவுக்கு கட்சியை நடத்தும் ஆற்றல் உள்ளது – பாஜக எம்.பி சுப்ரமணியசாமி …..!!

கட்சி நடத்துவதற்கான அனைத்து ஆற்றலும் சின்னமாக உள்ளது என்று பாஜக எம்பி சுப்ரமணியசாமி தெரிவித்துள்ளார்.திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் இதனைக் கூறினார். சசிகலா ஜெயலலிதாவுடன் சேர்ந்து இருந்த காரணத்தால்  நிறைய அனுபவம் உள்ளது. அவருக்கு பின்னால் ஒரு சமுதாயம் ஒற்றுமையோடு இருக்கிறார்கள். அதனால்கட்சியை தலைமை தாங்கி நடத்துவது திறமை இருக்கிறது என்று தெரிவித்தார்.

Categories
அரசியல் மாநில செய்திகள்

நான் ஒரு விவசாயி…. ”நாற்று நட்ட முதல்வர்”…. திமுகவுக்கு புது சிக்கல் …!!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விவசாயிகளுடன் நாற்றுநட்ட புகைப்படம் வைரலாகி வருகின்றது. நாகையில் நடைபெற்ற மருத்துவ கல்லூரி அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்கச் சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் வழியாக சென்றார். அப்போது அப்பகுதி மக்கள் முதல்வரை வரவேற்றனர். சாலையின் இருபுறங்களிலும் திரண்ட ஏராளமான பொதுமக்களும் , விவசாயிகளும் முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பளித்தனர். அந்த வழியாக வாகனத்தில் சென்று கொண்டிருந்த முதலமைச்சர் பழனிசாமி சித்தமல்லி பகுதியில் விவசாயிகள் நாற்று நடும் பணியை பார்த்ததும் […]

Categories
சற்றுமுன் நாகப்பட்டினம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மயிலாடுதுறை தனி மாவட்டமாக அறிவிப்பு ? முதல்வர் உறுதி …!!

மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்கப்படுமென்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். நாகப்பட்டினம் மாவட்டத்தில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்த தமிழக முதலவர் எடப்பாடி பழனிசாமி மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை அறிவித்துள்ளார். மயிலாடுதுறை வட்டார மக்கள் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்த கோரிக்கையான மையிலாடுதுறையை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டமாக மாற்றப்படுவது அரசின் பரிசீலனையில் உள்ளது என்று தெரிவித்தார். மக்களின் கோரிக்கையை துரிதமாக பரிசீலித்து அரசு நடவடிக்கை எடுக்கும் காவிரி-கோதாவரி இணைப்பு திட்டத்தை செயல்படுத்த அரசு விரைந்து நடவடிக்கை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

வேட்டிய மடிச்சு கட்டி… ”நாற்று நட்டு, மாஸ் காட்டிய EPS”….. விவசாயிகள் நெகிழ்ச்சி…!!

நாகை மருத்துவ கல்லூரி அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்கச் சென்ற முதல்வர் நீடாமங்கலத்தில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். நாகையில் நடைபெற்ற மருத்துவ கல்லூரி அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்கச் சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் வழியாக சென்றார். அப்போது அப்பகுதி மக்கள் முதல்வரை வரவேற்றனர். சாலையின் இருபுறங்களிலும் திரண்ட ஏராளமான பொதுமக்களும் , விவசாயிகளும் முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பளித்தனர். வரவேற்பு நிகழ்ச்சியில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் உட்பட பலர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

டவுன் பஸ்ஸா ? அடிக்கடி டெல்லி போறீங்க – TTV தினகரன் கிண்டல் …!!

அமைச்சர்கள் தங்களின் சொந்த பிரச்சனைக்காக டெல்லி செல்கிறார்கள் என்று TTV தினகரன் குற்றம் சாட்டியுள்ளார். மதுரை மாட்டுத்தாவணியில் உள்ள விடுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.  அப்போது அவர்  காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சி செய்தபோது தேசிய குடிமக்கள் பதிவேட்டை கொண்டு வந்தது. இதில் தாய் , தந்தை , பிறந்த இடம் உள்ளிட்ட கேள்விகளை தவிர்த்து அமல்படுத்தினால் அனைவரும் ஏற்றுக்கொள்வார்கள். NPR குறித்து மக்களிடையே இருக்கும் அச்சத்தை […]

Categories
மாநில செய்திகள்

யாருக்கும் இல்ல பயப்படாதீங்க…… பீதியை கிளப்பாதீங்க….. விஜயபாஸ்கர் அறிவுறுத்தல் ….!!

கொரோனா வைரஸ் குறித்து பயப்பட வேண்டாம், பீதியை கிளப்பும் வேண்டாம் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு கண்காணிப்பை ஆய்வு செய்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில் , தமிழகத்தில் 52 பேரின் இரத்த மாதிரி ஆய்வுக்காக அனுப்பப்பட்ட பாதிப்பு இல்லை என முடிவு வந்துள்ளது. கொரோனா பரவாமல் கைகளைக் கிருமி நாசினி மூலம் அடிக்கடி கழுவ வேண்டும். இருமல் , காய்ச்சல், மூச்சுத்திணறல் இருந்தால் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING : ”அதிமுக எம்பிக்கு 7 ஆண்டு சிறை” தொண்டர்கள் அதிர்ச்சி ….!!

அதிமுக முன்னாள் எம்.பி ராமச்சந்திரனுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2014 – 19 ஆண்டுகள் அதிமுக சார்பில் ஸ்ரீபெரும்புதூர் மக்களவை தொகுதியில் வெற்றி பெற்று மக்களவை உறுப்பினராக இருந்தவர் கே. என் ராமச்சந்திரன். இவர் நடத்த்தி வரும் சக்தி மாரியம்மன் பொறியியல் கல்லூரியின் விரிவாக்கத்திற்காக சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவில் இருந்து 20 கோடி ரூபாய் கடன் பெற்று கடன் கேட்டிருந்தார். 20 கோடி ரூபாய்க்கு போதுமான […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

JUST NOW : நவநீதகிருஷ்ணன் மருத்துவமனையில் அனுமதி ….!!

அதிமுகவின் மாநிலங்களவை குழுத்தலைவர் நவநீதகிருஷ்ணன் மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏ. நவநீதகிருஷ்ணன் என்பவர் 2011 ஆம் ஆண்டில் அதிமுக ஆட்சி ஏற்பட்டவுடன் நியமிக்கப்பட்ட தமிழக அரசுத் தலைமை வழக்குரைஞர் ஆவார். இவர் தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டம், மேற்கு பொன்னாப்பூர் கிராமத்தில் பிறந்தவர். தஞ்சாவூர் பூண்டி புஷ்பம் கல்லூரியில் பட்டப் படிப்பு பயின்ற இவர், சென்னை அரசு சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பை முடித்தார். 27 ஆண்டுகளுக்கும் மேலாக வழக்கறிஞராக பணியாற்றிய இவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING : ”அதிமுக MP குற்றவாளி” சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு …!!

ஸ்ரீபெரும்புதூர் முன்னாள்  அதிமுக எம்பி ராமச்சந்திரன் குற்றவாளி என சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதி அதிமுக எம்பியாக  2014 முதல் 2019 வரை இருந்தவர் கே. என் இராமச்சந்திரன். இவர் கல்லூரி விரிவாக்கத்துக்கு சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியாவில் கடன் பெற்று மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இந்த வழக்கு எம்.பி , எம்.எல்.ஏக்கள் வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வந்தது. சிபிஐ தொடர்ந்த இந்த வழக்கின் விசாரணை பல கட்டங்களை கடந்து […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

திருத்தணி அருகே திமுக அதிமுக மோதல் ….!!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே ஆர்கே பேட்டை ஒன்றிய குழு தேர்தல் தொடர்பாக திமுக அதிமுக முதல் ஆர்கே பேட்டை ஒன்றியத் தலைவர் துணைத் தலைவர் பதவியை கைப்பற்ற ஏற்பட்ட போட்டியால் திமுக அதிமுகவினர் மோதலில் ஈடுபட்டனர். திமுக , அதிமுக தலா 8 கவுன்சிலர்களை பெற்றுள்ளதால் சுயேட்சைகளில் ஆதரவு பெற மோதல் ஏற்பட்டது. போலீசார் சமாதானம் செய்தனர் . இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டு அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  

Categories
சினிமா மாநில செய்திகள்

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடியுங்கள் – முதல்வர் வேண்டுகோள் …!!

கோரோனா வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடுங்கள் என்று தமிழக முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார். சீனாவில் கடந்த இரண்டு மாதங்களாக பரவு கொரோனா வைரஸ் அந்நாட்டையே சிதைத்துள்ளது. சீனாவில் மட்டுமே கொரோனாவல் 2,912 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவை தொடர்ந்து 50க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. உலகளவில் கொரோனா வைரஸால் 3000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸ் நோய்க்கு மருந்து கண்டுபிடிக்க உலக ஆய்வாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கொரோனா வைரஸ்க்கு மருந்து கண்டுபிடிக்க தமிழக முதல்வர் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

மருத்துவர்கள் போராட்டம் : ”பணியிடை மாற்றம் இரத்து” நீதிமன்றம் அதிரடி …!!

போராட்டத்தில் ஈடுபட்ட அரசு மருத்துவர்களை இடமாற்றம் செய்த உத்தரவை ரத்து செய்து உயர்நீதிமன்றம்  உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த அக்டோபர் மாதம் பிற மாதங்களில் இணையான ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அரசு மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் டெங்கு காய்ச்சல் சிகிச்சை பாதிக்கப்பட்டுள்ள நிலையிலும் இந்த வேலைநிறுத்த போராட்டம் தொடர்ந்தது. அதே நேரம் அரசு பேச்சுவார்த்தைக்கு பிறகு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இந்த நிலையில் அவர்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டு அரசு மருத்துவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பாஜகவுக்கு எதிரான ”சக்திவாய்ந்த முதல்வர் பினராய் விஜயன்” நாராயணசாமி புகழாரம் ….!!

பினராய் விஜயன் மிகப்பெரிய சக்தி வாய்ந்த முதலமைச்சராக விளங்குவதாக புதுவை முதல்வர் நாராயணசாமி புகழாரம் சூட்டியுள்ளார். மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்த சட்டம் , தேசிய குடிமக்கள் பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகின்றது. டெல்லியில் நடந்த போராட்டம் வன்முறையாக வெடித்து 30 பேர் வரை உயிரிழந்துள்ளனர். கேரளா போன்ற பல்வேறு மாநில சட்டமன்றத்தில் இதனை கண்டித்து தீர்மானம் ஏற்றப்பட்டது. இந்நிலையில் தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் குடியுரிமை பாதுகாப்பு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிகாரத்துக்கு வர என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்…. பாஜகவை சீண்டிய நாராயணசாமி …..!!

அதிகாரம் வேண்டுமானால் பாஜகவினர் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் என்று புதுவை முதல்வர் எச்சரித்துள்ளார். தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் குடியுரிமை பாதுகாப்பு மாநாடு சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் நேற்று நடைபெற்றது.  இதில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் கொண்டு பேசிய புதுவை முதல்வர் நாராயணசாமி பேசுகையில், CAA சட்டத்தை எதிர்த்து பாஜக கூட்டணியில் உள்ள அகாலிதளம் இந்த சட்டத்தை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று கூறுகிறார்கள். பீகாரில் பாஜக கூட்டணி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எடப்பாடிக்கு 3 விஷயம் சொல்கிறேன் – அறிவுறுத்திய புதுவை முதல்வர் ..!!

CAAவை எதிர்த்து மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் நாராயணசாமி கலந்து கொண்டு பேசினார். தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் குடியுரிமை பாதுகாப்பு மாநாடு சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் நேற்று நடைபெற்றது.  இதில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் கொண்டு பேசிய புதுவை முதல்வர் நாராயணசாமி பேசுகையில், தமிழ்நாட்டில் ஒரு முதலமைச்சர் இருக்கிறார். மாண்புமிகு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், இந்திய குடியுரிமை திருத்த சட்டத்தில் இஸ்லாமிய மக்களுக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

உங்களுக்கு அதிகாரம் இல்லை…. எங்களுக்கு சொல்லாதீங்க – புதுவை முதல்வர் ஆவேசம் …!!

மதம் குறித்து மோடியோ , அமித்ஷாவோ எங்களுக்கு சொல்லி கொடுக்கவேண்டிய அவசியம் இல்லை என புதுவை முதல்வர் தெரிவித்துள்ளார். தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் குடியுரிமை பாதுகாப்பு மாநாடு சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் நேற்று நடைபெற்றது.  இதில் கலந்து திமுக தலைவர் முக.ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் கொண்டு பேசிய புதுவை முதல்வர் நாராயணசாமி பேசுகையில், இந்த நாட்டில் 7 யூனியன் பிரதேசங்கள் இருக்கின்றன. புதுச்சேரி மற்றும் டெல்லியில் சட்டமன்ற உள்ள யூனியன் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக பாஜகவுக்கு முட்டு கொடுக்கின்றது – நாராயணசாமி விமர்சனம் …!!

CAA சட்டம் நிறைவேற்ற அதிமுக பாஜகவுக்கு முட்டு கொடுத்துள்ளது என்று நாராயணசாமி விமர்சித்துள்ளார். தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் குடியுரிமை பாதுகாப்பு மாநாடு சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் நேற்று நடைபெற்றது.  இதில் கலந்து திமுக தலைவர் முக.ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் கொண்டு பேசிய புதுவை முதல்வர் நாராயணசாமி பேசுகையில் , CAA சட்ட மசோதா மக்களவை நிறைவேற்றி மாநிலங்களவைக்கு வந்தபோது அதற்கு பெரும்பான்மை இல்லாத நேரத்தில் அதிமுக உறுப்பினர்கள் முட்டுக் கொடுத்து பாராளுமன்ற மேலவையில் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

மன்னிப்பு கேளுங்க…. ஜெயிலுக்கு போயிருவீங்க…. EPSயை விளாசிய ஸ்டாலின் …!!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மக்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டுமென்று முக.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் குடியுரிமை பாதுகாப்பு மாநாடு சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்றது.  இதில் கலந்து கொண்டு பேசிய திமுக தலைவர் மு.க ஸ்டாலின் , அதிமுகவை கடுமையாக விமர்சித்தார். NPR கணக்கெடுப்பை தமிழகத்தில் நடத்த அனுமதிக்க கூடாது என்று நான் சட்டமன்றத்திலே கேட்டேன். குடியுரிமை சட்டத்தால் யாருக்கும் எந்த பாதிப்பும் வராது என்று முதலவர் எடப்பாடி பழனிச்சாமி […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

இது கூரான கத்தி…. பதம் பார்க்கும்…. பசி தீராது…. முக.ஸ்டாலின்  கண்டனம் …!!

மதமும் , ஜாதியும்  இரு கூரான கத்திகள் என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் குடியுரிமை பாதுகாப்பு மாநாடு சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்றது.  இதில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் , புதுச்சேரி முதலமைச்சர் ராமசாமி இந்து ராம் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இதில் பேசிய திமுக தலைவர் முக.ஸ்டாலின் கூறுகையில் , மதமாக இருந்தாலும் சரி , சாதியாக இருந்தாலும் சரி அது இரண்டு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

முஸ்லீம் மக்களுக்கு பாதிப்பு…. எடப்பாடி ஒப்புதல் வாக்குமூலம் ….. ஸ்டாலின் விமர்சனம் …!!

CAA , NPR சட்டத்தால் மக்களுக்கு பாதிப்பு இருக்கின்றது என்று முதல்வர் ஒப்புதல் அளித்ததாக முக.ஸ்டாலின் தெரிவித்தார். தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் குடியுரிமை பாதுகாப்பு மாநாடு சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்றது.  இதில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் , புதுச்சேரி முதலமைச்சர் ராமசாமி இந்து ராம் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இதில் பேசிய திமுக தலைவர் முக.ஸ்டாலின், குடியுரிமை சட்டத்தால் யாருக்கும் எந்த பாதிப்பும் வராது என்று முதலவர் எடப்பாடி […]

Categories
அரசியல் சற்றுமுன்

இந்துக்களுக்காக அவதாரம் எடுத்தவர்கள் எங்கே ? முக.ஸ்டாலின் கேள்வி …!!

இந்துக்களை பாதுகாக்க பிறந்தவர்கள் என்று சொல்பவர்கள் எங்கே சென்றார்கள் என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் குடியுரிமை பாதுகாப்பு மாநாடு சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்றது.  இதில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் , புதுச்சேரி முதலமைச்சர் ராமசாமி இந்து ராம் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இதில் பேசிய திமுக தலைவர் முக.ஸ்டாலின், குடியுரிமை  சட்டத்திற்க்கெதிரான போராட்டம் என்பது முஸ்லீம் மக்களுக்கானது அல்ல. இந்தியர்களை கக்கூடிய  போர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

குடியுரிமை போராட்டம் : இந்தியர்களை பாதுகாக்கக்கூடிய போர் – முக.ஸ்டாலின் கருத்து …!!

குடியுரிமை சட்ட போராட்டம் என்பது இந்தியர்களை பாதுகாக்கக்கூடிய போர் என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் குடியுரிமை பாதுகாப்பு மாநாடு சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்றது.  இதில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் , புதுச்சேரி முதலமைச்சர் ராமசாமி இந்து ராம் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இதில் பேசிய திமுக தலைவர் முக.ஸ்டாலின் , இது முஸ்லீம் மக்களுக்கான பிரச்சினை மட்டும் அல்ல. ஒட்டு மொத்த நாட்டு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகத்திலும் தீர்மானம்…. EPSயின் திடீர் முடிவால் பாஜக அதிர்ச்சி ….!!

தேசிய குடிமக்கள் பதிவேட்டை அமுல்படுத்தப்பபோவதில்லை என்ற தீர்மானம் பரிசீலனையில் உள்ளது என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக டெல்லியின் வடகிழக்குப் பகுதியில் உட்பட்ட போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. கடந்த 3 நாட்கள் நடைபெற்று வரும் வன்முறையில் இதுவரை 20க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். 160க்கும் அதிகமானோர் வன்முறையால் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழ்நாட்டிலும் வண்ணாரப்பேட்டையில் CAAக்கு எதிரான போராட்டம் நடைபெற்று வருகின்றது. இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில் , தமிழ்நாட்டைப் […]

Categories

Tech |