Categories
அரசியல்

அதிமுக செய்தி தொடர்பாளர்கள் ஊடகங்களை சந்திக்க தடை..!!

அதிமுக செய்தி தொடர்பாளர்கள் மறு அறிவிப்பு வரும் வரை எந்த ஒரு கருத்தையும்  ஊடகங்களில் தெரிவிக்க வேண்டாம் என்று அதிமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது    அதிமுக கட்சி நிர்வாகிகள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின்  தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டம் முதல்வர் இபிஎஸ், துணை முதல்வர் ஓபிஎஸ் தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் அதிமுக எம்பி, எம்.எல்.ஏ க்கள் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர்.  இக்கூட்டத்தில் நடந்து முடிந்த தேர்தல் தோல்வி, உட் கட்சியின் பிரச்சனை, கட்சிக்கு ஒற்றை தலைமை வேண்டும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சிரித்துக் கொண்டே போனோம் , சிரித்து கொண்டே வந்தோம்…. ராஜேந்திர பாலாஜி பேட்டி…!!

எப்படி சிரித்துக்கொண்டு உள்ளோ போனோமோ அப்படியே சிரித்துக் கொண்டு வெளியே வந்தோம் என்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் தோல்வி குறித்தும் , நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல் குறித்தும் , கட்சியின் தலைமை உள்ளிட்ட பல்வேறு விவகாரம் குறித்து விவாதிப்பதற்காகசென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக  கட்சியின்  தலைமையகத்தில்   முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் முன்னிலையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.இதில் அதிமுகவின்  மாவட்ட  செயலாளர்கள், MLA-க்கள் , MP_க்கள் மற்றும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுகவிற்கு  ஒற்றை தலைமை பிரச்சினை இல்லை…அமைச்சர் ஜெயக்குமார் கருத்து…!!

அதிமுகவில் ஒற்றை தலைமை என்பது ஒரு பிரச்சினையே இல்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா செய்தியாளர்களிடம் அதிமுகவின் தலைமை குறித்து கடுமையாக விமர்சனம் செய்தார். குறிப்பாக அதிமுகவிற்கு ஜெயலலிதா போல ஒற்றைத்தலைமை வேண்டும். தற்போதைய நிலையில் அதிமுகவின் அதிகாரம் யாரிடம் இருக்கின்றது என்று அடுக்கடுக்கான விமர்சனங்களை முன்வைத்தார். MLA  ராஜன் செல்லப்பா_வின் இந்த கருத்துக்கு சில MLA _க்களின்  ஆதரவையடுத்து அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டடு அதிமுக_வின் தலைமை அனைத்து தொண்டர்களுக்கும் […]

Categories
அரசியல்

அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் 5 தீர்மானம் நிறைவேற்றம்..!!

அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த அக்கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில்  5 தீர்மானம் மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளது. சென்னை ராயப்பேட்டையில் அதிமுக கட்சி நிர்வாகிகள் கூட்டம் அக்கட்சியின்  தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. முதல்வர் இபிஎஸ், துணை முதல்வர் ஓபிஎஸ் தலைமையில் நடந்த  இக்கூட்டத்தில் அதிமுக எம்பி, எம்.எல்.ஏ க்கள் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர்.  இக்கூட்டத்தில் தேர்தலில் ஏற்பட்ட தோல்வி, உட்க்கட்சியின் பிரச்சனை, கட்சிக்கு ஒற்றை தலைமை வேண்டும், பொது குழுவை கூட்டுவது தொடர்பாக விவாதிக்கப்படும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஒன்றரை மணி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“செல்போனுக்கு அனுமதியில்லை” கட்டுப்பாடுடன் முடிந்தது அதிமுக ஆலோசனை கூட்டம்..!!

அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ளும் அதிமுகவினருக்கு  செல்போன் கொண்டு செல்ல கட்டுப்பாடு விதிக்கப்பட்ட்து. நடந்து முடிந்த மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தலில் அதிகப்படியான இடங்களில் தோல்வியுற்ற அதிமுக அதிஷ்டவசமாக ஆட்சியை தக்க வைத்துக்கொண்டது. இதையடுத்து அதிமுகவில் தலைமை குறித்து பல்வேறு நிர்வாகிகள் , சட்டமன்ற உறுப்பினர்கள் கருத்து கூற ஆரம்பித்தார்கள். அதிமுகவிற்கு ஒரு தலைமை வேண்டும் என்ற கோரிக்கையை அதிமுக MLA தொலைக்காட்சியில் பேட்டி முதற்கொண்டு அளிக்க தொடங்கினார்கள்.   இதனால் அதிமுகவில் சலசலப்பு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“அதிமுக ஆலோசனை கூட்டம்” அமைச்சர் , MLA என 6 பேர் பங்கேற்கவில்லை…!!

அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிர்வாகிகள் சட்டமன்ற உறுப்பினர் கூட்டத்தில்  அமைச்சர் உட்பட 6 பேர் பங்கேற்கவில்லை. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமையகத்தில் அக்கட்சியினரின் நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தலில் அதிமுகவின் தோல்விகள் குறித்தும் ,   கட்சியின் தலைமை விவகாரம் மற்றும் பொதுக்குழுவை கூட்டுவது பற்றிய பல்வேறு முடிவுகள் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.இந்த கூட்டத்தில் அதிமுக_வின் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் என மொத்தம் 6 […]

Categories
அரசியல் தூத்துக்குடி மாநில செய்திகள்

அதிமுக பிரச்சினை வெடித்து வெளியே வர ஆரம்பித்துள்ளது… கனிமொழி பேட்டி …!!

அதிமுகவில் உள்ள பிரச்சினைகள் வெடித்து வெளியே வர ஆரம்பித்துள்ளது என்று தூத்துக்குடி MP கனிமொழி கூறியுள்ளார். அதிமுகவிற்கு ஒற்றை தலைமை வேண்டுமென்று அதிமுகவின் MLA தங்களது கருத்துக்களை கூறி வருவது அதிமுகவிற்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அதிமுக தலைமை கட்சி விவகாரங்களை பொதுவெளியில் பேச வேண்டாம் என்று கட்சி நிர்வாகிகளை வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி கூறுகையில் , அதிமுகவில் உள்ள பிரச்சினைகள் வெடித்து வெளியே வர ஆரம்பித்துள்ளன என்றார். தொடர்ந்து […]

Categories
அரசியல்

“இபிஎஸ்,ஓபிஎஸ் தலைமை” சிறப்பாக செயல்படும் அதிமுக – திண்டுக்கல் சீனிவாசன்..!!

கட்சியும், ஆட்சியும் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தலைமையில் சிறப்பாக செயல்படுகிறது என்று அமைச்சர்  திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார்.  நாடாளுமன்ற தேர்தலுக்குப் பின் அதிமுகவில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதனைத் தொடர்ந்து அதிமுகவில் அவ்வப்போது சலசலப்பு ஏற்பட்டு அதிமுக பின்னடைவை சந்தித்து வந்தது. இதற்கு காரணம் இரட்டை தலைமைதான் என்றும், இரட்டை தலைமையால் முடிவுகள் எடுப்பதில் பிரச்சனைகள் ஏற்படுவதாகவும்  அதிமுக எம்எல்ஏக்கள் பேசத் தொடங்கினர். மேலும் அதிமுகவுக்கு ஒரே தலைமை தேவை என்று மதுரை வடக்கு தொகுதி எம்எல்ஏ ராஜன் செல்லப்பா தெரிவித்தார். […]

Categories
அரசியல் திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“சசிகலா சிறையில் இருந்து வந்தாலும் வீட்டுக்குத்தான் போக வேண்டும்” அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்..!!

சிறையில் இருந்து வந்தாலும் சசிகலா வீட்டுக்குத்தான் செல்ல வேண்டும் என்று அதிமுக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார்.  ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுகவை சசிகலா கைப்பற்றினார். இதையடுத்து அவர் சொத்துகுவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டார். இதை தொடர்ந்து  ஏற்பட்ட குழப்பத்தால்  இரு அணிகளாக செயல்பட்டு வந்த  இ.பி.எஸ் ஓ.பி.எஸ் இருவரும் ஓன்று சேர்ந்து டி.டி.வி  தினகரனை அ.தி.மு.கவிலிருந்து விலக்கினர். அதிமுகவில் இருந்து தனிமைப்படுத்தப்பட்ட டி.டி.வி  தினகரன் தனியாக அமமுக என்ற கட்சியை ஆரம்பித்து வழிநடத்தி வருகிறார். இந்நிலையில் சிறையில் […]

Categories
மதுரை மாநில செய்திகள்

“எய்ம்ஸ் அமைக்கும் பணியில் தொய்வு இல்லை” அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி..!!

எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் பணியில் எவ்வித சுணக்கமும் இல்லை என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசின் ஒப்புதலுடன் ரூ.1,264 கோடி ஒதுக்கியதை _ யடுத்து மதுரை தோப்பூரில் அதற்க்கான பணி நடைபெற்று வருகிறது. எவ்வித சுணக்கமுமின்றி தொடரும்  பணியையும் , எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ள இடத்தையும் ஆய்வு செய்வதற்காக வருகின்ற 10_ஆம் தேதி முதல் 15_ஆம் தேதி வரை டெல்லி மற்றும் ஜப்பானில் இருந்து 8 பேர் கொண்ட தொழில்நுட்ப குழுவினர் வர இருக்கின்றது. மேலும் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு மாநில […]

Categories
மாநில செய்திகள்

“அச்சத்தை ஏற்படுத்தும் நிபா” முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்- அமைச்சர் விஜயபாஸ்கர்..!!

தமிழகத்தில் நிபா பரவுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரபடுத்தப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.  கேரள மாநிலத்தின் கோழிக்கோடு மாவட்டத்தில் கடந்த ஆண்டு நிபா வைரஸ் தாக்குதலுக்கு  17 பேர் பலியாகினர். அவர்களில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளித்த செவிலியர் ஒருவரும் உயிரிழந்தார். தற்போது நிபா வைரஸ்  மீண்டும் கொச்சியில் பரவி பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்  திருச்சி விமான நிலையத்தில்  செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது, தமிழகத்தில் நிபா வைரஸ் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

முதல்வர் தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்…!!

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள், தேர்தல் பொறுப்பாளர்கள்  பங்கேற்ற  ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவை மற்றும் சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி நல்ல வெற்றியை பெற்றது. 22 சட்டசபை இடைதேர்தலில் திமுக 13 இடங்களிலும் , அதிமுக 09 இடங்களிலும் வென்றது. அதே போல மக்களவையில் ஒரு தொகுதியில் மட்டும் அதிமுக கூட்டணியும் , 37 இடங்களில் திமுக கூட்டணி அசுர வெற்றி பெற்றது. சட்டமன்ற தேர்தல் வெற்றியால் அதிமுக […]

Categories
கல்வி மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் கோடை விடுமுறைக்கு பின் இன்று பள்ளிகள் திறப்பு….!!

50 நாட்களாக இருந்த கோடை விடுமுறைக்கு பின் தமிழகம் முழுவதும் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது.   தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும்  தற்போது கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது.  கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் வெயிலின் தாக்கம் மற்றும் உஷ்ணத்தால் பொதுமக்கள் வெளியே நடமாட இயலாத நிலை உருவாகியுள்ளது. மாநிலத்தின் பல இடங்களில் வெயிலின் அளவு 100 டிகிரியைத் தாண்டி மக்களை வாட்டி வதக்கி எடுக்கிறது. ஒவ்வொரு கோடை விடுமுறையிலும் வெளியிலின் தாக்கத்தால் பள்ளிகளின் திறப்பு நாள் தள்ளி போகும். அதே போல […]

Categories
அரசியல் புதுச்சேரி

புதுவை சபாநாயகராக சிவகொழுந்து போட்டியின்றி தேர்வு….!!

புதுவையின் சபாநாயகராக காங்கிரஸ் கட்சியின் சிவகொழுந்து போட்டியின்றி தேர்வாகியுள்ளார். நடைபெற்ற மக்களவை தேர்தலில் புதுவை மக்களவை தொகுதியில் புதுவையில் சட்டப்பேரவை  சபாநாயகராக பதவி வகித்த வைத்திலிங்கம் போட்டியிட்டு வெற்றி பெற்றதால் தனது சபாநாயகர்  பதவியை போட்டியிடும் போதே ராஜினாமா செய்தார். இந்நிலையில் நடைபெற்ற இருக்கு பட்ஜெட் சட்டசபை கூட்டத்தொடரை கருத்தில் கொண்டு புதிய சபாநாயகர் தேர்வுக்கான தேர்தல் நடைபெற்றது. இதற்காக போட்டியிட விரும்புபவர்களிடம் இன்று 12 மணி வரை சட்டசபை செயலாளரிடம் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று  அறிவிக்கப்பட்டது. உரிய கால அவகாசம் இல்லாமல் […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்கள் மகிழ்ச்சி “பழைய பஸ் பாஸ்ஸில் பயணிக்கலாம்” போக்குவரத்து துறை அறிவிப்பு…!!

நாளை பள்ளி திறக்க்கவுள்ள நிலையில் அனைத்து மாணவர்களும் பழைய பஸ் பாஸ் பயன்படுத்தி செல்லலாம் என்று போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும்  தற்போது கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. ஒவ்வொரு கோடை விடுமுறையிலும் வெளியிலின் தாக்கத்தால் பள்ளிகளின் திறப்பு நாள் தள்ளி போகும். அதே போல இந்தமுறையும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் கோடை விடுமுறை நீட்டிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்  பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பள்ளி திறக்கும் தேதியை மாற்ற வாய்ப்பு இல்லை , திட்டமிட்டபடி ஜூன் 3 […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“மத்திய அமைச்சரவையில் அதிமுகவுக்கு 2 இடம்” அமைச்சர் பேட்டி ..!!

மத்திய அமைச்சரவையில் அதிமுகவை சேர்ந்த 2 பேர் இடம்பெற்ற வாய்ப்புள்ளதாக அமைச்சர் பாண்டியராஜ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மோடியின் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ள பல்வேறு மாநில முதல்வர்கள் , ஆளுநர்கள் பங்கேற்றனர். இந்த சூழலில் தமிழகத்தில் பாஜகவின் கூட்டணி கட்சி அதிமுக என்பதால் தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வரும் டெல்லி சென்றனர். அதிமுக_விற்கு அமைச்சரவையில் இடம் கிடைக்குமென எதிர்பார்க்கப்பட்ட சுழலில் அதிமுக_விற்கு இடமில்லாமலே அமைச்சரவை பொறுப்பேற்றது. தமிழகத்தில் அதிமுக கூட்டணியின் பாஜக இடம்பெற்று தேனி மக்களவை […]

Categories
கல்வி மாநில செய்திகள்

“ஜூன் 3_இல் பள்ளிகள் திறக்கப்படும்” அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி…..!!

தமிழகத்தில் ஜூன் 3_ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுமென்பதில் எந்த மாற்றமுமில்லை என்று  அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும்  தற்போது கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது.  கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் வெயிலின் தாக்கம் மற்றும் உஷ்ணத்தால் பொதுமக்கள் வெளியே நடமாட இயலாத நிலை உருவாகியுள்ளது. மாநிலத்தின் பல இடங்களில் வெயிலின் அளவு 100 டிகிரியைத் தாண்டி மக்களை வாட்டி வதக்கி எடுக்கிறது. ஒவ்வொரு கோடை விடுமுறையிலும் வெளியிலின் தாக்கத்தால் பள்ளிகளின் திறப்பு நாள் தள்ளி போகும். அதே போல இந்தமுறையும் வெயிலின் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“மத்திய அமைச்சரவையில் அதிமுக” உரிய நேரத்தில் பரிசீலிக்கப்படும்… பாஜக இல.கணேசன் கருத்து…!!

மத்திய அமைச்சரவையில் அதிமுக இடம்பெறுவது  நேரத்தில் பரிசீலிக்கப்படுமென்று   பாஜக_வின் இல.கணேசன்  தெரிவித்துள்ளார். மோடியின் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ள பல்வேறு மாநில முதல்வர்கள் , ஆளுநர்கள் பங்கேற்றனர். இந்த சூழலில் தமிழகத்தில் பாஜகவின் கூட்டணி கட்சி அதிமுக என்பதால் தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வரும் டெல்லி சென்றனர். அதிமுக_விற்கு அமைச்சரவையில் இடம் கிடைக்குமென எதிர்பார்க்கப்பட்ட சுழலில் அதிமுக_விற்கு இடமில்லாமலே அமைச்சரவை பொறுப்பேற்றது. தமிழகத்தில் அதிமுக கூட்டணியின் பாஜக இடம்பெற்று தேனி மக்களவை தொகுதியில் மட்டும் அதிமுக வெற்றி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அமைச்சரவையில் இடமில்லை “சென்னைக்கு திரும்பாத OPS” டெல்லியில் இருக்கிறார்…!! 

தனது மகனுக்கு மத்திய அமைச்சரவையில் இடம் கிடைக்காததால் டெல்லியில் இருந்து OPS மற்றும் அவரது மகன் சென்னை கிளம்பாமல் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி அபார வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக ஆட்சியமைக்க இருந்ததையடுத்து பிரதமராக நரேந்திர மோடி தொடர்ந்து இரண்டாவது முறையாக  குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் பதவியேற்றார்.  அவருடன் அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்காரி, சதானந்த கவுடா, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டு அமைச்சர்களும் பொறுப்பேற்றனர். மோடியின் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மோடி தான் முடிவு செய்வார் “மத்திய அமைச்சரவையில் அதிமுக” குறித்து தமிழிசை பதில்…!!

மத்திய அமைச்சரவையில் அதிமுக இடம்பெறுவது குறித்து பாஜக தலைமை மற்றும் பிரதமர் மோடி முடிவு செய்வார்கள் என்று தமிழிசை தெரிவித்துள்ளார். மோடியின் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ள பல்வேறு மாநில முதல்வர்கள் , ஆளுநர்கள் பங்கேற்றனர். இந்த சூழலில் தமிழகத்தில் பாஜகவின் கூட்டணி கட்சி அதிமுக என்பதால் தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வரும் டெல்லி சென்றனர். அதிமுக_விற்கு அமைச்சரவையில் இடம் கிடைக்குமென எதிர்பார்க்கப்பட்ட சுழலில் அதிமுக_விற்கு இடமில்லாமலே அமைச்சரவை பொறுப்பேற்றது. இந்நிலையில் தமிழக பாஜக_வின் மாநில […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக_வில் சலசலப்பு “மகனுக்கு பதவி” OPS மீது கடுப்பில் EPS அணி…..!!

தனது செல்வாக்கை பயன்படுத்தி OPS தனது மகனுக்கு பதவி வாங்கியுள்ளார் என்று அதிமுக_விற்க்குள் முணுமுணுப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை அதிமுகவில் ஏற்கனவே நான்கு மாநிலங்களவை உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இதில் வைத்தியலிங்கம் அதிமுக_வின் நிர்வாகியாக இருக்கிறார். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் சார்பில் தேனி மக்களவை தொகுதியில்  போட்டியிட்டு வெற்றி பெற்ற ஒரே ஒரு வேட்பாளர் ரவீந்திரநாத் குமார்.மற்ற தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக தலைமையிலான கூட்டணி படுதோல்வி அடைந்தது.அமைய இருக்கும் மத்திய அமைச்சரவை பொருத்தவரை பாரதிய ஜனதா கட்சி தனது […]

Categories
அரசியல் தேசிய செய்திகள் மாநில செய்திகள்

“மத்திய அமைச்சராகும் OPS மகன்” பிரதமர் அலுவலகம் அழைப்பு…!!

தேனி மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத் குமாருக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்குவது குறித்து பிரதமர் அலுவலகத்தில் இருந்து அழைப்பு வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 350_க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உரிமை பெற்று இருக்கிறது. இன்று மாலை 7 மணிக்கு பிரதமராக நரேந்திர மோடிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணமும் , ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைக்கிறார். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

MLA_வாக பதவியேற்ற 9 பேர் “தப்பியது அதிமுக அரசு” பெரும்பான்மை கிடைத்தது..!!

சட்டப்பேரவை இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற அதிமுக_வின் 9 வேட்பாளர்கள் MLA_வாக பதவி ஏற்றுக்கொண்டனர். தமிழகத்தில் நடைபெற்ற 22 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுக 13 இடங்களில்  , அதிமுக 9 இடங்களில் வெற்றி பெற்றது. அதிமுக_வின் இந்த வெற்றியால் அரசுக்கு தேவையான பெரும்பான்மை கிடைத்துள்ளது. இந்நிலையில் இன்று சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர்கள் சட்டமன்ற உறுப்பினர்களாக பதவி ஏற்றுக் கொண்டனர். தமிழக சட்ட பேரவையில் சபாநாயகர் தனபால் முன்னிலையில் வெற்றிபெற்ற அதிமுகவின் 9 வேட்பாளர்களும் சட்டமன்ற உறுப்பினர்களாக பதவி ஏற்றுக்கொண்டனர். […]

Categories
கல்வி மாநில செய்திகள்

“பள்ளி திறப்பில் மாற்றமில்லை” அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி…..!!

கோடை விடுமுறை முடிந்து பள்ளியை திறப்பதில் மாற்றமில்லை என்றும் ஜூன் 3_ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுமென்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும்  தற்போது கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது.  கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் வெயிலின் தாக்கம் மற்றும் உஷ்ணத்தால் பொதுமக்கள் வெளியே நடமாட இயலாத நிலை உருவாகியுள்ளது. மாநிலத்தின் பல இடங்களில் வெயிலின் அளவு 100 டிகிரியைத் தாண்டி மக்களை வாட்டி வதக்கி எடுக்கிறது. கோடை விடுமுறையில் வெளியிலின் தாக்கத்தால் பள்ளிகளின் திறப்பு நாள் […]

Categories
அரசியல் கரூர் மாநில செய்திகள்

“எப்போது பதவியை ராஜினாமா செய்யுறீங்க” அமைச்சரை சாடும் செந்தில் பாலாஜி…!!

எப்போது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய போகிறீர்கள் என்று அமைச்சர்  விஜயபாஸ்கருக்கு செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்தில் நடைபெற்ற மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள் திமுகவிற்கே சாதகமாகியது. 38 மக்களவை தொகுதிகளில் போட்டியிட்ட திமுக கூட்டணி 37 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதே போல 22 சட்டமன்ற தொகுதிகளில் 13_யை திமுக தனதாக்கி கொண்டது. இதில் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் அதிமுக_வில் இருந்து TTV தினகரனுக்கு ஆதரவு தெரிவித்ததால் நீக்கப்பட்ட செந்தில் பாலாஜி அமமுக_த்தில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“குளம் குட்டையில் மலரும் தாமரை” தமிழகத்தில் மலராது…. திருமாவளவன் விமர்சனம்….!!

தாமரை குளம் , குட்டையில் மலரும் தமிழகத்தில் மலராது என்று திருமாவளவன் விமர்சித்துள்ளார். இந்திய மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடந்து முடிந்து நேற்று வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவு அறிவிக்கப்பட்டது. இதில் தேசியளவில் பாஜக கூட்டணி 350 இடங்களை கைப்பற்றி தனி மெஜாரிட்டியுடன் தனது ஆட்சியை தக்க வைத்தது. இந்தியா முழுவதும் இந்த வெற்றியை பாஜக_வினர் கொண்டாடி வருகின்றனர். தேசியளவில் அசத்தல் வெற்றியை பெற்ற பாஜக கூட்டணி தமிழகத்தில் எடுபடவில்லை. தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“மத்திய அரசுக்கு எதிராக தவறான பிரச்சாரம்” அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி…!!

மத்திய அரசுக்கு எதிராக ஸ்டாலின் செய்த தவறான பிரச்சாரம் வென்று விட்டது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இந்திய மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடந்து முடிந்து நேற்று வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவு அறிவிக்கப்பட்டது. இதில் தேசியளவில் பாஜக கூட்டணி 350 இடங்களை கைப்பற்றி தனி மெஜாரிட்டியுடன் தனது ஆட்சியை தக்க வைத்தது. இந்தியா முழுவதும் இந்த வெற்றியை பாஜக_வினர் கொண்டாடி வருகின்றனர். தேசியளவில் அசத்தல் வெற்றியை பெற்ற பாஜக   தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இடைத்தேர்தல் : திமுக 14 தொகுதி முன்னிலை…. அதிமுக 08 தொகுதி முன்னிலை..!!

சட்ட பேரவை இடைத்தேர்தலில் திமுக 14 மற்றும் அதிமுக 08 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கிறது  மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 18-ம் தேதி தொடங்கி மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக 542 தொகுதிகளுக்கு நடத்தப்பட்டது. இதோடு  சேர்த்து 22 சட்ட பேரவை தொகுதிக்கும் இடைத்தேர்தல்   நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு கடந்த ஏப்ரல் 18-ம் தேதி  18 தொகுதிகளுக்கும், மீதமுள்ள   4 தொகுதிகளுக்கு மே- 19 ம் தேதி நடத்தப்பட்டது. இன்று வாக்கு பதிவு எண்ணிக்கை (மே 23-ம் தேதி) நடைபெறுவதாக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இடைத்தேர்தல் : திமுக 11 தொகுதி, அதிமுக 11 தொகுதி சமநிலை…!!

சட்ட பேரவை இடைத்தேர்தலில் திமுக 11 மற்றும் அதிமுக 11 தொகுதிகளிலும் சம நிலையில் முன்னிலை வகிக்கிறது  மக்களவை தேர்தலுக்கான 542 தொகுதிகளுக்கு தேர்தல் கடந்த ஏப்ரல் 18-ம் தேதி தொடங்கி மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடத்தப்பட்டது. இதோடு  சேர்த்து கடந்த ஏப்ரல் 18-ம் தேதி   சட்ட பேரவை இடைத்தேர்தலுக்கான 18 தொகுதிகளுக்கு தேர்தல்  நடைபெற்றது. மீதமுள்ள 4 தொகுதிகளுக்கு மே- 19 ம் தேதி நடத்தப்பட்டது. இன்று வாக்கு பதிவு எண்ணிக்கை (மே 23-ம் தேதி) நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. தற்போது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகம் மற்றும் புதுச்சேரி மக்களவை தொகுதி : திமுக 37 தொகுதி முன்னிலை…. அதிமுக 2 தொகுதி முன்னிலை..!!

மக்களவை தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் திமுக 37 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது  மக்களவை தேர்தலுக்கான 542 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. இத்தேர்தல் கடந்த ஏப்ரல் 18-ம் தேதி தொடங்கி மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடத்தப்பட்டது. அதன்பின் பெரிய அளவில் வன்முறை எதுவுமின்றி தேர்தல் அமைதியான முறையில்  நடந்துள்ளது என தேர்தல் ஆணையம் அறிவித்தது.   இன்று வாக்கு பதிவு எண்ணிக்கை (மே 23-ம் தேதி) நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. தற்போது வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மக்களவை தொகுதியில் திமுக  தமிழகம் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

கருத்து கணிப்பில் பாஜக ஆட்சி…. விருந்து வைக்கும் அமித்ஷா…. தமிழக முதல்வருக்கு அழைப்பு…!!

பாஜக தேசிய தலைவர் அமித் ஷா அக்கட்சியின் கூட்டணி கட்சி தலைவர்களுக்கு  நாளை விருந்து அளிக்கிறார்.  இந்திய நாடாளுமன்ற தேர்தல்  543 தொகுதிகளுக்கு  வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. வாக்கு பதிவு மே 23 ஆம் தேதி எண்ணப்பட்டு அறிவிப்பு வெளியாக உள்ளது. இத்தேர்தல் ஏப்ரல் 11 ஆம் தேதி முதல் தொடங்கி, மே 19 -ஆம் தேதி வரை நடைபெற்றது. மக்களவை தேர்தல் இறுதி கட்ட  வாக்குப்பதிவு நேற்றே முடிவடைந்த நிலையில் தேர்தலுக்கு பின் நடத்தப்பட்ட கருத்துகணிப்பில் மத்தியில் ஆட்சி செய்யும்  பாஜக 300 இடங்களுக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“தேர்தல் முடிவு வரும் முன்னே M.P யான ரவீந்திரநாத்” கல்வெட்டை அகற்ற ஓ.பி.எஸ்  நடவடிக்கை எடுக்க வேண்டும் – தங்க தமிழ்செல்வன் வலியுறுத்தல்..!!

ரவீந்திரநாத்  பாராளுமன்ற உறுப்பினர் என்று எழுதப்பட்ட கல்வெட்டை அகற்ற துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ்  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தங்க தமிழ்செல்வன் வலியுறுத்தியுள்ளார்   தமிழகத்தில் வேலூர் தொகுதியை தவிர்த்து 38 பாராளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த மாதம் ஏப்ரல் 18-ம் தேதி நடைபெற்றது. தேனி தொகுதியில் அ.தி.முக சார்பில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் போட்டியிட்டுள்ளார். அவரை எதிர்த்து அ.ம.முக சார்பில் தங்க தமிழ்செல்வன் களத்தில் உள்ளார்.  நாளை மறுநாள் 19-ம் தேதி  மீதமுள்ள திருப்பரங்குன்றம் , அரவக்குறிச்சி, […]

Categories
திருச்சி மாநில செய்திகள்

காந்தியை சுட்டதில் தவறில்லை “கமலை நடமாட விட மாட்டோம்” செண்பக மன்னார் ஜீயர் சர்ச்சை கருத்து…!!

காந்தியை கோட்சே சுட்டதில் தவறில்லை நடிகர் கமலை நடமாட விடப்போவதில்லை என்று செண்டலங்கார செண்பக மன்னார் ஜீயர் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரவக்குறிச்சி சட்ட பேரவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்த கமல் , சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாதி ஒரு இந்து என்றும் , அது  நாதுராம் கோட்சே என்று கூறினார். இவரின் இந்த சர்சை  பேச்சுக்கு பாஜக , அ.தி.மு.க. மற்றும்  இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன. மேலும் கமல் மீது  […]

Categories
அரசியல் தேசிய செய்திகள் மாநில செய்திகள்

“கமலுக்கெதிராக வழக்கு தள்ளுபடி” டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி…!!

கமலுக்கெதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் காலியாக இருக்கும் 4 சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தில் தமிழக அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. அரவக்குறிச்சி சட்ட பேரவை தொகுதியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்த கமல் , சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாதி ஒரு இந்து என்றும் , அது  நாதுராம் கோட்சே என்று கூறினார். இவரின் இந்த பேச்சுக்கு சர்சையை ஏற்படுத்தியது. மேலும் இதற்க்கு பாஜக , அ.தி.மு.க. மற்றும்  இந்து அமைப்புகள் கடும் கண்டனம் […]

Categories
அரசியல் கரூர் மாநில செய்திகள்

“முதல் தீவிரவாதி இந்து” கமல்ஹாசன் மீது இரண்டு பிரிவில் வழக்கு பதிவு…!!

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என்று கூறிய கமல்ஹாசன் மீது அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் இரண்டு பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நடைபெற இருக்கும் காலியாக இருக்கும் 4 சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தில் தமிழக அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. 4 தொகுதிகளில் ஒன்றான அரவக்குறிச்சி தொகுதியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளருக்கு ஆதரவாக கமல் பிரசாரம் செய்த போது , சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என்று கூறியது பெரும் சர்சையை ஏற்படுத்தியது. கமலின் இந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“கமலுக்கு அரசியல் சரி வராது” மக்கள் நீதி மைய்யத்தை கலைத்து விடலாம்…செல்லூர் ராஜீ விமர்சனம்..!!

கமல்ஹாசனுக்கு அரசியல் சரிவராது அவர் மக்கள் நீதி மய்யத்தை கலைத்துவிட்டு மீண்டும் கலைத்துறையில் ஈடுபடலாம் என்று அமைச்சர் செல்லூர் ராஜீ விமர்சனம் செய்துள்ளார். நடைபெற இருக்கும் 4 சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தில் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. 4 தொகுதிகளில் ஒன்றான அரவக்குறிச்சி தொகுதியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளருக்கு ஆதரவாக கமல் பிரசாரம் செய்த போது , சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என்று கூறியது பெரும் சர்சையை ஏற்படுத்தியது. பிஜேபி , […]

Categories
மாநில செய்திகள் விளையாட்டு

ரூ15,00,000… தங்கம் கோமதிக்கு பரிசு அறிவித்தது அதிமுக…..!!

கத்தாரில் நடைபெற்ற ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற வீராங்கனை கோமதிக்கு அதிமுக சார்பில் ரூ.15 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.  கத்தாரின் தலைநகர் தோஹாவில் நடைபெற்ற ஆசிய தடகளப்போட்டியில் பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப் பந்தயப்போட்டியில் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த வீராங்கனை கோமதி மாரிமுத்து தங்கம் வென்று சாதனை படைத்தார். தங்கம் வென்ற கோமதிக்கு பல்வேறு தரப்பினர் தங்களின் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். இதில்  தி.மு.க. சார்பில் ரூ.10 லட்சமும் ,காங்கிரஸ் சார்பில் ரூ.5 லட்சமும் அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டது. மேலும் திரைத்துறையை […]

Categories
அரசியல்

“அ.தி.மு.க கூட்டணி அமோக வெற்றி பெறும் “அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி…!!

நாடாளுமன்ற மற்றும்  சட்டமன்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியே அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும் என அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.  கடந்த ஏப்ரல் மாதம் 11_ஆம் தேதி தொடங்கிய பாராளுமன்ற தேர்தல் வருகின்ற மே மாதம் 19_ஆம் தேதி வரை 7 கட்டங்களாக தொடங்கி நடைபெற்று வருகின்றது.இந்நிலையில் தமிழகத்தில் 2_ ஆம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு  கடந்த 18 _ ஆம் தேதி நாடடைபெற்று முடிந்த நிலையில் அறிவிக்கப்படாத  4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

4 MLA_க்கள் தகுதி நீக்கமா..? சபாநாயகருடன் கொறடா ஆலோசனை…!!

சபாநாயகர் தனபாலை அதிமுக_வின் கொறடா ராஜேந்திரன் மற்றும் அமைச்சர் சிவி சண்முகம் திடீரென சந்தித்துள்ளதால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக சபாநாயகர் தனபாலை அதிமுக_வின் சட்டமன்ற  கொறடா ராஜேந்திரன் மற்றும் அமைச்சர் சிவி சண்முகம் திடீரென சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர். இதில் அதிமுக கட்சியின் சட்டமன்ற கொறடா பங்கேற்றுள்ளதால் அதிமுக M.L.A_க்கள்  தொடர்பாக ஏதாவது பரிந்துரையாக இருக்கலாம் என தகவல் தெரியவந்துள்ளது. இதில் டிடிவி தினகரனுக்கு ஆதரவு தெரிவித்து வரும் அதிமுக MLA_க்கள்  மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்படலாம் என்றும் பேசப்படுகின்றது. […]

Categories
அரசியல் அரியலூர் மாவட்ட செய்திகள்

“இன்று ஒரு நாளாவது நேர்மையாக செயல்படுங்கள்” திருமாவளவன் வேண்டுகோள்….!!

அனைத்து தேர்தல் அதிகாரிகளும் இன்று ஒரு நாளாவது அவர்களது பணிகளில்  நேர்மையாக செய்ல்ப்பட்டு வாக்குப்பதிவினை முடிக்க வேண்டும் என்று திருமாவளவன் வேண்டுகோள்விடுத்தார்.  விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் போட்டியிடுகிறார். அரியலூர் மாவட்டத்திலுள்ளா அங்கனூர் எனும் கிராமத்தை சேர்ந்த இவர் இன்று காலை அங்கனூர் கிராமத்தில் உள்ள தொடக்கப்பள்ளியில் தனது தாயாருடன் வரிசையில் நின்று வாக்கினை பதிவு செய்தார். பின்னர் திருமாவளவன் செய்தியாளர்களை  சந்தித்தார். அப்போது பேசிய அவர் , தற்போது […]

Categories
மாநில செய்திகள்

“வேலூர் மக்களவை தேர்தல் இரத்து” அதிமுக சார்பில் வழக்கு ……!!

வேலூர் மக்களவை தொகுதி தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்ததை எதிர்த்து அதிமுக சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடைபெறுமென்றும் , தமிழ்நாட்டில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு  ஏப்ரல் 18_ஆம் தேதி ஒரே கட்டமாக  நடைபெறுமென்று தேர்தல் ஆணையம் கடந்த மாதம் அறிவித்திருந்தது.இதையடுத்து இந்தியா முழுவதும் பறக்கும் படையினர் தீவிர சோதனை நடத்தினர். இந்நிலையில், தி.மு.க. பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான துரைமுருகன் மற்றும் அவரது மகன் கதிர் ஆனந்த் போட்டியிடும் வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம் பதுக்கி […]

Categories
அரசியல் மாநில செய்திகள் வேலூர்

“வேலூர் மக்களவை தேர்தல் இரத்து” தேர்தல் ஆணையம் அறிவிப்பு….!!

வேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தல் இரத்து செய்யப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் மக்களவை தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவானது நாளை மறுநாள் நடைபெறயுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் அதற்கான பணிகளை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.மேலும் இந்தியா முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமுலுக்கு வந்து தீவிர கண்காணிப்பு நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் கடந்த 30 ஆம் தேதி திமுக பொருளாளர் துரைமுருகன் மற்றும் திமுக நிர்வாகி சீனிவாசன் ஆகியோர் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். மேலும் இதில் 11.53 […]

Categories
அரசியல்

நிதின் கட்கரியை ஏன் எடப்பாடி தடுக்கவில்லை…. ஸ்டாலின் கேள்வி?

நிதின் கட்கரி 8  வழி  சாலை அமல்படுத்துவோம் என கூறியபோது தமிழக  முதலமைச்சர் தடுக்காதது ஏன் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.  நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சியினரின் தேர்தல் பரப்புரை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் திமுக சார்பில்  ஸ்ரீபெரும்பதூர் தொகுதியில் போட்டியிடும்  திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலுவை ஆதரித்து திமுக தலைவர் முக.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய ஸ்டாலின் , மோடி குஜராத் மாநிலத்தை மிக சிறந்த மாநிலமாக […]

Categories
அரசியல் தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கடற்கரை பகுதிகளில் தமிழிசை வாக்கு சேகரிப்பு…!!

பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன், சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளர் சின்னப்பன் ஆகியோர் விளாத்திகுளம் கடற்கரைப்பகுதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபட்டன. 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெறுகின்றது. தமிழகத்தில்  நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தளுக்கான வாக்குப்பதிவு வருகின்ற  18_ ஆம் தேதி  நடைபெற இன்னும் இரண்டு நாட்கள் உள்ள நிலையில் அனைத்து  கட்சிகளும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வாக்குசேகரித்து வருகின்றன.  இதையடுத்து தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் அ.தி.மு.க கூட்டணி சார்பில் வேட்பாளராக பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்  […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

தமிழக முதலமைச்சர் இன்று கரூர் வருகை…!!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி  தேர்தல் பிரசாரத்துக்காக  கரூர், பெரம்பலூர் ஆகிய பகுதிகளில்  இன்று மாலை  வருகிறார். 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு   7 கட்டங்களாக நடைபெறுகின்றது. தமிழகத்தில்நாடாளுமன்ற  தேர்தலுடன் சேர்த்து 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. இடையடுத்து தமிழகத்தில் வருகின்ற 18_ ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுவதால் அரசியல் கட்சித்தலைவர்கள் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து  தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றன. இந்நிலையில்  முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய  கரூருக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“ஸ்டாலினுக்கு பேச தடையில்லை” உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!

 தேர்தல் நேரத்த்தில் எதிர்க்கட்சி , ஆளுங்கட்சி பரஸ்பரம் விமாசர்சிக்க என்ன இருக்கிறது என்று கூறி ஸ்டாலினுக்கு பேச தடைவிதிக்க முடியாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏப்ரல் 18_ஆம் தேதி தமிழகத்தில் மக்களவை மற்றும் 18 சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான  வாக்குப்பதிவு நடைபெறுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.  இதையடுத்து அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுப்பட்டு வருகின்றனர். இதில் அரசியல் கட்சிகள் ஒவ்வொரு கட்சிகள் மீது மாறி மாறி விமர்சனம் செய்து வருகின்றனர். மேலும் திமுக தலைவர் முக.ஸ்டாலின் அதிமுக […]

Categories
அரசியல் கன்னியாகுமாரி

பாஜக ஜீரோ , காங்கிரஸ் சூப்பர் ஹீரோ… தேர்தல் அறிக்கை குறித்து ஸ்டாலின் கருத்து….!!

பாஜக வெளியிட்ட தேர்தல் அறிக்கை ஜீரோ என்றும், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை சூப்பர் ஹீரோ என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் வசந்தகுமார் வேட்பாளராக களமிறங்குகின்றார். அதே போல அதிமுக கூட்டணியில் பாஜக சார்பில்  பொன்.ராதாகிருஷ்ணன் களமிறங்குகின்றார். இதையடுத்து நாகராஜகோவில் திடலில் வசந்தகுமாரை ஆதரித்து திமுக தலைவர் முக. ஸ்டாலின் பரப்புரை செய்தார். அப்போது, பேசிய ஸ்டாலின் , பொன்.ராதாகிருஷ்ணன் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு எந்த நலத்திட்டங்களையும் செய்யவில்லை என்று குற்றம் சாட்டினார். மேலும் பாஜக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”தனிநபர் தாக்குதல் வேண்டாம்” ஸ்டாலினுக்கு நீதிபதி அறிவுரை…!!

கோடநாடு விவகாரத்தில் முதல்வரும் , ஸ்டாலினும் தனிநபர் தாக்குதலில் ஈடுபட வேண்டாம் என்று உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. கோடநாட்டில் நடைபெற்ற கொலை , கொள்ளை வழக்கில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பு இருப்பதாக திமுக தலைவர் முக. ஸ்டாலின் குற்றம் சாட்டி வந்த நிலையில் அவர் மீது தமிழக அரசு அவதூறு வழக்கு தொடர்ந்தது. இந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று திமுக தலைவர் முக. ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு விசாரணையை தொடர்ந்த நீதிமன்றம் ஸ்டாலின் மீதான விசாரணைக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மீண்டும் மோடி வேண்டாம் மோடி….. ராகுலுக்கு பெருகும் ஆதரவு….. புதிய தலைமுறை கருத்துக்கணிப்பு…!!

நாடாளுமன்ற தேர்தலில் தமிழக மக்கள் ஆதரவு குறித்து புதிய தலைமுறை சார்பில் நடத்தப்பட்ட  கருத்துக் கணிப்புகளின்  முடிவுகள் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப் பதிவு வருகின்ற ஏப்ரல் 11ம் தேதி தொடங்குகி 7 கட்டமாக நடைபெறுகின்றது. மேலும் வாக்குப் பதிவு தொடங்குவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு வரை தான் கருத்துக் கணிப்புகள் வெளியிட முடியும் என தேர்தல் ஆணையம் அறிவித்த நிலையில், பல்வேறு தரப்பினரும் தங்ளின் கருத்துக் கணிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் டைம்ஸ் நவ்-விஎம்ஆர் நடத்திய  கருத்துக் கணிப்பு ஒன்றினை […]

Categories
அரசியல் தேசிய செய்திகள் மாநில செய்திகள்

திமுக 33 ……பாஜக 279 ….. டைம்ஸ் நவ் கருத்து கணிப்பில் தகவல்…!!

நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி ஆட்சியமைக்குமென டைம்ஸ் நவ் நடத்திய கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப் பதிவு வருகின்ற ஏப்ரல் 11ம் தேதி தொடங்குகி 7 கட்டமாக நடைபெறுகின்றது. மேலும் வாக்குப் பதிவு தொடங்குவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு வரை தான் கருத்துக் கணிப்புகள் வெளியிட முடியும் என தேர்தல் ஆணையம் அறிவித்த நிலையில், பல்வேறு தரப்பினரும் தங்ளின் கருத்துக் கணிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் டைம்ஸ் நவ்-விஎம்ஆர் நடத்திய  கருத்துக் […]

Categories

Tech |