Categories
அரசியல் மாநில செய்திகள்

“7பேர் விடுதலை” மு.க.ஸ்டாலின் கேள்வியும்… OPSஇன் பதிலும்…!!

தமிழகத்தில் 7 பேர் விடுதலை குறித்து பேரவையில் மு.க.ஸ்டாலின் எழுப்பிய கேள்விக்கு துணை முதல்வர் O.பன்னீர்செல்வம் பதிலளித்துள்ளார். தமிழகத்தில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நீண்டநாள்களாக சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உட்பட 7 தமிழர்களின் விடுதலை தமிழக ஆளுநரின் ஒற்றை கையெழுத்திற்க்காக நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது. ஆளுநர் காலம் கடத்துவதன் காரணமாக எதிர்க்கட்சிகள் சமூகஆர்வலர்கள் உள்ளிட்டோர் நீதிமன்றத்தை நாடினர். ஆனால் நீதிமன்றமும் இவ்விவகாரத்தை பொறுத்த வரையில் ஆளுநர் அதிகாரத்தில் தலையிட முடியாது என்று  கைவிரித்துவிட்டது. இந்நிலையில் இன்று […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நவம்பர் 1ஆம் தேதி தமிழ்நாடு நாள்… பேரவையில் முதல்வர் அறிவிப்பு…!!

இனி வருடந்தோறும் நவம்பர் 1 ஆம் தேதி தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும்  என்று பேரவையில் முதல்வர் பழனிசாமி தெரிவித்தார். தமிழகத்தில் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன சட்ட மானியக்கோரிக்கை விவாதங்களின் முடிவில் இறந்தோரும் விதி 110இன் கீழ் ஏராளமான அறிவிப்புகளை முதல்வர் பழனிசாமி வெளியிட்டு வந்தார் அதன்படி, இன்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் விதி 110இன் கீழ் பேசிய முதல்வர், தமிழகத்தில் நீர் மேலாண்மை, கோதாவரி-காவிரி இணைப்பு திட்டம், மத்திய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகத்திற்கு ஆளுநர் பதவி தேவையில்லை… மு.க.ஸ்டாலின் அதிரடி பேச்சு…!!

தமிழகத்திற்கு ஆளுநர் பதவி தேவையில்லை என்பதே திமுகவின்  நிலைப்பாடு என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவை கூட்டத் தொடரின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அதன்படி இன்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத் தொடரின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தின் முடிவில்  பேசிய, திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின், மத்திய அரசின் அணை பாதுகாப்பு மசோதாவை தமிழகம் எதிர்க்க வேண்டும் என்றும், இம்மசோதா கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என்றும் தெரிவித்த அவர், அதற்கு எதிராக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அஸ்ஸாம் மொழியில் திருக்குறள்…. பேரவையில் முதல்வர் அறிவிப்பு…!!

அஸ்ஸாம் மொழியில் திருக்குறளை மொழிபெயர்க்கப்படும் என பேரவையில் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கி மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. விவாதங்களின் முடிவில் ஒவ்வொரு நாளும் விதி 110இன் கீழ் பல்வேறு அறிவிப்புகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து வருகிறார். அதன்படி, இன்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் சில புதிய அறிவிப்புகளை முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ளார். அதில், ரேஷன் கடை ஊழியர்களின் குடும்பநல நிதி 2 லட்சத்திலிருந்து 3 லட்சமாக உயர்த்தப்படும். ரேஷன் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மத்திய அரசு மசோதாவிற்கு எதிராக கவன ஈர்ப்பு தீர்மானம்…. பேரவையில் ஸ்டாலின் அதிரடி..!!

மத்திய அரசின் அணைகள் பாதுகாப்பு  மசோதாவிற்கு எதிராக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவர வேண்டுமென திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கி மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. விவாதங்களின் முடிவில் ஒவ்வொரு நாளும் விதி 110இன் கீழ் பல்வேறு அறிவிப்புகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து வருகிறார். அதன்படி, இன்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மத்திய அரசின் அணைகள் பாதுகாப்பு மசோதாவை பேரவையில் முதல்வர் தாக்கல் செய்தார். இதை எதிர்த்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தியாகராஜ பாகவதருக்கு ரூ50,00,000த்தில் மணிமண்டபம்….பேரவையில் முதல்வர் பேச்சு..!!

திருச்சியில் தியாகராஜ பாகவதருக்கு ரூ50 லட்சத்தில் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்படும் என பேரவையில் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கி மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. விவாதங்களின் முடிவில் ஒவ்வொரு நாளும் விதி 110இன் கீழ் பல்வேறு அறிவிப்புகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து வருகிறார். அதன்படி, இன்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் சில புதிய அறிவிப்புகளை முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ளார். அதில், நீர் மேலாண்மையை மேம்படுத்த மாவட்டங்கள் வாரியாக […]

Categories
அரசியல் மாநில செய்திகள் வேலூர்

“கதிர் ஆனந்த் வேட்புமனு பரிசீலனை நிறுத்தம்” கலக்கத்தில் திமுகவினர் …!!

வேலூர் மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த்தின் வேட்புமனு மீதான பரிசீலனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த மே மாதம் நாடு முழுவதும் மக்களவை தேர்தல் நடைபெற்றதில் பணம் பட்டுவாடா செய்ய கோடிக்கணக்கில் வைத்துள்ளதாக புகாரில் சிக்கிய வேலூர் மக்களவை தொகுதிக்கு மட்டும் தேர்தல் இரத்து செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து ரத்து செய்யப்பட்ட வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் வருகின்ற ஆகஸ்ட் 5-ஆம் தேதி நடைபெறுமென்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதைத்தொடர்ந்து திமுக , அதிமுக மற்றும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

செந்தில் பாலாஜியை எச்சரித்த சபாநாயகர் ….!!

சட்டசபையின் மாண்புகளை கெடுக்கும் வகையில் செயல்படக்கூடாது என்று செந்தில் பாலாஜிக்கு சபாநாயகர் தனபால் எச்சரிக்கை விடுத்துள்ளார். நடைபெற்று வரும் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் இன்றைய விவாதத்தில்  எதிர்க்கட்சி தலைவரான முக.ஸ்டாலின் உயர்மின் கோபுரம் தொடர்பாக கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் தங்கமணி விளக்கம் அளித்துக் கொண்டு இருக்கும் போது அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி குறுக்கிட்டார். அப்போது செந்தில் பாலாஜி எழுந்து நின்று கைகளை நீட்டி பேச முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் கடுப்பாகிய துணை முதலவர் ஓ.பன்னீர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“மாநில உரிமையை விட்டுக் கொடுக்க மாட்டோம்” அமைச்சர் விஜயபாஸ்கர் …!!

மாநிலத்தின் உரிமையை எந்த நிலையிலும் விட்டுக் கொடுக்க மாட்டோம் என்று சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற தமிழக சட்டசபையில் மருத்துவ படிப்புக்கு பிறகு தேசிய வெளியேறுதல் தேர்வு மசோதா குறித்து  கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின்  கூறுகையில் , இறுதி ஆண்டு பயிலும் மருத்துவ மாணவர்கள் தேசிய எக்ஸிட் தேர்வு எழுத வேண்டும் என்ற மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளதை தமிழகம் ஏற்கக்கூடாது  என்று தெரிவித்தார். இதற்க்கு பதிலளித்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நூலகமாக மாறும் 45 அரசு பள்ளிகள்…. பேரவையில் அமைச்சர் அறிவிப்பு …!!

ஒரு மாணவர்கள் கூட சேராத  45 பள்ளிகள் தற்காலிக நூலகங்களாக மாற்றப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தமிழக சட்ட பேரவை கூட்டத் தொடரில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இதையடுத்து இன்று சட்டப்பேரவையில் கேள்வி நேரத்திற்குப் பின்னர் பள்ளி கல்வித் துறை தொடர்பாக திமுக எம்எல்ஏ தங்கன் பொன்னரசு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது பேசிய அவர், மாணவர்கள் சேர்க்கை குறைவாக உள்ள 1248 பள்ளிகளை மூடிவிட்டு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வீட்டு “வாடகை ஒப்பந்தம்”120 நாட்களாக நீட்டிப்பு…பேரவையில் OPS அறிவிப்பு…!!

வீட்டு வாடகை ஒப்பந்தங்களை மேற்கொள்ள கால அவகாசத்தை நீட்டிக்கும்  சட்டத் திருத்த மசோதாவை  சட்டப்பேரவையில் O.பன்னீர் செல்வம் தாக்கல் செய்துள்ளார். தமிழக சட்ட பேரவை கூட்டத் தொடரில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்கள்  நடைபெற்று வருகின்றன. இதையடுத்து இன்றைய சட்ட பேரவை கூட்டத் தொடரில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தின் முடிவில் துணை முதலமைச்சர் O.பன்னீர் செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், சொத்து உரிமையாளரும், வாடகைதாரரும் வாடகை ஒப்பந்தங்களை எழுத்துப்பூர்வமாக மேற்கொள்ள வேண்டும் என்ற சட்டத்திருத்தம் ஏற்கனவே நடைமுறையில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுகவினர் அன்பழகனையும் நியாபகம் வைத்து கொள்ளுங்கள்…. அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல் பேச்சு..!!

பேரவையில் இன்று திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் அவர்களை நினைவில் கொள்ளுமாறு அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல் செய்து பேசினார். சட்ட பேரவை கூட்டத் தொடரில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.  சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர்கள் பேசத் தொடங்கும் முன்பு கலைஞர்,திமுக தலைவர் ஸ்டாலின்,இளைஞரணி செயலாளராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கு வாழ்த்து தெரிவித்து விட்டு பேசத் தொடங்குவது வழக்கம். இதனை தொடர்ந்து இன்று செய்தித் துறை மானிய கோரிக்கையின் மீதான விவாதத்தில் பேசிய திமுக சட்ட […]

Categories
அரசியல் மாநில செய்திகள் வேலூர்

“வேலூர் தேர்தல்”திமுக VS அதிமுக VS நாம் தமிழர்…சபாஷ் சரியான போட்டி…!!

மக்களவை தேர்தலில் நாம் தமிழர் கட்சி கணிசமான வாக்குகளை பெற்றதால் வேலூர் தேர்தலில் திமுக, அதிமுக,நாம் தமிழர் கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏப்ரல் 18ம் தேதியன்று நடைபெற இருந்த வேலூர் மக்களவை தேர்தல் போட்டியானது பணப்பட்டுவாடா நடைபெற்றதன் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது.இதையடுத்து தேர்தல் ஆணையம் ஆகஸ்ட் 5ம் தேதி தேர்தலை நடத்த வேண்டும் என உத்தரவிட்டது. அதன்படி ஜூலை 11 முதல் 18 ஆம்தேதி வரை வேட்பு மனு தாக்கல் நடைபெறும் என்று […]

Categories
அரசியல் மாநில செய்திகள் வேலூர்

“வேலூர் தேர்தல்”மொத்தம் 48 பேர் போட்டி..வேட்பு மனுத்தாக்கல் இன்றுடன் நிறைவு…!!

வேலூர் மக்களவை தேர்தலில் போட்டிடுவதற்கான வேட்பு  மனு தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது. ஏப்ரல் 18ம் தேதியன்று நடைபெற இருந்த வேலூர் மக்களவை தேர்தல் போட்டியானது பணப்பட்டுவாடா நடைபெற்றதன் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது.இதையடுத்து தேர்தல் ஆணையம் ஆகஸ்ட் 5ம் தேதி தேர்தலை நடத்த வேண்டும் என உத்தரவிட்டது. மேலும் ஜூலை 11 முதல் 18 ஆம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், இன்றுடன் வேட்புமனுத்தாக்கல் நிறைவடைந்துள்ளது.இந்நிலையில் அதிமுக, திமுக, மற்றும் நாம் […]

Categories
மாநில செய்திகள்

புதியவரி மசோதா தாக்கல்”உயரும் ஆம்னி பேருந்து கட்டணம்” பொதுமக்கள் கவலை…!!

புதிதாக வரி விதிக்கும் மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் தாக்கல் செய்யப்பட்டதால்  ஆம்னி பேருந்துக்கான கட்டணம் உயர வாய்ப்புள்ளதாக தெரிகின்றது. தமிழகத்தில் சட்ட பேரவை கூட்டம் நடைபெற்று வருகின்றது. இன்றைய கூட்டத்தொடரில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆம்னி பேருந்துகளில் ஒரு இருக்கைக்கு மாதம் ரூ.2 ஆயிரம் வரியும் , படுக்கை வசதியுடைய ஆம்னி பேருந்துகளுக்கு  ரூ.2,500 வரியும் என புதிதாக வரி விதிக்கும் மசோதாவை தமிழக சட்டசபையில்  தாக்கல்  செய்தார். இதனால் இனி வரும் காலங்களில் ஆம்னி பேருந்துக்கான கட்டணம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படடமால் இருக்க திமுக தான் காரணம்…அமைச்சர் ஜெயக்குமார் பரபரப்பு பேட்டி..!!

உள்ளாட்சி தேர்தலை விரைவில் மாநில தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னையில் தியாகிகள் தினத்தை முன்னிட்டு தமிழக அரசின் சார்பில் அமைச்சர்கள் ஜெயக்குமார்,கடம்பூர் ராஜு,பெஞ்சமின் ஆகியோர் தியாகி சங்கரலிங்கனார், ஆர்யா என்கின்ற பாஷம் செண்பகராமன் ஆகியோரது புகைப்படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், உள்ளாட்சி தேர்தலை நடத்த வில்லை என்றால் தமிழக அரசுக்கு வழங்கும் நிதியை நிறுத்துவோம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது, ஆகையால் தேர்தல் நடத்தக்கூடாது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

லாப நோக்கமின்றி மக்களுக்காக பேருந்துகள் இயக்கம்…. பேரவையில் அமைச்சர் M.R.விஜயபாஸ்கர் பேச்சு…!!

குறைந்த மக்கள்தொகை உள்ள பகுதிகளுக்கும் எந்தவித லாப நோக்கமின்றி பேருந்துகள் இயக்கப்படுவதாக அமைச்சர் எம்.ஆர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார்.  சட்ட பேரவை கூட்ட தொடரில் போக்குவரத்துத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய திமுக எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன், கடந்த ஆறு ஆண்டுகளில் இரண்டு முறை கட்டணம் உயர்த்தப்பட்டும் போக்குவரத்து கழகங்கள் நஷ்டத்தில் இயங்குவதாக அவர் தெரிவித்தார். மேலும் நிர்வாகத் திறன் இருந்திருந்தால் நஷ்டத்திலிருந்து மீட்டுவிடலாம் என்றும் தெரிவித்தார். இதற்கு பதில் அளித்த போக்குவரத்து துறை அமைச்சர் M.R.விஜயபாஸ்கர், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“சிறந்த தலைவர்” எம்ஜிஆரா ? கலைஞரா ? சட்ட பேரவையில் காரசார விவாதம்…!!

சிறந்த அரசியல் தலைவர் கலைஞரா ? எம்ஜிஆரா ? என்பது    குறித்து சட்டப்பேரவை  கூட்டத் தொடரில் காரசார விவாதம் நடைபெற்றது.  தமிழக சட்ட பேரவை கூட்டத் தொடரில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இதையடுத்து இன்று நடைபெற்ற சட்ட பேரவை கூட்டத் தொடரில் சுகாதார மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய திமுக உறுப்பினர் சரவணன், உங்கள் தலைவர் எம்ஜிஆர்க்கு தலைவர் எங்கள் தலைவர் கலைஞர் தான் என்றும், எனவே உங்களுக்கும் எங்களுக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

“அஞ்சல் துறை தேர்வுகள் இனி தமிழில் நடத்தப்படும்” – ரவிசங்கர் பிரசாத்..!!

மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், தமிழ் உள்ளிட்ட அனைத்து பிராந்திய மொழிகளிலும் அஞ்சல் துறை தேர்வுகள் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார். சில நாட்களுக்கு முன்னதாக தபால் துறை தேர்வுகள் இனி இந்தி மற்றும் ஆங்கிலத்தில் தான் நடைபெறும் என மத்திய அரசு அறிவித்தது. கடந்த 14-ம் தேதி இந்தியா முழுவதும் தபால்துறை தேர்வுகள் நடந்தது. இதில் முதல் தாளில் இருந்த கேள்விகள் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் இடம் பெற்றருந்தன. இதையடுத்து தமிழகம் உட்பட பல மாநிலங்களில் இதற்கு கடும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சூர்யாவின் பேச்சு அரவேக்காடு தனமாக உள்ளது…. அமைச்சர் கடம்பூர் ராஜு பரபரப்பு பேட்டி..!!

புதிய கல்விக் கொள்கை குறித்து நடிகர் சூர்யா பேசியது அரவேக்காடு தனமாக உள்ளது என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். நடிகர் சூர்யா நடத்தும் அகரம் பவுண்டேசன் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய சூர்யா புதிய கல்விக் கொள்கை குறித்து விமர்சனம் செய்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பலரும் இதற்கு பாராட்டுக்களையும்,  எதிர்ப்புகளையும்  தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச் ராஜா மற்றும் பாஜகவின் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சூர்யாவின் பேச்சு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பெருங்குளத்தூரில் 8 வழி சாலை…. பேரவையில் முதல்வர் அறிவிப்பு..!!

பெருங்குளத்தூரில் 8 வழிச்சாலை அமைக்க பணிகள் தொடங்கி நடைபெற்று வருவதாக சட்ட பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரில் மானியக்கோரிக்கைகள் மீதான விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதையடுத்து இன்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரின்  கேள்வி நேரத்தில் திமுக எம்எல்ஏ எஸ்.ஆர் ராஜா கிழக்கு-மேற்கு தாம்பரத்தை இணைக்கும் வகையில் மேம்பாலம் அமைக்க கோரி வலியுறுத்தியதோடு, மேம்பாலங்கள் கட்டுவதற்கான பணிகளில் தாமதம் ஏற்படுவது ஏன் என்ற கேள்வியும் முன்வைத்தார். இதற்கு பதில் அளித்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழில் தேர்வு எழுதுவது தொடர்பாக “மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்”- அமைச்சர் வேலுமணி..!!

தபால்துறை தேர்வை தமிழில் எழுதுவது தொடர்பாக மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்று அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்  தபால் துறையில்  மெயில் கார்டு, தபால்காரர், அஞ்சலக உதவியாளர், சார்டிங் அசிஸ்டெண்ட் உள்ளிட்ட தேர்வுகளுக்கு அந்தந்த மாநில மொழிகளில் வினாத்தாள் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தபால்துறை தேர்வுகளில் முதல்தாள்  இனி அனைத்து மாநிலங்களுக்கும் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே வழங்கப்படும் என்றும், இரண்டாம் தாள் அந்தந்த மாநில மொழிகளில் இருக்கும் என்று மத்திய அரசு அனைத்து தலைமை அஞ்சலகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியது. மத்திய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“தபால்துறை தேர்வு தொடர்பாக நல்ல முடிவு எடுக்கப்படும்” அமைச்சர் கருப்பணன்..!!

தபால்துறை தேர்வை தமிழில் எழுதுவது தொடர்பான விவகாரத்தில் நல்ல முடிவு எடுக்கப்படும் என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி கருப்பணன் தெரிவித்துள்ளார்  மத்திய அரசு தபால்துறை தேர்வுகளில் இனி  இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே வினாத்தாள் வழங்கப்படும் என்றும்,  இந்த இரண்டு மொழிகள் தவிர  தமிழ் உட்பட வேறு மொழிகளில் வினாத்தாள் வழங்கப்பட மாட்டாது என்றும்,  அனைத்து மாநிலங்களிலும் இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே தேர்வுகள் நடத்தப்படும் என்று அனைத்து தலைமை அஞ்சலகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியது. இந்த அறிக்கை போட்டி தேர்வுக்கு படித்து […]

Categories
மாநில செய்திகள்

பிரதமர் மோடியை சந்தித்த அதிமுக எம்.பி. மைத்ரேயன் ….!!

மாநிலங்களவை எம்.பி. பதவிக்காலம் முடிவதால் அதிமுக எம்.பி. மைத்ரேயன் பிரதமர் மோடியை சந்தித்தார். பாராளுமன்றத்தில் உள்ள  மாநிலங்களவையின் தமிழக MP_க்கள் ரத்தினவேல், கனிமொழி, மைத்ரேயன், டி.ராஜா, கே.பி.அர்ஜுனன். ஆர்.லட்சுமணன் ஆகிய 6 பேரின் பதவிக்காலம் வருகின்ற ஜூலை 24-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து திமுக  சார்பில் வைகோ , சண்முகம் , வில்சன் ஆகியோர் மாநிலங்களவைக்கு போட்டியின்றி தேர்வாகினர். அதே போல அதிமுக சார்பில் முகமது ஜான் , சந்திரசேகர்  , அன்புமணி ஆகியோர் மாநிலங்களவை உறுப்பினர்களாக போட்டியின்றி தேர்வாகினர்.  இந்நிலையில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

6 புதிய MPக்கள் போட்டியின்றி தேர்வு….பேரவை செயலாளர் அதிகாரபூர்வ அறிவிப்பு..!!

தமிழகத்திலிருந்து மாநிலங்களவை தேர்தலுக்கு மனு தாக்கல் செய்த 6 பெரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக பேரவை செயலாளர் சீனிவாசன் அறிவித்துள்ளார். தமிழகத்தில் 18ஆம் தேதி  மாநிலங்களவைத் தேர்தல் நடைபெற இருந்த நிலையில் மனு தாக்கல் செய்த   11 பேரில் வைகோவிற்கு மாற்றாக திமுக சார்பில் போட்டியிட இருந்த சம்பத் மற்றும்  சுயேச்சை வேட்ப்பாளர்கள்  உட்பட   5 பேர் தங்களது மனுக்களைத்  திரும்பப் பெற்றுக்கொள்ள 6 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இதில் அதிமுக சார்பில் போட்டியிட்ட முகமது ஜான்,சந்திரசேகர்,பாமக அன்புமணி ராமதாஸ் ஆகிய […]

Categories
அரசியல்

அதிமுகவை போல் பின்னடைவு…தோல்வி குறித்து ஜெயக்குமார் கருத்து…!!

தமிழகத்தில் நடைபெற்ற  தேர்தலில் அதிமுக  பின்னடைந்தது போல் இந்திய அணி பின்னடைந்ததாக அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார். உலக கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டியில் இந்தியா நியூஸிலாந்து  அணிகள் நேற்று முன்தினம் மோதின. மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்ட நிலையில் நிறுத்தப்பட்ட ஓவரில் இருந்து எஞ்சிய ஆட்டம் நேற்று தொடங்கியதில் நியூசிலாந்து அணி  239 ரன் எடுத்தது. பின்னர் 240 ரன் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 49.3 ஓவர்களில் 210 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்து தோல்வியைத் தழுவி ரசிகர்களுக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள் வேலூர்

வேலூர் மக்களவை தேர்தல்… அதிமுக வேட்பாளர் A.C.சண்முகம் வேட்புமனு தாக்கல்..!!

வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட உள்ள  புதிய நீதி கட்சி தலைவர் A.C.சண்முகம் வேட்மனுவை தாக்கல் செய்தார்.  வேலூரில் ஏப்ரல் 18ஆம்  தேதி நடைபெற  இருந்த தேர்தலானது  ரத்து செய்யப்பட்ட நிலையில், ஆகஸ்ட் 5ஆம்  தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இத்தேர்தலுக்கான  வேட்புமனு தாக்கல் இன்று முதல்  18ஆம்  தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அதிமுக ஆதரவுடன்  போட்டியிட உள்ள  புதிய நீதிக் கட்சித் தலைவரான A.C.சண்முகம் இரட்டை இலை சின்னத்தில் […]

Categories
மாநில செய்திகள்

“ஜோலார்பேட்டை to சென்னை” நாளை முதல் குடிநீர் விநியோகம்….முதல்வர் அறிவிப்பு..!!

நாளை முதல் ஜோலார்பேட்டையிலிருந்து ரயில் மூலம் சென்னைக்கு குடிநீர் கொண்டுவரப்படும் என்று சட்ட பேரவையில் எடப்பாடி பழனிச்சாமி  அறிவித்துள்ளார். சென்னையில்  குடிநீர் தட்டுப்பாட்டை தவிர்க்க ரயில் மூலம்  ஜோலார் பேட்டையிலிருந்து குடிநீர் கொண்டு வருவதற்க்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள  தமிழக அரசு திட்டமிட்டிருந்தது. இத்திட்டத்திற்காக  ரூ65 கோடி  ஒதுக்கப்பட்டது.  இந்நிலையில்,மூன்று கட்டங்களாக பணி நடைபெற்று வந்த நிலையில், ராட்சத குழாய்கள் மூலம் தண்ணீர்  ஜோலார் பேட்டை ரயில் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டு ரயில் தொட்டிகளில் நிரப்பப்பட்டது. இதனை தொடர்ந்து  ரயில் புறப்பட தயாராகி […]

Categories
அரசியல் மாநில செய்திகள் வேலூர்

வேலூர் நாடாளுமன்ற தேர்தல்….வேட்புமனு தாக்கல் இன்று முதல் தொடக்கம்..!!

வேலூரில் ஆகஸ்ட் 5ஆம் தேதி  நடைபெற இருக்கும் தேர்தலுக்கான வேட்மனு தாக்கல் இன்று முதல் நடைபெற இருக்கிறது. வேலூரில் ஏப்ரல் 18ஆம்  தேதி நடைபெற  இருந்த தேர்தலானது  ரத்து செய்யப்பட்ட நிலையில், ஆகஸ்ட் 5ஆம்  தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இத்தேர்தலுக்கான  வேட்புமனு தாக்கல் இன்று முதல்  18ஆம்  தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அதிமுக சார்பில் போட்டியிட உள்ள  புதிய நீதிக் கட்சித் தலைவர் A.C.சண்முகம் இன்றும், திமுக சார்பில் போட்டியிட […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“நீட் எதிர்ப்பு மசோதா நிராகரிப்பு” ஸ்டாலின் கண்டனம் …!!

தமிழக அரசு அனுப்பிய நீட் எதிர்ப்பு சட்ட மசோதா நிராகரிக்கப்பட்டதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தியளவில் மருத்துவ படிப்பிற்கு நீட் என்ற தேர்வு அறிமுகம் செய்யப்பட்டது. பல்வேறு மாநிலங்களில் எதிர்ப்பு இருந்தும் கூட நீட் தேர்வை இந்தியளவில் மத்திய அரசு கட்டாயமாக்கியது. தமிழகத்தில் அரசியல் கட்சியினரின் எதிர்ப்பையடுத்து தமிழக சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்பட்டு குடியரசு தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது.  ஆனால்  தமிழக அரசின் மசோதாவை குடியரசு தலைவர் நிராகரித்து விட்டதாக சமீபத்தில் மத்திய அரசு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அனைத்து கட்சி கூட்டத்தில் முதல்வர் ஏன் பங்கேற்கவில்லை….ஸ்டாலின் கேள்வி..!!

10% இடஒதுக்கீடு தொடர்பாக கூட்டப்பட்ட அனைத்துக் கட்சி கூட்டத்தில் முதல்வர் ஏன் பங்கேற்கவில்லை? என்று திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.  10% இடஒதுக்கீடு குறித்து அனைத்து கட்சி கூட்டம் தலைமை செயலகத்தில் நடைபெற்றது.கூட்டத்திற்கு வந்த கட்சிகள் எதன் அடிப்படையில் அழைக்கப்பட்டன என்றும்,வருகை தந்த அனைத்து கட்சிகளும் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் தான? என்றும்  திமுகவை சேர்ந்த துரைமுருகன் சட்ட பேரவைக் கூட்டத்தில்  கேள்வி எழுப்பியுள்ளார்.அதற்கு பதிலளித்த முதல்வர் பழனிச்சாமி எதிர் கட்சி தலைவர் ஸ்டாலின் கூறியதன் அடிப்படையில் அழைப்பு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

7 பேர் விடுதலை “இனி ஆளுநர் தான் முடிவெடுக்கனும்” முதல்வர் பல்டி …!!

7 பேர் விடுதலை தொடர்பாக இனி ஆளுநர் தான் முடிவெடுக்க வேண்டுமென்று தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் சட்டம் நீதி நிர்வாகம் சிறைத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் திமுக சட்டமன்ற உறுப்பினர் மாதவரம் சுதர்சன் 7 பேர் விடுதலை தமிழக அரசு தீர்மானம் போட்டு ஆளுநருக்கு அனுப்பியுள்ள நிலையில் என்ன முடிவு எடுத்துள்ளது என்று கேள்வி எழுப்பினார். இதற்க்கு பதிலளித்து பேசிய தமிழக முதல்வர் , எங்கள் அதிகாரத்துக்குட்பட்ட அமைச்சரவையை கூட்டி தீர்மானனம் நிறைவேற்றி ஆளுநருக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஏற்கப்படுமா? “வைகோவின் வேட்பு மனு”இன்று பரிசீலனை..!!

தமிழகத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க   வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெற இருக்கிறது. தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்கு 6 உறுப்பினர்களை தேர்வுசெய்வதற்காக  நடைபெறும் தேர்தலுக்க்கான  வேட்புமனு தாக்கல் நேற்றுடன்  நிறைவடைந்தது. சுயேட்சை வேட்பாளர்கள் 3 பேர் மற்றும்  அரசியல் கட்சிகளை சேர்ந்த 7 பேர்  என மொத்தம் 10 பேர் வேட்புமனுக்களை  தாக்கல் செய்துள்ளனர். இதையடுத்து வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெற இருக்கிறது. இந்நிலையில் சுயேட்சை வேட்பாளர்களின் மனுக்கள்  சட்டமன்ற உறுப்பினர்கள் 10 பேர் முன்மொழியாத காரணத்தினால்  […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

OPS மகனின் வெற்றியை எதிர்த்து மனு …….!!

தேனி மக்களவைத் தொகுதியில் ரவீந்திரநாத் குமார் வெற்றி பெற்றது செல்லாது என்று அறிவிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தேனி தொகுதியில் துணை முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார் வெற்றி பெற்றார் இந்நிலையில் ரவிந்திரநாத் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக் கோரி தேனியை சேர்ந்த மிலானி  என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் தேனி தொகுதியில் அதிகார துஷ்பிரயோகம் செய்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“அனைத்து கட்சி கூட்டம்” 21 கட்சிகளுக்கு அழைப்பு…!!

10 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பாக இன்று மாலை அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு 21 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.. பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 % இட ஒதுக்கீட்டை அமுல்படுத்த வேண்டும் என்ற சட்ட மசோதாவை மத்திய அரசு நிறைவேற்றியது. ஆனால் தமிழகம்  இந்த சட்ட மசோதாவை எதிர்த்து வந்தது. இதையடுத்து மத்திய அரசு தமிழகத்தில் 10 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்தினால் மருத்துவ கல்லூரிகளில் கூடுதலாக 25 சதவீத இடம் அளிக்கப்படும் என்று உறுதியும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அனைத்து கட்சி கூட்டத்தில் ம.நீ.ம சார்பில் கமல் பங்கேற்கிறார்…!!

முதலவர் தலைமையில் இன்று நடைபெறும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் மக்கள் நீதி மையத்தின் சார்பில் கமல்ஹாசன் பங்கேற்கிறார். பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 % இட ஒதுக்கீட்டை அமுல்படுத்த வேண்டும் என்ற சட்ட மசோதாவை  மத்திய அரசு நிறைவேற்றியது. தமிழகத்தில் இன்னும் அமுல்படுத்தப்படாமல் இருக்கும் இந்த இடஒதுக்கீடு மசோதா தொடர்பாக ஆலோசனை நடத்த தமிழக அரசியல் கட்சிகளுக்கு முதலவர் அழைப்பு விடுத்திருந்த நிலையில் , தலைமை செயலகத்தில் இன்று மாலை  ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறுகின்றது. […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

அனைத்து கட்சி கூட்டம் பங்கேற்குமா ? மக்கள் நீதி மய்யம் ……. தீடிர் ஆலோசனையில் நிர்வாகிகள் ..!!

முதலவர் தலைமையில் இன்று நடைபெறும் அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் பங்கேற்குமா என்று கேள்வி எழுந்துள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 % இட ஒதுக்கீட்டை அமுல்படுத்த வேண்டும் என்ற சட்ட மசோதாவை  மத்திய அரசு நிறைவேற்றியது. தமிழகத்தில் இன்னும் அமுல்படுத்தப்படாமல் இருக்கும் இந்த இடஒதுக்கீடு மசோதா தொடர்பாக ஆலோசனை நடத்த தமிழக அரசியல் கட்சிகளுக்கு முதலவர் அழைப்பு விடுத்திருந்த நிலையில் , தலைமை செயலகத்தில் இன்று மாலை  ஆலோசனை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“10 சதவீத இட ஒதுக்கீடு” முதல்வர் தலைமையில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம்

10 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பாக இன்று மாலை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகின்றது. பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 % இட ஒதுக்கீட்டை அமுல்படுத்த வேண்டும் என்ற சட்ட மசோதாவை மத்திய அரசு நிறைவேற்றியது. ஆனால் தமிழகம்  இந்த சட்ட மசோதாவை எதிர்த்து வந்தது. இதையடுத்து மத்திய அரசு தமிழகத்தில் 10 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்தினால் மருத்துவ கல்லூரிகளில் கூடுதலாக 25 சதவீத இடம் அளிக்கப்படும் என்று உறுதியும் அளித்துள்ளது. ஆனாலும் தமிழகத்தில் 10 % […]

Categories
மாநில செய்திகள்

நாங்கள் உடல் உறுப்பு தானம் செய்துள்ளோம்…அமைச்சர் மனம் நெகிழ பேட்டி..!!

அமைச்சர் ஜெயகுமாரும், நானும் உடல் உறுப்பு தானம் செய்துள்ளோம் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். உடல் உறுப்பு தான விழிப்புணர்வு வார விழாவானது, சென்னை,  அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் நடைபெற்றது, அமைச்சர் ஜெயக்குமார் மற்றும்  விஜயபாஸ்கர் விழாவை   தொடங்கி வைத்து ,உடல் உறுப்பை தானம் செய்த 5 பேர்  குடும்பத்திற்கு   பாராட்டு மற்றும் நினைவுப் பரிசுகளை  வழங்கினார்கள்.மேலும்  உடல் உறுப்பு தானத்தை மையப்படுத்தி நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் அளிக்கப்பட்டன. இதை தொடர்ந்து  நிகழ்ச்சியில் பேசிய சுகாதார துறை அமைச்சர் […]

Categories
கல்வி மாநில செய்திகள்

மாணவர்கள் மகிழ்ச்சி ”செருப்பு கிடையாது இனி ஷூ” அமைச்சர் அதிரடி ….!!

6_ஆம் வகுப்பு முதல் 12_ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு செருப்புக்கு பதில் ஷூ வழங்கப்படுமென்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசுகையில் , பள்ளி கல்வித்துறையை மேம்படுத்த தமிழக முதல்வர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றார். மேலும் பேசிய அவர் , தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளியில் படிக்கும் 6_ஆம் வகுப்பு முதல் 12_ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ , மாணவிகளுக்கு […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

பட்ஜெட் அறிக்கை நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளம்…நிர்மலாசீதாராமனுக்கு OPS பாராட்டு..!!!

2019-20க்கான பட்ஜெட் அறிக்கையை தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சித்தராமனை பாராட்டி துணை முதல்வர் o.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார். 2019 – 20க்கான   மத்திய பட்ஜெட் அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலாசீதாராமன் நாடாளுமன்ற மக்களவையில் நேற்று தாக்கல் செய்ததையடுத்து,தமிழக  துணை முதலமைச்சர் O. பன்னீர் செல்வம் மத்திய நிதியமைச்சர் நிர்மலாசீதராமனுக்கு  பாராட்டு தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், தொழில் முதலீடுகளை  ஊக்குவிக்கவும், நாட்டின் வளர்ச்சியை முன்னெடுத்து கொண்டு  செல்லவும், பட்ஜெட் அறிக்கை அடித்தளமாகவுள்ளது  என்று குறிப்பிட்டுள்ளார். மேலும்  பெண்களுக்கான  முன்னேற்றம் மற்றும் சிறு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மாநிலங்களவை தேர்தல் வேட்பாளர்கள் பட்டியல்….EPS ,OPS கூட்டாக அறிக்கை வெளியீடு…!!

மாநிலங்களவை தேர்தலில் அதிமுக சார்பாக  போட்டியிடும் வேட்பாளர் பெயர்களை அதிமுக தலைமை  அறிவித்துள்ளது. தமிழகத்தில்   வருகின்ற  18 ஆம்  தேதியன்று  மாநிலங்களவைத் தேர்தலானது  நடைபெற இருக்கிறது. எம்எல்ஏக்களின் எண்ணிக்கையை பொறுத்து  அதிமுக கூட்டணிக்கு    3 மாநிலங்களவை உறுப்பினர் பதவி கிடைக்க உள்ளது. இந்நிலையில், அதிமுக சார்பில் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பளார்களின்  பெயர்களை  அக்கட்சித் தலைமை அறிவித்துள்ளதன்படி, அதிமுக சார்பில்  முகமது  ஜான் மற்றும்  சந்திரசேகரன்   ஆகியோர் போட்டியிடுகின்றனர்.  கூட்டணி ஒப்பந்தத்தின் அடிப்படையில்  பா.ம.க கட்சிக்கு ஒரு சீட்டு  ஒதுக்கப்பட்டுள்ளதாக    அதிமுகவின்  ஒருங்கிணைப்பாளர் O.பன்னீர்செல்வம் மற்றும் […]

Categories
கல்வி மாநில செய்திகள்

2,00,00,000 ரூபாய் செலவில் 70,00,000மாணவர்களுக்கு TAB…கல்வித்துறை அதிரடி..!!

 2000 கோடி ரூபாய் மதிப்பில் 70 லட்சம் மாணவர்களுக்கு  TAB வழங்க நடவடிக்கைகளை  மேற்கொள்வதாக கல்வி துறையமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம்  ஆர்க்காடு  வீராசாமி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் கல்விதுறையமைச்சர்   செங்கோட்டையன் மாணவிகளுக்கு இலவச லேப்டாப்களை வழங்கினார். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், மூச்சு நின்றால் மட்டும்  மரணம்  அல்ல , முயற்சி நின்றாலும்   மரணம் தான்   என்ற அறிவுரையுடன் தொடங்கி மாணவர்கள் மத்தியில் பேசினார். அதன் பின்  செய்தியாகளை சந்தித்து  பேசிய அமைச்சர்  செங்கோட்டையன், புதிய பாடத்திட்டத்தை நன்கு புரிந்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

10% இடஒதுக்கீடு குறித்து விவாதம்…அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு மட்டும் முதலமைச்சர் அழைப்பு..!!

பொருளாதார அடிப்படியில் பின்தங்கிய  பிரிவினருக்கு 10 சதவீதம் இட ஒதுக்கீடு குறித்து  ஜூலை 8 ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது. பொருளாதார அடிப்படியில் பின்தங்கிய  பிரிவினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பு  போன்றவற்றில்  10% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியநிலையில், 10%  இடஒதுக்கீட்டை தமிழகத்தில் அமல்படுத்துவது குறித்து  விவாதிக்க திட்டமிடப்பட்டது. அதன்படி,  தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இது  குறித்து விவாதிக்க  வருகின்ற ஜூலை 8 ஆம் தேதியன்று  அனைத்துக் கட்சி கூட்டம்  தலைமை செயலக […]

Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

மருத்துவ படிப்பு கலந்தாய்வு தரவரிசை பட்டியல் வெளியீடு ….!!

மருத்துவ கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியலை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டார் மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வின் முடிவு ஜூன் 5_ஆம் தேதி வெளியாகிய நிலையில் தமிழக அரசு மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பங்களை ஜூன் 7_ஆம் தேதி முதல் 20_ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்தது.மேலும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் சான்றிதழ்களின் நகல்களை இணைத்து அனுப்ப கடந்த மாதம் 22_ஆம் தேதி வரை காலநீட்டிப்பு செய்திருந்தது. இந்நிலையில் இன்று காலை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். சேர்க்கைக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டார். […]

Categories
மாநில செய்திகள்

மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு…!!

சென்னையில் எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். சேர்க்கைக்கான தரவரிசை பட்டியலை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று வெளியிட்டார். நீட் தேர்வு முடிவானது   ஜூன் 5 ஆம் தேதி வெளியான நிலையில், மருத்துவ படிப்புகளில் பயில விரும்புவோர்  விண்ணப்பங்களை பதிவு செய்யலாம்  என தமிழக அரசு அறிவித்தன்படி, கடந்த 7 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பங்களை  பதிவு செய்யுமாறு  அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டது.   மாணவர்கள் நிரப்பப்பட்ட விண்ணப்பங்களுடன் சேர்த்து,  தங்களது  சான்றிதழ் நகலை இணைத்து அனுப்ப ஜூன்  22 ஆம் […]

Categories
மாநில செய்திகள்

தேர்தல் விதிகளை மீறுகிறீர்களா??…அமைச்சரிடம் ஸ்டாலின் கேள்வி..!

வேலூரில் தேர்தல் நடத்தை   விதிமுறைகள்      அமலுக்கு     வந்தநிலையில்  புதிய  அறிவிப்புகளை வெளியிடுவது விதிமீறல் ஆகாத? என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் நேற்று புதிய அறிவிப்புகளை  மின்துறை அமைச்சர் தங்கமணி வெளியிட்ட போது , வேலூர் மாவட்டத்திற்கும்  சேர்த்து அறிவிப்புகளை வெளியிட்டார். இதுகுறித்து இன்று சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில்  இறுதி நேரத்தில் பேசிய திமுக  தலைவர் ஸ்டாலின், வேலூரில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தநிலையில், புதிய அறிவிப்புகளை வெளியிடுவது தேர்தல் விதிமீறல் ஆகாதா என்று கேள்வி எழுப்பினார். ஸ்டாலின் கேள்விக்கு  […]

Categories
மாநில செய்திகள்

கள்ளக்குறிச்சி சர்க்கரை ஆலை….ஒரு வாரத்தில் இயக்க அமைச்சர் உறுதி..!!

கள்ளக்குறிச்சியில்   சர்க்கரை  ஆலையை  ஒரு வாரத்தில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொழில் துறை அமைச்சர் சம்பத் சட்டப்பேரவையில் உறுதியளித்துள்ளார். இன்று நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் திமுக சட்டமன்ற உறுப்பினர் பிச்சாண்டி, கள்ளக்குறிச்சியில் உள்ள கூட்டுறவு  சர்க்கரை ஆலைகள் இயங்காமல் மூடிக் கிடப்பததால் , கரும்பு விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுகின்றனர். எனவே ,  ஒரு சர்க்கரை ஆலையையாவது இயங்க அரசு  நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதற்கு பதில் அளித்து  அமைச்சர் சம்பத் பேசுகையில் , கரும்பு விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள இடர்பாடுகள் […]

Categories
மாநில செய்திகள்

பாலின் விலை உயர்வு…பேரவையில் முதல்வர் அறிவிப்பு..!!

சட்ட பேரவை கூட்டம் முடிவதற்கு முன் பால் கொள்முதல் விலையை அதிகரிக்க  நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஜூன் 28ல் சட்டப்பேரவை தொடங்கி மானியாக்   கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகிறது.இதை தொடர்ந்து  இன்று நடைபெற்ற நீர்வளம்,பால்வளம்,  கால்நடை துறை மீதான மானிய கோரிக்கை விவாதத்தில் திமுக சார்பில் பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்கு பதிலளித்த முதலமைச்சர் பால் கொள்முதல் விலையை உயர்த்தினால், நுகர்வோருக்கும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அமமுக_வின் புதிய நிர்வாகிகள் அறிவிப்பு …..!!

அமமுக சார்பில் புதிய நிர்வாகிகள் பட்டியலை கட்சியின் பொது செயலாளர் TTV தினகரன் அறிவித்துள்ளார். மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தல் தோல்வியைடுத்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் பலர் திமுக மற்றும் அதிமுகவில் இணைந்து வருகின்றனர். குறிப்பாக அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளராக இருந்த தங்கதமிழ் செல்வன் திமுக_வின் இணைந்ததை தொடர்ந்து இசக்கி சுப்பையா அதிமுக_வில் இணைவதாக அறிவித்தார். மேலும் TTV ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களும் முதல்வரை சந்தித்து தங்களின் ஆதரவை தெரிவித்தனர். தொடர்ந்து நிர்வாகிகள் மாற்றுக் கட்சியை […]

Categories

Tech |